29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
01 1514804442 3 fruitfacecvr 1
முகப் பராமரிப்பு

நைட் தூங்கும் போது இப்படி ஃபுரூட் ஃபேஷியல் போடுங்க.. சூப்பர் டிப்ஸ்…

நமது சருமம் அன்றாடம் பல விஷயங்களால் பெரும் பாதிப்பிற்குள்ளாகிறது. அதில் கெமிக்கல் கலந்த காற்று, தூசிகள் மற்றும் சூரியக்கதிர்கள் போன்றவை சருமத்தில் தொடர்ச்சியாக படும்போது, சருமம் தன் பொலிவை இழந்து காணப்படுவதோடு, ஆரோக்கியத்தை இழந்தும் காட்சியளிக்கும்.

சரும பொலிவை அதிகரிக்க நினைக்கும் போது முதலில் நினைவிற்கு வருவது ஃபேஷியல் தான். இந்த ஃபேஷியலை பழங்கள் அல்லது பொருட்களைக் கொண்டும் மேற்கொள்ளலாம். ஆனால் நமக்கு தான் அழகு நிலையங்களுக்குச் சென்று 2 மணிநேரம் செலவழித்து ஃபேஷியல் செய்ய நேரமில்லை.

ஆனால் வீட்டிலேயே இரவில் படுக்கும் முன் சில பழங்களைக் கொண்டு ஃபேஷியல் செய்யலாம். ஆனால் ஃபேஷியலை மேற்கொள்ளும் முன் சில விஷயங்களை மனதில் கொண்டு பின்பற்ற வேண்டும். இக்கட்டுரையில் ஃபுரூட் ஃபேஷியல் மேற்கொள்ளும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்னவென்று காண்போம்.

#1 ஃபேஷியல் மேற்கொள்ளும் போது, சருமம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அதற்கு கிளன்சிங் மற்றும் ஸ்கரப்பிங் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, இரத்த ஓட்டம் அதிகரித்து, சரும பொலிவு அதிகரிக்கும்

#2 ஃபேஷியல் போட பயன்படுத்தும் பழங்கள் நன்கு கனிந்து இருப்பதோடு, நன்கு அரைத்தும் கொள்ள வேண்டும். இதனால் ஃபேஷியல் போடுவதற்கு தேவையான கூழ் கிடைக்கும்.

#3 முக்கியமாக ஃபேஷியல் போடும் போது மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் ஃபேஷியல் போட்டும் போது, நீண்ட நேரம் அமர்ந்திருக்க வேண்டியிருக்கும். இது அந்த பேக் காய்ந்து போவதற்கு மட்டுமின்றி, மனதை அமைதியாக வைத்திருந்தால் தான் முகம் பொலிவாகும்.

#4 பழங்களைக் கொண்டு ஃபேஷியல் போடும் போது, பழைய துணிகளை உடுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், புது துணியில் கறைப் படிந்துவிடும்.

#5 சில பழங்கள் மிகவும் நீர்மமாக இருக்கும். இம்மாதிரியான பழங்கள் சருமத்தில் தங்காது. ஆகவே இந்த பழங்களின் அடர்த்தியை அதிகரிக்க, அத்துடன் சிறிது ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் அந்த பேக் சருமத்தில் தங்குவதோடு, கூடுதலான நன்மைகளும் கிடைக்கும்.

#6 முகத்திற்கு எப்போது ஃபேஷியல் செய்யும் போதும், மறக்காமல் கழுத்திற்கும் செய்ய வேண்டும். ஏனெனில் முகம் மட்டுமின்றி கழுத்தும் தான் வெயில் மற்றும் தூசிகளின் தாக்கத்திற்கு உட்படுகிறது.

#7 பழங்களைக் கொண்டு ஃபேஷியல் போடும் போது, அத்துடன் ஒருசில பொருட்களையும் சேர்த்துக் கொண்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். கீழே அந்த பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தேன் ஃபேஷியல் செய்யும் போது, அத்துடன் தேனை சேர்த்துக் கொள்வதால், சரும வறட்சி தடுக்கப்படுவதோடு, பருக்கள் வராமலும் இருக்கும்.

எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றினை ஃபேஷியல் கலவையுடன் சேர்த்துக் கொள்ளும் போது, சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, பருக்கள் போவதோடு, சரும நிறமும் மேம்பட்டுக் காணப்படும்.

தயிர் பழங்களைக் கொண்டு ஃபேஷியல் போடும் போது, அதோடு தயிர் சேர்த்துக் கொள்வதால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதுடன், வெயிலால் சருமம் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் மற்றும் வெயிலால் கருத்துப் போன சருமம் வெண்மையாகும். அதோடு, சருமம் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.

பால் பால் ஒரு நல்ல கிளின்சிங் மற்றும் மாய்ஸ்சுரைசிங் ஏஜென்ட். இது சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மேம்படுத்துவதோடு, சரும நிறத்தையும் அதிகரிக்கும்.

க்ரீன் டீ முகத்தில் பழங்களால் ஃபேஷியல் போடுபவர்கள், அத்துடன் க்ரீன் டீ சேர்த்துக் கொள்வதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாதிப்படைந்த சரும செல்களுக்கு புத்துயிர் வழங்கி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காட்டும்.01 1514804442 3 fruitfacecvr

Related posts

முகத்தில் இருக்கும் கருமை மற்றும் சுருக்கங்களைப் போக்க உதவும் ஓர் அற்புத மாஸ்க்…

nathan

தினமும் சிவப்பு சந்தனத்தை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

லிப்ஸ்டிக் போடும் பெண்களே! இதை படிச்சிங்கன்னா லிப்ஸ்டிக்கை தொட மாட்டீர்கள் இத படிங்க!

nathan

உங்க முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

பார்ட்டிக்கான ஷாம்பெயின் ஃபேஷியல்

nathan

ஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு சில குறிப்புகள்

nathan

இதோ சூப்பரான டிப்ஸ்! முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எளியமுறையில் நீக்கனுமா?

nathan

நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இமீடியட் சிகப்பழகு பெற முடியும்.

nathan

மென்மையான சருமத்திற்கான பிரத்யேக கவனிப்புகள்…

sangika