25.5 C
Chennai
Monday, Dec 23, 2024
16 1513389331 2
சரும பராமரிப்பு

இதோ பலன் தரும் சூப்பர் டிப்ஸ்!! காம்பினேஷன் சருமத்தை எப்படி பராமரிக்கலாம் தெரியுமா?

காம்பினேஷனான சருமம் என்பது எண்ணெய் மற்றும் வறண்ட தன்மையுடன் காணப்படும். இந்த சருமம் உடையவர்களுக்கு சருமத்தின் சில பகுதிகள் எண்ணெய் பசையுடனும் மற்ற பகுதிகள் வறட்சியான தன்மையுடனும் காணப்படும்.

இதிலிருந்து ஒன்னு மட்டும் தெரிகிறது இந்த மாதிரியான சருமத்தை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில் இந்த சருமம் எளிதாக பாதிப்புக்குள்ளாகி விடும். எனவே தான் இந்த மாதிரியான சருமத்தை எப்படி கவனிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் சில டிப்ஸ்களை இங்கே கூற உள்ளோம்.

இந்த டிப்ஸ்கள் கண்டிப்பாக உங்கள் டி-ஜோன் பகுதிகளை எண்ணெய் பிசுக்கு இல்லாமலும், மற்ற பகுதிகளை ஈரப்பதத்துடன் மென்மையாகவும் மாற்றி விடும். இந்த டிப்ஸ்களை டெஸ்ட் செய்து விட்டு தினமும் பின்பற்றி வந்தால் கண்டிப்பாக நல்ல பலனை காணலாம். சரி வாங்க இப்போ டிப்ஸ்களை பார்க்கலாம். குறிப்பு : இங்கே கூறிய இயற்கை பொருட்கள் அல்லது வாங்கும் பொருட்களை உங்கள் சருமத்தில் தடவி டெஸ்ட் செய்து பார்த்து விட்டு பயன்படுத்தவும்.

தண்ணீரில் கரையும் க்ளீன்சர் உங்கள் காம்பினேஷன் சருமத்திற்கு இந்த க்ளீன்சர் தான் சரியான ஜாய்ஸ் ஆக இருக்கும். இந்த வகை க்ளீன்சர் உங்கள் முகத்தை எண்ணெய் பசையாக்காமல் அதே நேரத்தில் வறட்சியாக்காமல் இருக்கும். மேலும் சரும துளைகளில் உள்ள அழுக்கு, நச்சுகள் போன்றவற்றையும் நீக்கி விடுகிறது.

புதுப்பொலிவு தரும் ஹோம்மேடு ஸ்க்ரப் இறந்த செல்களை நீக்கி புதுப்பொலிவு பெறுவது எல்லா சருமத்திற்கும் ஏற்ற ஒன்றாகும்.மார்க்கெட்டில் விற்கப்படும் ஸ்க்ரப் ஒரு வேளை ஆயில் ஸ்கின் அல்லது வறண்ட சருமத்திற்காக இருக்கும். எனவே உங்கள் சருமத்திற்கு ஹோம்மேடு ஸ்க்ரப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. எனவே இந்த ஹோம்மேடு ஸ்க்ரப்பை பயன்படுத்தி உங்கள் சருமத்தை புதுப்பொலிவாக்கி விடுங்கள். இதை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி சருமத்தை சுத்தமாக்க வேண்டும்.

ஈரப்பதத்தை கொடுக்கும் டோனர்ஸ்யை பயன்படுத்துங்கள் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க இது மற்றும் ஒரு முறையாகும். இதற்கு சருமம் சரியான ஈரப்பதத்துடன் இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும். எனவே போதுமான ஈரப்பதத்தை கொடுக்கும் டோனர்ஸ்யை பயன்படுத்துங்கள். இவை உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி வறண்ட சருமத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். மேலும் அதிகப்படியான எண்ணெய் பசையையும் போக்கிடும்.

சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்தல் அதிகமான சூரிய ஒளி சருமத்தில் படும் போது சீக்கிரம் உங்கள் சருமம் வயசாகி விடும். எனவே வெளியே செல்வதற்கு முன்பு சன் ஸ்கிரீன் லோசன் பயன்படுத்துவது நல்லது.

லெமன் மற்றும் தேன் கொண்டு உங்கள் சருமத்தை பராமரியுங்கள் உங்கள் சருமத்திற்கு லெமன் மற்றும் தேன் ஒரு அற்புத பியூட்டி கலவையாகும். இந்த இரண்டு பொருட்களிலுள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் சரும பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன. பருக்கள், மருக்கள் போன்றவை வருவதை தடுக்கிறது.

இரவு நேர பியூட்டி வழக்கத்தை சரியாக பின்பற்றுதல் இரவு நேரத்தில் சரும பராமரிப்பு உங்களுக்கு மிகவும் சிறந்தது. இதற்கு முதலில் நீரில் கரையும் க்ளீன்சர் கொண்டு முகத்தை கழுவி விட்டு லேசாக டோனர் அப்ளே செய்து பிறகு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்ய வேண்டும். இதை தினமும் பின்பற்றி வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

ரோஸ் வாட்டர் பயன்படுத்துதல் ரோஸ் வாட்டர் எல்லா சருமத்திற்கும் ஏற்ற சிறந்த பொருளாகும். இது சரும பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. ஒரு காட்டன் பஞ்சில் ரோஸ் வாட்டரை முக்கி சருமம் முழுவதும் தடவ வேண்டும். இதன் மூலம் உங்கள் சருமம் ஜொலிப்பதோடு உங்கள் பிரச்சினைகளும் சரியாகி விடும்.

தேன் பயன்படுத்துதல் க்யூமெக்டன்ட் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் தேனில் உள்ளன. இவை காம்பினேஷன் ஸ்கின் வகைக்கு சரியாக வேலை செய்கிறது. உங்கள் சருமத்தில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு போதுமான ஈரப்பதத்தையும் அதே நேரத்தில் எண்ணெய் பசை பகுதிகளுக்கு அதை நீக்கியும் பலன் அளிக்கிறது. இதற்கு கொஞ்சம் தேனை உங்கள் முகத்தில் தடவி 5-10 நிமிடங்கள் கழித்து குளிர்ந் மற்றும் சூடான நீர் கலந்த கலவையில் அலச வேண்டும். நல்ல ஆரோக்கியமான பிரிட்டியான சருமத்தை பெறலாம்.

16 1513389331 2

Related posts

பெண்களுக்கு தேவையில்லாத இடங்களில் முடி வளர காரணம்

nathan

முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற இப்படி செய்து வாருங்கள்!…..

sangika

கால்களில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

சருமம் பற்றிய குறிப்புகள்..

nathan

கற்றாழையின் சரும பராமரிப்பு

nathan

கோடை காலத்தில் வியர்வை நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்வது

nathan

பியூட்டி – நைட் க்ரீம்

nathan

உச்சி முதல் உள்ளங்கால் வரை எப்படி அழகு படுத்தலாம் -சித்த மருத்துவம்

nathan

ஆரஞ்சு பழத்தை வைத்து சருமம், கூந்தலை பராமரிக்கும் முறைகளை பார்க்கலாம்.

nathan