28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
fair skin 26 1514274888
சரும பராமரிப்பு

உங்களுக்கு சென்சிடிவ் சருமமா? அப்ப இத படிங்க!

சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், எப்போதும் சருமத்தை சுத்தமாகவும், மாசுக்களில் இருந்து பாதுகாப்புடனும் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அது சருமத்தை சிவப்பாகவோ, பருக்களை உண்டாக்கவோ மற்றும் இதர சரும பிரச்சனைகளால் அவஸ்தைப்படவோ செய்துவிடும். பொதுவாக சென்சிடிவ் சருமத்தைக் கொண்டவர்கள் அடிக்கடி பொலிவிழந்தும், சோர்வுடனும் காணப்படுவார்கள். எனவே அன்றாடம் பராமரிப்பு கொடுக்க வேண்டியது அவசியம்.

இந்த வகை சருமத்தினர் தங்களது சருமத்தை க்ரீம்கள், மாய்ஸ்சுரைசர்கள் என்று எதையும் பயன்படுத்த முடியாது. சிலருக்கு அதில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தில் தீவிர பிரச்சனையை ஏற்படுத்திவிடும். ஆனால் சில இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மாஸ்க்குகளால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது, சரும அழகு மேம்படும். இக்கட்டுரையில் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்ற சில எளிய ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களால் முடிந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தி, சரும அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

மோர் மாஸ்க் * இந்த மாஸ்க் தயாரிப்பதற்கு, ஒரு கப் மோருடன், 3 டேபிள் ஸ்பூன் ரோஜாப் பூ இதழ்களை சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து குறைவான தீயில் 20 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைக்க வேண்டும். * பின் இந்த கலவையை முகம், கை, கால்களில் தடவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் சுத்தமாவதோடு, சருமப் பொலிவும் நிறமும் உடனே அதிகரித்துக் காணப்படும்.

ஸ்ட்ராபெர்ரி * இந்த மாஸ்க் தயாரிப்பதற்கு சில நற்பதமான ஸ்ட்ராபெர்ரி பழங்களையும், தேனையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் சிறிது மயோனைஸ் மற்றும் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு பௌலில் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து, முகத்தில் தடவி குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். * இந்த மாஸ்க் சரும வறட்சியைத் தடுப்பதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும பொலிவை அதிகரித்துக் காட்டும்.

பால் பால் மிகச்சிறந்த அழகுப் பராமரிப்பு பொருள். இந்த மாஸ்க் தயாரிப்பதற்கு 3 டேபிள் ஸ்பூன் பாலுன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் பளிச்சென்று மின்னும்.

தயிர் * இந்த மாஸ்க் தயாரிப்பதற்கு 1 கப் குளிர்ச்சியான தயிர் மற்றும் 1/2 கப் ஓட்ஸ் பவுடர் எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் இந்த இரண்டு பொருளையும் ஒன்றாக கலந்து, முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி நன்கு காய்ந்த பின், குளிர்ச்சியான நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும். * இந்த மாஸ்க்கால் சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காணப்படும். மேலும் இந்த மாஸ்க் வறட்சியால் சருமத்தில் ஏற்பட்ட சுருக்கத்தையும் குறைக்கும்

வாழைப்பழம் * வாழைப்பழம் சென்சிடிவ் சருமத்தினருக்கு மிகவும் சிறப்பான பொருள். அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை அப்படியே மசித்து சருமத்தில் தடவலாம். * இல்லாவிட்டால், மசித்த வாழைப்பழத்துடன் சிறிது குளிர்ச்சியான தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி குறைந்தது 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவவும். வேண்டுமானால், இறுதியில் ஐஸ் கட்டிகளைக் கொண்டும் சருமத்தை மசாஜ் செய்யலாம்.

அகாய் பெர்ரி * இந்த மாஸ்க் தயாரிப்பதற்கு, 1/2 கப் மசித்த அகாய் பெர்ரி பழம், சிறிது சர்க்கரை, சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது நற்பதமான ஏதேனும் ஒரு பெர்ரி பழங்களை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். * இந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, சருமத்தில் தடவி சிறிது ஸ்கரப் செய்து, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். * இந்த பழங்களில் பாலிஃபீனால் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது பொலிவிழந்த சருமம், சரும சுருக்கம் போன்றவற்றைப் போக்கும்.

தர்பூசணி, வெள்ளரிக்காய் * இந்த மாஸ்க் தயாரிப்பதற்கு, 2 டேபிள் ஸ்பூன் தர்பூசணி ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ், பால் பவுடர் மற்றும் சிறிது தயிர் ஆகியவற்றை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் இவற்றை நன்கு கலந்து, பின் முகம், கழுத்து, கை, கால்களில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

எலுமிச்சை, வாழைப்பழம் * இந்த மாஸ்க் தயாரிப்பதற்கு 1 நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சிறிது தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். இந்த மாஸ்க் சரும வறட்சியைத் தடுப்பதோடு, சருமப் பொலிவை அதிகரித்து, புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.fair skin 26 1514274888

Related posts

குங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.

nathan

நீங்கள் அதிகமா மேக்கப் போடுறீங்களா? கவணம் உங்க சருமத்துக்கு ஆபத்து !

nathan

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்

nathan

வீட்டில் ஒரு பியூட்டி பார்லர்

nathan

கழுத்திலுள்ள கருமையை போக்க புதினாவை பயன்படுத்தலாம் !! எப்படி தெரியுமா?

nathan

ஷவரில் குளிப்பதற்கு முன் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

nathan

நிமிடத்தில் சரும பொலிவை அதிகரிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

nathan

மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும்……

sangika

குளியல் பொடி

nathan