31.5 C
Chennai
Thursday, Jul 3, 2025
அழகு குறிப்புகள்

பெண்களே உங்கள் கைகளே சொல்லும் நீங்கள் எப்படி பட்டவர்கள் என்று ?படிங்க!

பெண்களின் கைகளது அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.அந்தவகையில் உங்களுடைய கைகள் இதில் எந்த வகை?
கைகள் மிருதுவாக இருந்தால், அத்தகைய பெண்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். இலாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர்.

கைகள் வரட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியும்படியும் அமைந்திருந்தால், அவளது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகமிருக்கும். கணவனும், பிள்ளைகளுமே கூட இவர்களுக்கு விரோதியாவார்கள்.

மணிக்கட்டுகள் தெரியாமல் இருந்தால், அவர்களுக்கு ஆபரண யோகமும், தெய்வ அனுகூலமும் உண்டாகும்.உள்ளங்கைகள் சிறிது பள்ளமாக இருக்கும் பெண்கள் உத்தமிகள். உண்மையைப் பேசும் குணமுடையவர்கள். ஒழுக்கமானவர்கள்.உள்ளங்கைகள் அதிக பள்ளமாகவும், முக்கியமான ரேகைகள் மட்டுமே நன்றாகத் தெளிவாகப் பிரகாசமாக இருந்தால் எந்தக்காலத்திலும் சரீர ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

பெண்களது கைகள் முழங்கால் அளவுக்கு நீண்டு தொங்கும்படி அமைந்திருந்தால், அவர்கள் சகல சௌபாக்கியங்களுடன் இருப்பார்கள். வாழ்க்கையின் சங்கடங்கள் எதையும் சிரித்த முகத்துடன் சகித்துக் கொள்வார்கள். பாசமானவர்கள். கணவனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.

கைகளில் அடர்த்தியான ரோமங்கள் இருந்தால், அவர்கள் அளவுக்கு மீறிய காம இச்சையுடன் இருப்பார்கள். தம்மையும் மீறி ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவார்கள். குடும்ப வாழ்க்கையில் இவர்களால் நீடித்திருக்க முடியாது. கணவருக்கு உண்மையாக நடந்துகொள்ள மாட்டார்கள்.

பெண்களின் கை விரல்கள் மென்மையாகவும், ஒழுங்காகவும், அழகாகவும் இருந்தால் சகல சௌபாக்கியங்களும் அமைந்திருக்கும். இத்தகைய பெண்களுக்கு புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகமிருக்கும். கணவனை மதிப்பவர்கள். எல்லோரும் பாராட்டும் வகையில் நடந்துகொள்வார்கள். இனிமையாகப் பேசும் குணமும், எல்லோரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர்கள்.

நீண்ட கை விரல்களை உடைய பெண்கள் கலையார்வமுள்ளவர்கள். இசை ஞானம் உள்ளவர்களாகவோ, இசைக் கருவிகளை வாசிப்பதில் பெரிதும் வல்லவர்களாகவோ இருப்பார்கள். சிலர் நாட்டியத்திலும், சிலர் நடிப்பிலும் சிறந்து விளங்குவார்கள்.

கை விரல்கள் பருமனாகவும், முரடாகவும் அமையப் பெற்ற பெண்கள், உழைத்து சம்பாதித்து வாழ்பவர்களாக இருப்பார்கள். பொறாமைக் குணமுடையவர்களாகவும், கலகம் செய்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்குப் புத்திர பாக்கியம் அமைவது அரிது.

கை விரல்கள் நெருக்கமாக சேர்ந்திருந்தால், கஞ்சத்தனம் மிக்கவர்களாகவும், பணம் சேர்ப்பதிலேயே எப்போதும் குறியாகவும் இருப்பார்கள்.விரல்கள் அதிகப் பருமனாக இருந்தால் கணவனுக்குக் கண்டம் உண்டாகும்.கைவிரல் நகங்கள் சொத்தையாகவும், கறுப்பாகவும் இருந்தால் ஆயுட்காலம் முழுவதும் கஷ்டமும், வறுமையும், பலரின் பழிப்பும் உண்டாகும்.

விரல் நகங்கள் சிவந்து, பளபளப்பாக, அழகாகக் காணப்பட்டால் அப்பெண்கள் ஆரோக்கியமானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.பெண்களது கைகள் சமமாக இருந்தால், அவர்களுக்கு எல்லா சௌபாக்கியங்களும் கிட்டும். குடும்பத்தை நன்றாக நிர்வகிப்பார்கள். பெரியவர்களிடம் மரியாதை மிக்கவர்கள்.

Related posts

அழகுக்காக பயன்படுத்தும் கஸ்தூரி மஞ்சளில், இவ்வளவு மருத்துவ குணங்களா? படியுங்க..

nathan

சரும நிறத்தில் மாற்றம் ஏற்படாமல் பாதுகாக்க…

sangika

இந்த ராசிக்காரங்க வாழ்க்கை முழுக்க தோல்வி துரத்துமாம்…

nathan

மிருதுவான சருமத்திற்கு

nathan

கூலிப்படையால் நடந்த கொலை.. அதிர்ச்சிப் பின்னணி!!பேஸ்புக்கில் வந்த முன்னாள் காதலி…

nathan

தன் கண்ணையே பிடுங்கி எறிந்த முதியவர் -அதிர்ச்சி சம்பவம்

nathan

முகம் மற்றும் கை,கால்களில் ஏற்படும் கருமை அப்படியே திட்டுகளாக படிந்துவிடும்.

nathan

இவ்வாறான காரணங்களினால் தான் முகம் முதுமைத் தோற்றத்தை அடைகின்றது!…

nathan

முகம் முழுக்க ஒரே நிறமா இல்லாம சில இடத்துல வெள்ளையும், சில இடத்துல கருப்பும் இருக்கே என்ன செய்றது…

nathan