26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
cover 03 1514978379
முகப் பராமரிப்பு

சீக்கிரமா கலர் ஆக நீங்க க்ரீம் யூஸ் செய்பவரா? உஷார்!

நம்மில் பெரும்பாலோனர் அழகிற்காக கண்ட கண்ட க்ரீம்களை பயன்படுத்தி வருகிறோம்… அமெரிக்கர்கள் வெள்ளையான சரும நிறமும், இந்தியர்கள் மாநிறமான சருமத்தையும், ஆப்ரிக்கர்கள் கருப்பான சருமத்தையும் பெற்றிருப்பது இயல்பான ஒரு விஷயம் தான்.. ஆனால் நமது நிறம் ஒரு குறை என்று சுட்டிக்காட்டி பல வணிக நிறுவனங்கள் தங்களது தொழிலை செழிப்படைய செய்கின்றன… நீங்களே சில விளம்பரங்கள் நம்மை கவரும் விதமாக இந்த க்ரீமை 4 வாரங்கள் பயன்படுத்தினால், மனதை மயக்கும் சிகப்பழகை பெறலாம் என்று நம்மை மயங்க செய்கின்றன.. ஆனால் இது எல்லாம் உண்மை தானா? நீங்களே இது போன்ற க்ரீம்களை பயன்படுத்தியிருந்தால் உங்களுக்கே உண்மை என்னவென்று தெரிந்திருக்கும்… இந்த பகுதியில் அழகு க்ரீம்களை பயன்படுத்தி சிகப்பழகை பெற முடியுமா என்பது பற்றி காணலாம்.

சிகப்பழகு சருமம் நீங்கள் உங்களது அன்றாட வாழ்க்கையிலேயே ஒரு சிலரை சந்தித்திருக்கலாம்.. கருப்பாக இருந்த ஒரு சிலர் நம்ப முடியாத அளவிற்கு நல்ல கலராக மாறியிருப்பார்கள்.. இவர்களை பார்ந்தால், நாமும் ஏன் இது போன்ற க்ரீம்களை பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் உங்களது மனதில் உதிக்கும்… ஆனால் இவ்வளவு சீக்கிரமாக ஒருவரை கலராக மாற்றும் இந்த க்ரீமில் எந்த அளவிற்கு ஆபத்துக்கள் இருக்கும் என்று என்றாவது நினைத்து பார்த்து இருக்கிறீர்களா?

சரும நிறத்தை அதிகரிக்க முடியுமா? சரும மருத்துவர்களின் கருத்துக்களின் படி உங்களது இயற்கையான நிறத்திலிருந்து 20% அளவு மட்டும் உங்களது நிறத்தை மேம்படுத்த முடியும் என்கிறார்கள்.

நிறத்தை பாதுகாப்பாது எப்படி? உங்களது சரும நிறத்தை அதிகரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.. உங்களது சருமத்தை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டாலே நீங்கள் அழகாக தான் இருப்பீர்கள்.. சூரியனிடம் இருந்து வரும் கதிர்கள் உங்களை பாதிக்காமலும், முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி வந்தாலுமே உங்களது சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

மருத்துவர் பரிந்துரை உங்களது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலர் ஏதோ க்ரீமை போட்டு தன் நிறத்தை மேம்படுத்திக் கொண்டார்கள் என்பதற்காக நீங்களும் அதே க்ரீமை வாங்கி பயன்படுத்தலாம் என்று பயன்படுத்தாதீர்கள்… மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் தான் இது போன்ற ஃபேர்நஸ் க்ரீம்களை வாங்க வேண்டும்.

உஷார்! மூன்றே வாரத்தில் சிகப்பழகை பெறலாம்.. நாங்கே வாரத்தில் சிகப்பழகை பெறலாம் என்று, கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி உங்களது சரும ஆரோக்கியம் மட்டுமல்லாமல் உங்களது உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடாதீர்கள்… உண்மையில் இது போன்ற க்ரீம்களை முகத்தை சிகப்பழகாக்கும் மூலப்பொருட்கள் மிக குறைந்த அளவு மட்டுமே இருக்கும். மேலும் இதில் தீங்கு விளைவிக்க கூடிய மெர்குரி, ஸ்டேராய்டுகள், பாரபென்ஸ், பிரிசர்வெட்டிவ்ஸ் மற்றும் வாசனை பொருட்கள் அடங்கியுள்ளன. இதனை நீண்ட நாட்கள் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்க கூடியதாகும்.

எந்த க்ரீம் பயன்படுத்தலாம் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் நீங்கள், Hydroquinone , கோசிக் ஆசிட் (Kojic Acid) அர்புடின் (Arbutin) விட்டமின் சி Vitamin C அல்லது Ascorbic Acid உள்ள க்ரீம்களை வாங்கி பயன்படுத்தலாம். இயற்கை முறையில் சிகப்பழகு பெறுவது என்பது எப்பொழுதுமே சிறந்த ஒன்றாகும். தொடந்து இயற்கையான முறையில் சிகப்பழகு பெறுவது எப்படி என்பது பற்றி காணலாம்.

அதிமதுரம் அதிமதுரம் உங்களது சருமத்திற்கு இயற்கையாகவே நிறமூட்ட கூடியது. இந்த அதிமதுரத்தை பாலில் கலந்து முகத்திற்கு தினசரி பேக் போடுவதினால் உங்களது சருமம் நல்ல ஆரோக்கியத்துடனும், பிரகாசமாகவும் இருக்கும். இந்த அதிமதுரம் சூரிய கதிர்களால் உங்களது சருமத்தில் உண்டான பாதிப்புகளில் இருந்து உங்களுக்கு விடுதலை தரும்.

பால் மற்றும் தேன் பால் மற்றும் தேன் இரண்டையும் கலந்து உங்களது முகத்திற்கு தினசரி மசாஜ் செய்தும் பேக் போட்டும் வந்தால், நாளடைவில் உங்களது முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை காணலாம். இது சருமத்தை பட்டு போல மாற்றி, சரும பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாத்து நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.

கற்றாழை மற்றும் மஞ்சள் கற்றாழை மற்றும் மஞ்சள் இந்த இரண்டுமே சரும பிரச்சனைகளுக்கு எதிரானவை.. இந்த கற்றாழை மற்றும் மஞ்சளை கொண்டு உங்களது சருமத்திற்கு மசாஜ் செய்து வந்தீர்கள் என்றால் உங்களது சருமத்தின் நிறம் மேம்படும்.

குங்குமாதி தைலம் ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும் குங்குமாதி தைலம் முகத்திற்கு மிகவும் நல்லது. இந்த குங்குமாதி தைலத்தை பாலுடன் கலந்து முகத்திற்கு பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் சந்தனம் மற்றும் பால் கலந்து மாஸ்க் போட வேண்டும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

உணவுகள் சரும நிறத்தை மேம்படுத்த சத்தான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியதும் மிகவும் அவசியமாகும். காய்கறிகள், பழங்கள், ஜூஸ் வகைகளை அன்றாட உணவில் கட்டாயமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகளில் பொன்னாங்கன்னி கீரை வசீகரிக்கும் சருமத்தை தருவதில் வல்லது. எனவே இந்த கீரையை சாப்பிடலாம்.

தக்காளி தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 – 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம். இதனால் சருமத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

புதினா புதினா வாசனையான ஒன்று இது முக அழகை பராமரிக்க உதவுகிறது. புதினாவை நன்றாக அரைத்து பேஸ்ட் எடுத்து, அந்த புதினா பேஸ்ட்டில் இரண்டு சில துளிகள் எலுமிச்சை சாறை கலந்து முகத்திற்கு பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளிச்சிடும் அழகு பெரும்.

முட்டை முட்டையின் வெள்ளைக்கருவை வாரத்தில் ஒரு முறை முகத்திற்கு தடவி வந்தால் முகத்தின் வசீகரம் அதிகரிக்கும். முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகளை அகற்றவும் இந்த முட்டை பயன்படுகிறது.. முட்டையின் வெள்ளைகருவை தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, அதனை முகத்தில் தடவ வேண்டும். தடவிய பின்னர் ஒரு டிஸ்யூ பெப்பரால் உங்களது முகத்தை கவர் செய்து கொள்ள வேண்டும். டிஸ்யூ பெப்பரின் மேல் பகுதியிலும் இந்த வெள்ளை கருவை சிறிது தடவிக் கொள்ள வேண்டும். இது நன்றாக காய்ந்த உடன் இதனை உரித்து எடுக்க வேண்டும்.

cover 03 1514978379

Related posts

நீங்கள் எப்போதும் அழகாய் இருக்க இந்த மார்னிங்க் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

nathan

முகத்தை வெள்ளையாக்க விரும்புவோர் செய்யும் தவறுகள்.!

nathan

காலையில வெள்ளையா தெரிவீங்க… நைட் தூங்கும் முன் இந்த மாஸ்க்கை போடுங்க..

nathan

உங்களுக்கான தீர்வு! இளமையான முகத்திற்கு காபி பவுடர் பேஸ் பேக்

nathan

சோப்புகளின்றி முகத்தை எப்படியெல்லாம் சுத்தம் செய்யலாம் எனத் தெரியுமா?

nathan

சிவப்பழகு ஸ்க்ரப் -தெரிந்துகொள்வோமா?

nathan

முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு

nathan

உங்க சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க இந்த விஷயங்கள மறக்காம செய்யணுமாம்…

nathan

முக அழகில் முதன்மையானது புருவ அழகு

nathan