27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
hk
சரும பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ் கழுத்தைச் சுற்றி கொஞ்சம் புளி தடவினா காணாமல் போகும் கருமையான படலம்..!!

புளி சருமத்திற்கு ஊட்டம் அளித்து, முதுமைத் தோற்றம் வருவதைத் தடுக்கும்.
புளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து, அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டம் அளித்து, முதுமைத் தோற்றம் வருவதைத் தடுக்கும். புளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதற்கு புளியில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம். இப்போது புளியைக் கொண்டு எப்படி சருமம் மற்றும் தலைமுடியினைப் பராமரிப்பது என்று பார்க்கலாம்.

புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரித்திருப்பதை நீங்கள் காணலாம்.

புளியில் ஆல்பா-ஹைட்ராக்ஸில்-ஆசிட் உள்ளது. இது சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளையெல்லாம் நீக்கும். எனவே புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையகா மசாஜ் செய்து, 5 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீக்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாக மாறும்.

புளிச்சாற்றில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து , கழுத்தை பின் கழுவினால், முகச்சருமத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

உங்களுக்கு முடி அதிகம் உதிர்கிறத?
அப்படியெனில் முடியின் மயிர்கால்களை வலிமையாக்க புளிச்சாற்றினைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியை தலையில் 15 நிமிடம் கட்டி, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

பலருக்கும் கழுத்தைச் சுற்றி கருமையான படலம் ஒன்று இருக்கும். இதனை நீக்க புளிச்சாற்றில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3-4 முறை செய்து வந்தால், கருமையை விரைவில் போக்கலாம்.hk

Related posts

ஒரே வாரத்தில் தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற ஓர் அற்புத வழி!

nathan

உங்களது சருமம் ஜொலிக்க வேண்டுமெனில்!..இதோ சில வழிகள்!

sangika

அழகுக்கலை வல்லுனர்களால் மட்டுமே சில விஷயங்களை சிறப்பாக செய்ய முடியும்

nathan

கேரள பெண்களின் அழகின் ரகசியம்

nathan

அழகை கெடுக்கும் தோல் சுருக்கம்

nathan

சருமத்திற்கு சன் ஸ்க்ரீன் அவசியமா?

nathan

அழகுக் குறிப்புகள்

nathan

உங்கள் பிட்டம் பிரகாசமாகவும் வசீகரமானதாகவும் இருக்க சூப்பர் டிப்ஸ்

nathan

இதெல்லாம் செய்தால்…. அழகு வரும்… அவர் சொல்வது சரிதானே!

sangika