வறண்ட சரும் முகப்பொலிவு இழந்து காணப்டுவதோடு முதிர்ச்சியான வயதான தோற்றதை போல் காட்சியளிக்கும். பலருக்கும் எண்ணை சருமத்திற்கு மட்டும் தெரிந்திருக்கும். அவர்களுக்கான வறட்ச சருமத்தை போக்கலாம்.
காபி கொட்டை
காபி கொட்டை சருமப் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. காபி கொட்டைகளை அரைத்து கொள்ளவும். அரைத்த தூளுடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அதனை சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்து தண்ணீர் கொண்டு சருமத்தை கழுவ வேண்டும். இப்படி செய்யதால் இழந்த பொலிவு மீண்டும் கிடைக்கும்.
சர்க்கரை
சருமத்திற்கு சர்க்கரை எப்பொழுத்தும் சிறந்ததாகவே உள்ளது.
க்ளென்சிங் க்ரீமுடன் நன்றாக அரைத்த சர்க்கரையை சேர்த்து சருமத்தில் மாசாஜ் செய்வது போல் தடவி வெதுவெதுப்பான நீரினால் துடைக்கவேண்டும் பிறகு மாற்றத்து நீங்கள் உணர்வீர்கள்.
க்ரீன் டீ
க்ரீன் டீயை கொதிக்க வைக்கவும். அதில் 1 ஸ்பூன் டீயை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றவும். ஆறியவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.
பிறகு தேனயும் சேர்க்கவும். சில நிமிடங்கள் நன்றாக முகத்தை தேய்க்கவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய்
½ கப் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சருமத்தை நன்றாக கழுவி, காய்ந்தவுடன் இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவவும். நன்றாக தேய்த்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.