23.7 C
Chennai
Monday, Dec 23, 2024
29 1514524463 15
சரும பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா வசிகரிக்கும் அழகை பெற செய்ய வேண்டியவைகளும்! செய்ய கூடாதவைகளும்!

நாம் அனைவரும் வெள்ளையாக வேண்டும் வெள்ளையாக வேண்டும் என்று பல கெமிக்கல் பொருட்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். பல காஸ்மெடிக் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை நம்மிடம் விற்க வேண்டும் என்பதற்காக படாத பாடு பட்டு அவர்களது காஸ்மெடிக் பொருட்களை நம்மிடம் விற்க முயலுகின்றன.

நாமும் எதற்கு இந்த மஞ்சளை அரைத்து முகத்தில் பூசி கொண்டு…. எவ்வளவு ரிஸ்க் என்று நினைத்து, அவர்களது வியாபார வலையில் விழுந்து விடுகிறோம்… அந்த அழகு பொருட்கள் என்னவோ தங்களது கடமைக்கு ஒரு சில நாட்கள் உங்களது முகத்தை கண்டு நீங்களே வியந்து போகும் அளவிற்கு அழகை அதிகரித்து காட்டினாலும் கூட, பின்னாளில் அவை சருமத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். இவ்வளவு பிரச்சனை எதற்கு? இயற்கை பொருட்களை கொண்டே உங்களது அழகினை மேம்படுத்துவது எப்படி என்று இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது தொடந்து படித்து பயன் பெருங்கள்…!

பாதாம் பாதாம் மிகவும் ஆரோக்கியமான ஒரு நட்ஸ் ஆகும். இந்த பாதாமில் அதிகளவு விட்டமின் இ உள்ளது. சருமம் மற்றும் கூந்தலுக்கு விட்டமின் இ மிகவும் இன்றியமையாதது ஆகும். நீங்கள் பாதாம் சாப்பிடுவதால் இதில் உள்ள விட்டமின் இ ஆனது சூரிய கதிர்களிடம் இருந்து உங்களது சருமத்தை பாதுக்காக்கிறது.

கேரட் கேரட் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிக அதிக நன்மைகளை செய்கிறது. இதில் உள்ள விட்டமின் ஏ உங்களது சருமத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. கேரட் சாப்பிடுவதனால் உங்களது முகம் பளிச்சிடும்

டார்க் சாக்லேட் டார்க் சாக்லேட் உங்களது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மிகச்சிறந்த பொருளாகும். இந்த டார்க் சாக்லேட்டில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளன. இது சருமம் கடினத் தன்மை அடைவதில் இருந்து தடுத்து, சூரியனால் உங்களது முகம் பழுதடைவதை தடுக்கிறது.

க்ரீன் டீ உங்களுக்கு சூடாக ஒரு டீ குடிக்கலாம் என்று தோன்றினால், ஒரு க்ரீன் டீ குடியுங்கள். க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உங்களது சருமத்தை பாதுகாப்பதோடு, சரும புற்றுநோய் வருவதில் இருந்தும் உங்களது சருமத்தை பாதுகாக்கிறது.

தக்காளி தக்காளியை உணவில் இட்டு சமைத்து சாப்பிடுவதை காட்டிலும், இந்த தக்காளியை சாலட்டுகளில் போட்டு பச்சையாக சாப்பிடுவது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இந்த தக்காளியை சாப்பிடுவதினால் உங்களது சருமம் நீண்ட நாட்களுக்கு இளமை பொலிவுடன் காணப்படும்.

கீரைகள் கீரை வகைகளை உங்களது உணவில் மறக்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். வாரத்தில் குறைந்தது இரண்டு தடவைகளாவது கீரைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களது உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு உங்களது சரும ஆரோக்கியமும் மேம்படுகிறது.

சன் க்ரீம் நீங்கள் வசிக்கும் பகுதியில் வெயில் அடித்தாலும் சரி, மழை பொழிந்தாலும் சரி, சன் ஸ்கீன் அவசியம் போட வேண்டும். ஏசியில் அமர்ந்து வேலை செய்தாலும் கூட சருமம் விரைவாக பாதிப்படையும். இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க மறக்காமல் 2 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது முகத்தை சுத்தமாக கழுவி விட்டு சன் ஸ்கீரின் தடவுங்கள்.

தண்ணீர் உங்களது சருமம் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்களது தேவைக்கு ஏற்ற அளவு தண்ணீர் பருக வேண்டியது மிகமிக அவசியமாகும். இதனால் உங்களது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உங்களது முகம் பிரகாசமாக இருக்கும்.

உறக்கம் தூங்கும் முன்னர் உங்களது கவலைகளை எல்லாம் மறக்க வேண்டியது அவசியமாகும். தூங்கும் நேரத்தில் ஒரு குழந்தையை போல தூங்குங்கள். இரவு தாமதமாக தூங்குவது என்பது கூடவே கூடாது. 8 மணிநேர உறக்கம் என்பது மிகவும் அவசியமாகும்.

ஐஸ் ஒத்தடம் உங்களது சருமத்திற்கு அவ்வப்போது ஐஸ் கட்டியை கொண்டு ஒத்தடம் கொடுங்கள். இதனால் உங்களது சருமம் மென்மையாகும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், முகப்பருக்கள் போன்றவை சீக்கிரமாக மறைந்துவிடும்.

முகம் கழுவுதல் இரவில் உறங்குவதற்கு முன்னரும் காலையில் எழுந்த உடனும் முகத்தை கழுவ வேண்டும். இதனால் உங்களது முகம் உடனடி பொலிவு பெரும்.

தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய்யை கை மற்றும் கால்களுக்கு மசாஜ் செய்யுங்கள். தேங்காய் எண்ணெய் உதடுகளில் உண்டாகும் வெடிப்புகள் மற்றும் பாதங்களில் உண்டாகும் வெடிப்புகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. எனவே தூங்குவதற்கு முன்னர் உதடுகள் மற்றும் பாதங்களில் தேங்காய் எண்ணெய் பூசிக் கொண்டு படுத்து உறங்குங்கள்.

பால் தினமும் பாலை கொண்டு முகத்தை 5 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால் உங்களது முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி உங்களது முகம் பிரகாசிக்கும். முகம் மிருதுவாகவும் இருக்கும்.

பேஸ் பேக் நீங்கள் சருமத்திற்கு எந்த ஒரு பேஸ் பேக் போட்டாலும், அது இருபது நிமிடங்களுக்கு மேல் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். பேஸ் பேக்குகள் ஈரப்பதமாக இருக்கும் போதே அதனை 2 நிமிடங்கள் அதிக அழுத்தம் தராமல் மசாஜ் செய்து கழுவி விட வேண்டியது அவசியமாகும்.

ஸ்கிரப் முகத்திற்கு ஸ்கிரப்பை வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். தொடந்து ஸ்கிரப் பயன்படுத்தினால் உங்களது முகத்தில் சருமத்துளைகள் விழுந்துவிடும். இதனால் பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

29 1514524463 15

Related posts

இளமையுடன் இருக்க… எலுமிச்சை!….

sangika

கை, கால் நகங்களை வலிமையாக்கும் உணவுகள்

nathan

15 நிமிடத்தில் கழுத்து, அக்குள், அந்தரங்க பகுதியில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?அற்புதமான எளிய தீர்வு

nathan

இறந்த செல்களை நீக்கும் ஸ்க்ரப்பிங்

nathan

amazing beauty benefits lemon அழகா ஜொலிக்கணுமா? எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க.

nathan

தீக்காயத்தினால் உண்டாகும் தழும்பை மறையச் செய்யும் சுலபமான வழிகள்!!

nathan

வேனிட்டி பாக்ஸ்: பாடி வாஷ்

nathan

உங்க கழுத்து பகுதியில் உள்ள சதையை எப்படி குறைப்பது?

nathan

அழகாக இருப்பதற்கான 6 ரகசியங்கள்!

nathan