23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cover 03 1514975068
முகப் பராமரிப்பு

உங்களுக்கு சரும பிரச்சினைகளே இல்லாத முகம் வேண்டுமா?அப்ப இத படிங்க!

ஓட்ஸ் என்பது நிறைய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு புதையல் என்றே கூறலாம். ஏனெனில் உங்கள் சருமத்திற்கு நீங்கள் எதிர்பாராத நன்மைகளை அள்ளிக் கொடுப்பதில் இதற்கு நிகர் எதுவும் கிடையாது.

இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. மேலும் சரும பிரச்சினைகள் அனைத்தையும் போக்க வல்லது. பரு பிரச்சினையிலிருந்து சரும நிறமாற்றம் வரை வெவ்வேறு விதமான சரும பிரச்சினைகளையும் களைகிறது.

எனவே இப்படிப்பட்ட ஓட்ஸ் தானியத்தை எப்படி அழகு பராமரிப்புக்கு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளவது நமக்கு நன்மை பயக்கும். இந்த ஓட்ஸ்யை கொண்டு எப்படி வித விதமான சரும பேஸ் மாஸ்க்களை தயாரிக்கலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

ஷாப்களில் வாங்கி பயன்படுத்தப்படும் மாஸ்க்கை விட இந்த ஓட்ஸ் பேஸ் மாஸ்க் விலை குறைந்தது மட்டுமில்லாமல் இயற்கையான ஒன்றாகவும் உள்ளது.

தினமும் பொலிவிழந்த முகத்துடன் ஹாய் சொல்லும் நீங்கள் இனி மேல் குறைபாடுகள் இல்லாத அழகான முகத்துடன் பிரதிபலியுங்கள்.

சரி வாங்க ஓட்ஸ் பேஸ் மாஸ்க்களை எப்படி தயாரிப்பது என்பதை காணலாம்.

ஓட்ஸ் மற்றும் தேன் 1 டீ ஸ்பூன் சமைத்த ஓட்ஸ் மற்றும் 2 டீ ஸ்பூன் தேன் இரண்டையும் எடுத்து கொள்ள வேண்டும். நன்றாக கலந்து இந்த மாஸ்க்கை முகத்தில் அப்ளே செய்யவும் 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும் வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் வறண்ட சருமம் சரியாகி போதுமான ஈரப்பதத்துடன் குறைபாடற்ற முகழகை பெற முடியும்

ஓட்ஸ், பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் 1 டேபிள் ஸ்பூன் சமைத்த ஓட்ஸ், 1/2 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா, 3 டீ ஸ்பூன் டிஸ்டில்டு வாட்டர் மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும் பிறகு இந்த மாஸ்க்கை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும் பிறகு சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் கழுவ வேண்டும். பிறகு லைட் டோனர் பயன்படுத்தவும். இந்த அல்ட்ரா மாய்ஸ்சரைசரிங் மாஸ்க்கை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

ஓட்ஸ் மற்றும் யோகார்ட் 1 டீ ஸ்பூன் சமைத்த ஓட்ஸ், 2 டீ ஸ்பூன், யோகார்ட் இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். இதை முகத்தில் தடவி காய்ந்ததும் 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இந்த முறையை வாரத்திற்கு ஒரு, முறை என்று பயன்படுத்தி வந்தால் மென்மையான மிருதுவான சருமம் கிடைக்கும்.

ஓட்ஸ், ஆலிவ் ஆயில் மற்றும் லெமன் ஜூஸ் 1 டீ ஸ்பூன் சமைத்த ஓட்ஸ், 1 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலக்கவும் இந்த மாஸ்க்கை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவவும் 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இதை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி விடும்.

ஓட்ஸ் மற்றும் பாதாம் எண்ணெய் 1 டீ ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும் பிறகு இந்த மாஸ்க்கை உங்கள் முகத்தில் தடவி காய விடவும் பிறகு சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் கழுவி, பிறகு லேசான மாய்ஸ்சரைசர் அப்ளே செய்ய வேண்டும். இதை இரண்டு வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் நல்ல ஜொலிப்பான முகத்தை பெறலாம்.

ஓட்ஸ், வாழைப்பழம் மற்றும் ரோஸ் வாட்டர் வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதனுடன் 1 டீ ஸ்பூன் சமைத்த ஓட்ஸ் மற்றும் 3 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும் பிறகு இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் காய விடவும் பிறகு சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் கழுவ வேண்டும் இந்த முறையை மாதத்திற்கு இரண்டு முறை என்று பயன்படுத்தி வந்தால் தூய்மையான ஆரோக்கியமான சருமத்தை பெறலாம்.

ஓட்ஸ் மற்றும் பால் ஒரு பெளலில் 2 டீ ஸ்பூன் சமைத்த ஓட்ஸ் மற்றும் 1 டீ ஸ்பூன் பால் சேர்த்து கலக்கவும் இப்பொழுது இந்த கலவையை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவவும் பிறகு 15 நிமிடங்கள் காய வைத்து சூடான குளிர்ந்த நீர் கலந்த கலவையில் கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை என்று பயன்படுத்தி வந்தால் சமமான சரும நிறத்தை பெறலாம்

ஓட்ஸ் மற்றும் ஆப்பிள் ஜூஸ் 1 டீ ஸ்பூன் சமைத்த ஓட்ஸ் மற்றும் 2 டீ ஸ்பூன் ஆப்பிள் ஜூஸ் இரண்டையும் ஒன்றாக கலக்க வேண்டும். பிறகு முகத்தில் இந்த மாஸ்க்கை தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் கழுவி லேசான மாய்ஸ்சரைசர் அப்ளே செய்ய வேண்டும். மாதத்திற்கு இரண்டு முறை என்று பயன்படுத்தி வந்தால் சீக்கிரம் சருமம் வயதாகுவதை தடுக்கலாம்.,

cover 03 1514975068

Related posts

முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்க சில அழகு குறிப்புகள்…!அப்ப தினமும் செய்யுங்க…

nathan

முகத்தில் வளரும் தேவையற்ற முடி..நீக்குவது எப்படி?

nathan

பெண்களே உங்கள் முகத்தை பொலிவாக்க சூப்பர் டிப்ஸ்…

nathan

உங்க முகத்துல கரும்புள்ளிகள் அசிங்கமா தெரியுதா? அப்ப இத படிங்க!!!

nathan

புளியைக்கொண்டு சரும நிறத்தை அதிகரிக்க வேண்டுமா?

nathan

சோப்புகளின்றி முகத்தை எப்படியெல்லாம் சுத்தம் செய்யலாம் எனத் தெரியுமா?

nathan

எப்போதும் இளமையாக இருக்கனுமா அப்போ இத செய்யுங்கள்….

sangika

கற்றாளையைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவை பேண முடியும்.

sangika

பண்டிகை காலங்களில் பளிச்சென்று மின்ன வேண்டுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க.

nathan