28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
face lotion 14 1513221590
முகப் பராமரிப்பு

உங்க சரும சுருக்கம், கரும்புள்ளி மற்றும் பருக்களுக்கு குட்-பை சொல்ல, தினமும் இதால முகத்தை கழுவுங்க. சூப்பர் டிப்ஸ்…

இன்றைய தலைமுறையினர் முகப்பரு, கரும்புள்ளி, சரும சுருக்கம் போன்ற சரும பிரச்சனைகளால் அவஸ்தைப்படுகின்றனர். இப்பிரச்சனைகளைப் போக்க பலர் கடைகளில் விற்கப்படும் க்ரீம்கள், லோஷன் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவர். ஆனால் அவைகளால் கிடைக்கும் தீர்வுகள் தற்காலிகம் என்பதை மறக்க வேண்டாம். மேலும் உடனடி தீர்வுகளை வழங்கும் சில பொருட்கள் பக்கவிளைவுகளை உண்டாக்கும்.

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே தீர்வு காண முடியும். இயற்கை பொருட்களைக் கொண்டு சரும பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால், பிரச்சனைகள் நீங்குவதோடு, சரும செல்கள் ஊட்டம் பெற்று, சருமத்தின் பொலிவும், ஆரோக்கியமும் மேம்படும். இங்கு முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் பருக்களைப் போக்கும் ஒரு அற்புதமான நேச்சுரல் ஃபேஸ் லோஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து அழகாக ஜொலியுங்கள்.

பார்ஸ்லி பார்ஸ்லியில் பல வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் அதிகளவு மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் உள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பார்ஸ்லியை சருமத்தில் பயன்படுத்த சருமத்தில் உள்ள சேதமடைந்த செல்கள் புதுப்பிக்கப்படுவதோடு, கருமைகளும் அகலும்.

எலுமிச்சை வைட்டமின் சி மற்றும் ப்ளீச்சிங் தன்மை கொண்ட எலுமிச்சையைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்கும் போது, சருமத்தில் இருக்கும் கருமை நீங்குவதோடு, முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் போய்விடும்.

நேச்சுரல் லோசன் தயாரிக்கத் தேவையான பொருட்கள்: பார்ஸ்லி – 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் தண்ணீர் – 200 மிலி

தயாரிக்கும் முறை: ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் பார்ஸ்லி இலைகளை நறுக்கிப் போட்டு அடுப்பில் வைத்து, மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை: இந்த ஃபேஸ் லோசனைக் கொண்டு தினமும் காலை, மாலை என இருவேளையும் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் இந்த லோசன் சருமத்துளைகளைத் திறந்து அழுக்குகளை வெளியேற்றி, சரும நிறத்தை மேம்படுத்தும். அதோடு பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருந்தாலும் போய்விடும். இந்த நேச்சுரல் ஃபேஸ் லோசனை தினமும் என ஒரு மாதம் பயன்படுத்த, சருமத்தில் உள்ள பிரச்சனைகள் முழுவதும் நீங்கி, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவோடும் இருக்கும்.

கண்களுக்கு… கண்களைச் சுற்றி கருவளையங்கள் இருந்தால், அதைப் போக்க வேண்டுமானால், எலுமிச்சை சேர்க்காமல் அந்த லோசனை பஞ்சுருண்டையின் உதவியுடன் கண்களைச் சுற்றி தேய்த்து 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவிக் கொள்ளுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்து வர விரைவில் பலன் கிடைக்கும்.
face lotion 14 1513221590

Related posts

அச்சச்சோ சிவப்பழகு க்ரீம்!

nathan

முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையாக மாற்றும் அன்னாச்சி டிப்ஸ்..! முயன்று பாருங்கள்

nathan

கொரியாபொண்ணுங்க எப்பவும் இளமையாவே இருக்காங்களே எப்படி?இதுதான் சீக்ரெட்டாம்!

nathan

முகப் பொலிவுக்கு உதவும் நைட் க்ரீம்ஸ்!

nathan

உங்களுக்கு தெரியுமா பருக்களினால் ஏற்பட்ட வடுக்களை சரி செய்ய இந்த அரிய வகை மூலிகைகளே போதும்…!

nathan

ஹீரோயின் மாதிரி உங்க முகம் பொலிவா பிரகாசமா மின்னணுமா?

nathan

முகத்தில் இருக்கும் மச்சத்தை நீக்கும் எளிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா கருவளையம் பிரச்சனைகளை போக்க அருமையான குறிப்புகள்

nathan

பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…!

nathan