உங்கள் நகையைப் பற்றி யாரும் கேள்வி கேட்காத காலங்கள் மலையேறிவிட்டது. இன்று தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் தான் எத்தனை எத்தனை ரகங்கள்? இவை இல்லாமல் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிறைவடையாது என்ற அளவிற்கு இன்று இவை முக்கியத்துவம் பெற்றுவிட்டன. நம் உடலுக்கு எவ்வாறு பராமரிப்பும் கவனிப்பும் அவசியமோ அதை போலவே தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கும் கொஞ்சம் பராமரிப்பு அவசியம்
அதிக மாசு மற்றும் அழுக்கு காரணமாக உங்கள் தங்க வெள்ளி நகைகள் வெகு விரைவில் அழுக்காகிவிடுகின்றன. தூசு இல்லையென்றாலும் நகையை நெடுநாளாக பயன்படுத்துவதால் அது பொலிவை இழக்கும். அதன் பொலிவையும் பளபளப்பையும் திரும்பப் பெற இதோ சில எளிய வழிகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம்:
1. பாத்திரம் துலக்கும் பவுடர் அல்லது திரவம் (லிக்விட்) எல்லார் வீட்டிலும் பாத்திரம் துலக்க தவறாமல் பயன்படும் இது கண்டிப்பாக வீட்டிலேயே உள்ள ஒரு பொருள். இதில் காணப்படும் சக்திவாய்ந்த உட்பொருட்கள் தங்கத்தை சுத்தம் செய்யக்கூடியவை. இதை ஒரு சிறிய கிண்ணத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து அந்த கலவையில் உங்கள் தங்க நகையை முக்கி சிறிது நேரம் வைக்கவும். பின்னர் ஒரு டூத் பிரஷை மொண்டு முனைகளை நன்கு அழுக்கு வெளியேறும்படி தேய்க்கவும். பின் நகையை மீண்டும் நல்ல நீரில் அலசி தூய்மையான மென்மையான துணி கொண்டு துடைக்கவும். இது தங்கத்தை சுத்தம் செய்ய உகந்த செலவில்லாத ஆனாலும் நல்ல பலன் தரக்கூடிய ஒரு செய்முறை.
2. டூத் பேஸ்ட் டூத் பேஸ்டை நகைகள் சுத்தம் செய்யப் பயன்படுத்துவது ஒரு சிரமமில்லாத செலவற்ற வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு வழிமுறை. சிறிதளவு டூத்பேஸ்ட்டை எடுத்து நகையின் மீது தடவி ஒரு பழைய டூத் பிரஷ் கொண்டு மூளை முடுக்குகளில் நன்கு தேய்க்கவும். ஒரு மென்மையான டூத் பேஸ்டை பயன்படுத்துவதால் அது அழுக்கை போக்குவதோடு நகை தன் பளபளப்பை இழக்காமல் வைக்கும்;. பின்னர் அதை வெதுவெதுப்பான தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வைத்து எடுத்து மென்மையான துணிகொண்டு துடைத்து உலரவைக்கவும்.
3. அம்மோனியா அம்மோனியா பவுடர் சிறிதளவு எடுத்துக்கொண்டு அதை வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். உங்கள் நகையை இந்த கலவையில் இரு நிடங்கள் மட்டும் முக்கி உடனே எடுத்து பிரஷ் கொண்டு இண்டு இடுக்குகளை தேய்த்து சுத்தமான நீரில் அலசவும். அம்மோனியா தங்க நகைகளை எளிதில் சுத்தம் செய்ய உதவும் என்றாலும் நகையில் எந்த வித முது அல்லது ரத்தினங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்வது அவசியம்.
4. உப்புநீர் குளியல் உங்கள் வெள்ளி நகைகளை உப்புநீரால் அலசுவது மிகவும் உகந்தது. சிறிதளவு வெந்நீரை எடுத்து அதில் உப்பு சேர்த்து கலந்து அதில் உங்கள் வெள்ளிப் பொருட்கள் மற்றும் நகைகளை மூழ்கச் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து எடுத்து பிரஷ் கொண்டு நகைகளின் முனைகள் மற்றும் இடுக்குகளில் நன்கு தேய்த்து தண்ணீர் கொண்டு மீண்டும் அலசவும். இது ஒரு செலவில்லாத, உடனடியாக மற்றும் மென்மையாகச் செய்யக்கூடிய வெள்ளி சுத்தம் செய்யும் வழிமுறையாகும்.
5. வெள்ளி பாலிஷ் வெள்ளி நகைகளை சுத்தம் செய்வதில் தற்போது இந்த பாலிஷ் முறை பிரபலமாக உள்ளது. வெள்ளி நகைகளை சுத்தம் செய்யும் இந்த சில்வர் பாலிஷ் கடைகளில் எளிதில் கிடைக்கிறது. இது மிகக் கடுமையான கறைகளை கூட நீக்க உதவுகிறது. மேலும் அழுக்கை எளிதில் போக்குகிறது. சிறிதளவு பாலிஷ் எடுத்து நகையின் மீது தேய்க்கவும். பின்னர் துணியைக் கொண்டு துடைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். அழுத்தம் கொடுப்பது பொலிவை பாதிக்கும் என்பதால் பாலிஷ் தேய்ப்பதில் கடினம் காட்டவேண்டாம். 6. அலுமினியம் பாயில் ஒரு கிண்ணத்தில் அலுமினியம் பிஆயிலை பரப்பி வைக்கவும். அதில் வெள்ளி நகைகளை போட்டு அதன் மீது சிறிதளவு சமையல் சோடாவைத் தெளிக்கவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்து நகைகள் மீது ஊற்றவும். சூடான தண்ணீரானது நகையில் உள்ள அழுக்கை அலுமினியம் பாயிலில் பிரித்தெடுக்கும். இதை பலமுறை செய்வதால் உங்கள் நகைகள் பளபளப்புடன் இருக்கும். இந்த வழியெல்லாம் ரொம்பவே ஈஸியானது தானே.. வீட்டில் ட்ரை பண்ணி பார்ப்பீங்களா?