25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
கால்கள் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா முடியை நீக்க வேக்சிங் செய்வதே சிறந்தது

ஷேவிங் கைவிட வேக்சிங் செய்தல்தான் (மெழுகு பயன்படுத்துதல்) சிறந்த வழிமுறையாக உள்ளது. வேக்சிங் பயன்படுத்தி, முழுமையான அழகைப் பெற்று பலனடைவோம்.

முடியை நீக்க வேக்சிங் செய்வதே சிறந்தது
வேக்சிங், உடலில் தேவையற்ற முடிகளை தற்காலிகமாக நீக்கும் பிரபலமான ஒரு முறையாகும். ஷேவிங் கைவிட வேக்சிங் செய்தல்தான் (மெழுகு பயன்படுத்துதல்) சிறந்த வழிமுறையாக உள்ளது. இது பெரும்பாலானோர் நினைப்பது போல் நவீன முறை அல்ல. ஷேவிங் செய்வது போல் அல்லாமல், வேக்சிங் முறையில் முடி மீண்டும் வளர மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும்.

ஷேவிங் செய்யும் போது நீங்கள் கூர்மையான பிளேடுகள் பயன்படுத்தும் போது, உங்களுடைய உடலில் சில இடங்களில் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இதனை பயன்படுத்தும் போது முடியானது அதிக அடர்த்தியாக வளர்ந்துவிடுவதை தடுத்திட முடியாது. ஷேவிங் செய்வதால் ஏற்படும் எரிச்சல், மெழுகு வேக்சிங் செய்யும் போது வராது.

வெதுவெதுப்பான அல்லது சூடான மெழுகு பயன்படுத்தி வேக்சிங் செய்வது பொதுவான முறையாகும். இந்த முறையில் பயன்படுத்தப்படும் மெழுகில் முடிகளை இலகுவாக நீக்கக்கூடிய சர்க்கரை சேர்ந்து இருக்கும். இது குளிர் வேக்சிங்கை விட மிகவும் ஆற்றல் வாய்ந்த முறையாகும். பெரும்பாலான அழகுநிலையங்களில் செய்யப்படும் வேக்சிங்கும் இது தான்.

வேக்சிங் என்பது சூடான மெழுகை உங்களுடைய தோலின் மேல் போட்டு, அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் முடிகளை ரேப்பர்களை பயன்படுத்தி அதன் மேல் ஒட்டி, முடிக்கு நேரெதிர் திசையில் பிய்த்து எடுப்பதுதான் வேக்சிங் முறையாகும். மெழுகின் அளவை கொஞ்சம் தாரளமாய் பயன்படுத்தினால், வலியின் அளவை குறைத்திட முடியும்.

இப்போது மாய்ஸ்சுரைஸர்களை கொண்ட மெழுகுகள் விற்கப்படுகின்றன. முடியை நீக்கத் தொடங்கும் முன்னதாக இதை தடவிக் கொண்டால், அந்த பகுதிகள் மென்மையாக விடுகின்றன. எனவே, மாய்ஸ்சுரைஸர்களை மெழுகில் சேர்த்து தடவுவதன்மூலம் அந்த பகுதியிலுள்ள சருமம் மென்மையாகி விடுவதால், முடியை முழுமையாக வெளியே உருவி எடுத்துவிடமுடியும். நிரந்தமான முடி நீக்கம் செய்ய வேக்சிங் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.

Related posts

பாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்ய…..

sangika

கை,கால் முட்டிகளில் இருக்கும் கருமையை போக்குவது எப்படி?

nathan

நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!…

sangika

மொழு மொழு பாதங்களுக்கு

nathan

பாதவெடிப்பு பிரச்னைக்கான தீர்வு..முயன்று பாருங்கள்

nathan

கால்களில் உள்ள கருமையைப் போக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்.

nathan

மெத்தென்ற பாதங்கள் கிடைக்க என்ன வழி?இதோ டிப்ஸ்

nathan

கால்களையும் கொஞ்சம் கவனியுங்கள்! Tips to Care your feet

nathan

மழைக்காலத்தில் பாத பராமரிப்பு

nathan