25 C
Chennai
Wednesday, Dec 25, 2024
whiten skin 1517225321
முகப் பராமரிப்பு

இத ஒருமுறை யூஸ் பண்ணுனா.. முகத்தில் உள்ள கருமை மாயமாய் மறையும் தெரியுமா! அப்ப இத படிங்க!

உங்கள் முகத்தில் அழகைக் கெடுக்கும் வகையில் கருமைப் படலம் உள்ளதா? அப்படி எப்படி போக்குவது என்று தெரியவில்லையா? அப்படியானால், இன்று தமிழ் போல்ட்ஸ்கை முகத்தில் உள்ள கருமைப் படலத்தை எப்படி வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே போக்குவது என விரிவாக கொடுத்துள்ளது. அதில் முகத்தில் இருக்கும் கருமைப் படலத்தை சந்தனம் போக்கும். பழங்காலம் முதலாக சிறந்த அழகு பராமரிப்பு பொருளாக பயன்படுத்தப்பட்டு வருவது தான் சந்தனம். இந்த சந்தனம் ஒருவரது சரும பிரச்சனைகளைப் போக்குவதோடு, சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். சந்தனத்தில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளுடன், ப்ளீச்சிங் பொருட்களும் அடங்கியுள்ளது. எனவே தான் இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதில் சிறந்ததாக கருதப்படுகிறது.

சந்தனம் சரும கருமையை மட்டுமின்றி, முகத்தில் உள்ள பருக்களையும் வடுக்களின்றி மறையச் செய்யும். இந்த சந்தனத்தைக் கொண்டு பலவாறு மாஸ்க்குகளை வீட்டிலேயே தயாரிக்கலாம். இக்கட்டுரையில் அவற்றில் சில பிரபலமான மற்றும் எளிதில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே செய்யக்கூடியவாறான ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஃபேஸ் பேக்குகளை ஒருவர் வாரத்திற்கு ஒருமுறை தவறாமல் மேற்கொண்ட வந்தால், சரும கருமை மட்டுமின்றி, சரும பிரச்சனைகள் அனைத்தில் இருந்தும் விடுதலை கிடைக்கும். சரி, இப்போது அந்த சந்தன ஃபேஸ் பேக்குகளை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

சந்தன பவுடர் மற்றும் பால் * ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சந்தனப் பவுடர் மற்றும் 1 1/2 டீஸ்பூன் பச்சை பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் அதனை ஸ்பூன் பயன்படுத்தி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின்பு தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். * இறுதியில் ஈரமான துணியால் முகத்தைத் துடைத்து எடுத்து, அதைத் தொடர்ந்து மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

சந்தனப் பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் * ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் சந்தனப் பவுடர் மற்றும் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் தயாரித்து வைத்துள்ள கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10-15 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும். * பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் முகக் கருமை நீங்கி, சரும நிறம் மேம்பட்டுக் காணப்படும்.

சந்தனப் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு * ஒரு பௌலில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1/2 டீஸ்பூன் சந்தனப் பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். * பின் இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். * இறுதியில் நீரால் முகத்தைக் கழுவி, அதைத் தொடர்ந்து லைட் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

சந்தன பவுடர் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் * வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் இருந்து எண்ணெயை தனியாக ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளுங்கள். * பின் அதில் 1/2 டீஸ்பூன் சந்தன பவுடர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். * பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின்னர், முத்தைக் கழுவ வேண்டும். * இதனால் சரும செல்கள் புத்துணர்ச்சி பெற்று, முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் காணப்படும்.

சந்தன பவுடர், ஆலிவ் ஆயில் மற்றும் வெள்ளரிக்காய் * ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் சந்தன பவுடர், 1 டீஸ்பூன் வெள்ளரிக்கா சாறு அல்லது பேஸ்ட் மற்றும் 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் இந்த கலவையை முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். * பின் சாதாரண நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

சந்தன பவுடர் மற்றும் பாதாம் எண்ணெய் * ஒரு சிறிய பௌலில் 1/2 டீஸ்பூன் சந்தன பவுடர், 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் இதனை நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள் வேண்டும். * பின்பு இந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும். * இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இச்செயலால் முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.

சந்தன பவுடர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் * ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் சந்தன பவுடர், 1 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் இந்த இரண்டையும் நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். * பின்பு இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். * இறுதியில் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை மேற்கொள்ள, கருமை நீங்கி முகம் பிரகாசமாக காணப்படும்.

சந்தன பவுடர் மற்றும் கற்றாழை ஜெல் * ஒரு சிறிய பௌலில் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் அத்துடன் 1 டீஸ்பூன் சந்தன பவுடர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின்பு அதனை முகத்தில் தடவி, நன்கு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். * இந்த மாஸ்க்கை ஒருவர் வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த, வெள்ளையாகிவிடலாம்.

சந்தன பவுடர் மற்றும் தக்காளி சாறு * ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் சந்தன பவுடருடன், 1/2 டீஸ்பூன் தக்காளி சாறு, 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடி மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். * இறுதியில் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, அதிகப்படியான எண்ணெய் பசையும் நீங்கும்.

சந்தன பவுடர் மற்றும் தேன் * ஒரு பௌலில் 3/4 டீஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் அதில் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின்பு இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, நீரால் கழுவ வேண்டும்.

whiten skin 1517225321

Related posts

கண்ணிமை அடர்த்தி பெற வீட்டிலேயே சுலபமாக மஸ்காரா தயாரிப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தோல் சுருக்கங்களை இயற்கையான முறையில் நீங்கணுமா?இதோ ஈஸியான டிப்ஸ்.

nathan

ஹீரோயின் மாதிரி அழகாக ஜொலிக்கணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பருவால் உண்டான வடு மறைய ஃபேஸ் பேக்

nathan

ஏன் ப்ரைமர் உபயோகப்படுத்தாமல் ஒப்பனை செய்யக்கூடாது என்பதற்கான காரணங்கள்….

nathan

முகத்தில் சொரசொரவென்று அசிங்கமாக இருக்கும் கரும்புள்ளிகளைப் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…’அழகு’ நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!

nathan

பெண்களே மேக்கப் இல்லாமல் இயற்கையாகவே அழகாக தெரியணுமா? இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

உங்கள் கண்கள் அனைவரையும் கவர வேண்டுமா..? இதை செய்யுங்கள்..!

nathan