26.3 C
Chennai
Tuesday, Dec 24, 2024
DIY Watermelon and Papaya Exfoliating Face Pack for Youthful Skin5
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

இந்த பேக்கை முகத்தில் போடும்போது முகத்துக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.

கிரேப்ஸ் ஃபேஸ்பேக்

கருப்பு திராட்சையை(விதை உள்ளது) விதையோடு ஈரம் போக நன்றாக துடைத்துவிட்டு ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்து, அந்த விழுதுடன் 1/4 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு 2 நாட்கள் அப்படியே வைத்துவிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. 2 நாட்கள் கழித்து பார்த்தால் மேலாக வெள்ளை நிறத்தில் ஏடுபோல் படிந்து இருக்கும்.DIY Watermelon and Papaya Exfoliating Face Pack for Youthful Skin5

இதுதான் அல்ட்ரா ஹைட்ராசில் ஆசிட். இது தோலில் ஏற்படும் கருமையை உடனடினியாக குறைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. 2 நாட்களுக்கு ஒருமுறை கண்களைச் சுற்றி, முகம், கழுத்து, கை, கால்களில் போடும்போது தோலில் ஏற்படும் சுருக்கம், கருமையை நீக்கிவிடும். வெயில் காலத்தில் கண்களில் ஏற்படும் சோர்வையும் போக்கிவிடும்.

வாட்டர் மெலான் ஃபேஸ்பேக்

தர்பூசணியின் சதைப்பகுதி மற்றும் விதைகள் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து அதோடு 1/2 டீஸ்பூன் அரிசிமாவு, 1/4 டீஸ்பூன் கடலைமாவு, 1/4 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் கை கால்களில் பேக் மாதிரி போட்டுக் கொள்ள வேண்டும். 1/2  மணிநேரம் கழித்து முகத்தைக்கழுவலாம்.


பைனாப்பிள் ஃபேஸ்பேக்

நன்றாக பழுத்த பைனாப்பிளின் மேல்தோலை நீக்கிவிட்டு சதைப்பகுதியை அரைத்து ஒரு மெல்லிய துணியால் வடிகட்டி சாறினை எடுத்துக் கொள்ள வேண்டும். இதோடு வெள்ளை சோளமாவு 1 டீஸ்பூன், தயிர் 1/2 டீஸ்பூன், லெமன் ஆயில் 5 சொட்டுகள் கலந்து 3 மணிநேரம் அப்படியே வைத்துவிட வேண்டும். பைனாப்பிள் ஜூஸில் இருக்கும் என்சைம் மற்றும் சோளமாவு கலந்த இந்த பேக்கை முகத்தில் போடும்போது முகத்துக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.

மேற்சொன்ன எல்லா ஃபேஸ்பேக்குகளையுமே தயாரித்து 10 நாள்வரை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு உபயோகிக்கலாம். இது எல்லாவற்றையுமே முகத்தில் தடவி 1/2 மணிநேரம் கழித்து முதலில் சற்று சூடான நீரிலும், பின்னர் குளிர்ந்த நீரிலும் கழுவ வேண்டும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! இரவு படுக்கச் செல்லும் முன்பாக இந்த அழகு குறிப்புகளை பயன்படுத்தி பாருங்க….!

nathan

ஈடில்லா அழகை தரும் இந்த குறிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :

nathan

பாதங்கள் மிருதுவாகவும், வெடிப்புகள் மறையவும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாருங்களேன்

nathan

ஜொலிக்கும் சருமத்தி‌ற்கான‌ ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்

nathan

பெண்களே 30 வயசுக்கு முன்னாடி இதெல்லாம் செஞ்சுருங்க!

nathan

ஜொலிக்கும் அழகிற்கு வீட்டில் நீங்களே செய்யும் பேரிச்சம்பழ ஃபேஸ் மாஸ்க்

nathan

நடிகை கஜோலுக்கு இவ்வளவு பெரிய மகளா..

nathan

முயன்று பாருங்கள்..முழங்கை, முழங்கால்களில் கருமை நீங்க..

nathan

பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும் சக்தி வாய்ந்த பொருட்கள்

nathan