25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
18 18 1513600513
முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சீக்கிரமாக போக்க சூப்பர் டிப்ஸ்…

முகத்தின் அழகில் மூக்கும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சிலருக்கு முகம் பளபளவென்று கண்ணாடி மாதிரி இருக்கும். ஆனால் மூக்கில் கருப்பு அல்லது வெள்ளை புள்ளிகள் இருக்கும். இது மூக்கின் பக்கவாட்டிலும், மூக்கின் மேலும் இருக்கும். மேலும் மூக்கின் பக்கவாட்டில் கருமையான வளையம் தென்படும். இது பார்பதற்கு அசிங்கமாக இருக்கும். அவர்கள் என்ன தான் அழகாக இருந்தாலும் கூட, இந்த கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகள் மூக்கின் அழகையே கெடுக்கும் ஒன்றாக அமைந்துவிடும்.

ஆனால் நீங்கள் இந்த கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளை பற்றி கவலைப்பட தேவையே இல்லை.. இவற்றை போக்க வீட்டிலேயே செய்ய கூடிய சில வழிமுறைகள் உள்ளன. இவற்றை நீங்கள் செய்வதால் உங்களது மூக்கு முன்பை போல வளவளப்பாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் மாறும். இந்த பகுதியில் மூக்கில் உள்ள பிளாக் மற்றும் ஒயிட் ஹேட்ஸை போக்கும் சிகிச்சை முறைகளை பற்றி காணலாம்.

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, அதனைக் கொண்டு சொரசொரவென்று உள்ள கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் நன்கு தேய்த்து, பின் நீரில் கழுவி, துணியால் அழுத்தி துடைத்தால், கரும்புள்ளிகள் நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

தேன் தேன் கூட கரும்புள்ளிகளைப் போக்க உதவும். அதற்கு தேனை லேசாக சூடேற்றி, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து, பின் அதனை மூக்கின் மேல் தடவி லேசாக மசாஜ் செய்து, முகத்தை கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.

பேக்கிங் சோடா அரை டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா உடன் தண்ணீரை கலந்து, பேஸ்டாக கலந்து கொள்ள வேண்டும். இதனை கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். இது உலந்த பிறகு குளிர்ச்சியான நீரினால் கழுவி விட வேண்டும்.

மஞ்சள் தண்ணீரில் மஞ்சளை கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி, 20 முதல் 25 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். பின்னர் இதனை கழுவி விட வேண்டும். மஞ்சள் இயற்கையாகவே கரும்புள்ளிகளை நீக்க கூடிய வல்லமை கொண்டது.

க்ரீன் டீ ஒரு கப் க்ரீன் டீ தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த க்ரீன் டீயை ஆற வைத்து, அதில் உங்களது முகத்தை கழுவுங்கள். இதனால் உங்களது முகம் மென்மையாகிவிடும். கரும்புள்ளிகள் உள்ள இடங்களுக்கு அதிக கவனம் செலுத்துங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரை உங்களது மூக்கில் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி வந்தாலும், நல்ல நிவாரணம் கிடைக்கும். இது கிருமிகளை எதிர்க்கும் தன்மை கொண்டது.

ஜெலட்டின் பவுடர் ஜெலட்டின் பவுடர் பேக்கரி பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது ஜெல்லி தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஜெலட்டின் பவுடரை சூடான பாலில் கலந்து, பேக் போல போட வேண்டும். இதனை நன்றாக காய விட வேண்டும். காய்ந்த உடன் இதனை உரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சருமம் வளவளப்பாகவும், முடிகள் இல்லாமலும், கரும்புள்ளிகள் இல்லாமலும் இருக்கும்.

தக்காளி தக்காளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவி துணியால் துடைத்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் போய்விடும்.

ஆவிப்பிடிப்பது அனைத்தையும் விட ஆவிப்பிடிப்பது தான் மிகவும் சிறப்பான வழி. அதிலும் சுடுநீரில் மூலிகைகளான லாவெண்டர், எலுமிச்சை தோல் மற்றும் புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து, ஆவிப்பிடித்து சுத்தமான துணியால் முகத்தை துடைத்தால், முகம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன், கரும்புள்ளிகளும் விரைவில் மறையும்.

பால் தினமும் 2-3 முறை பாலை பஞ்சில் நனைத்து, முகத்தை துடைத்து எடுத்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவோடும் மென்மையாகவும் இருக்கும்.

கற்றாழை கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கற்றாழை துண்டு கொண்டு மேல்புறம் நோக்கி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

சர்க்கரை கரும்புள்ளிகளை நீக்க சர்க்கரை கூட பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஈரமான முகத்தில் சர்க்கரைக் கொண்டு மென்மையாக தேய்த்தால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் போய்விடும்.

எலுமிச்சை சருமத்துளைகளின் அடைப்பால் ஏற்படும் கரும்புள்ளியை, எலுமிச்சை கொண்டு போக்கலாம். அதற்க எலுமிச்சையை மூக்கின் மேல் தேய்த்தால், சருமத்துளைகளானது திறந்து, கரும்புள்ளிகள் வருவது தடுக்கப்படும்.

கடலை மாவு கடவை மாவில் சிறிது பாதாம் பொடி சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி ஊர வைத்து, கழுவும் போது தேய்த்துக் கொண்டே கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

தயிர் 2 டேபிள் ஸ்பூன் தயிரில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவினாலும், கரும்புள்ளிகள் நீங்கும்.

புதினா 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளில் புதினா ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கின் மேல் தடவி உலர வைத்து குளிர்ந்த நீர் பயன்படுத்தி நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், கரும்புள்ளிகள் மறையும்.

18 18 1513600513

Related posts

தழும்பை மறைய வைக்கனுமா?

nathan

நீண்ட நேரம் மாஸ்க் அணிந்து சரும பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு கருவளையம் சங்கடப்படத்துகிறதா?

nathan

வீட்டிலேயே முக அழகை மேருகூட்டலாம் இதை செய்யுங்க தினமும்….

sangika

காலை சருமபராமரிப்பு செயல்முறை!…

sangika

உங்க உதடுகள் கருமையா? அப்ப இத படிங்க!

nathan

துவரம் பருப்பு,பீட்ரூட் சாறு, மற்றும் கோதுமை மாவை பயன்படுத்தி பேசியல் செய்வது எப்படி?

nathan

சூப்பர் டிப்ஸ்! மின்னும் முகப்பொலிவை வீட்டிலிருந்தப்படியே பெற சில பேஷியல் டிப்ஸ்!

nathan

முக அழகை பேண புது வித குறிப்பு!…

sangika