25.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
சரும பராமரிப்பு

தினமும் ஒரு ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடி

பாசிப்பருப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் கரும்புள்ளி, சுருக்கம், கருமை ஆகியவை மறைந்து சருமம் பிரகாசமடையும். கூந்தலை அழுக்கில்லாமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க பாசிப்பருப்பு உதவி செய்கின்றது.

நிறைய பேருக்கு பாசிப்பருப்பை அழகிற்கு பயன்படுத்த தெரியவில்லை. அதனாலெயே அதனை அழகிற்காக பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்கள், அதனைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
முதலில் பாசிப்பருப்பை நன்றாக் பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த பொடியிலிருந்து தினமும் உங்க சரும மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தத் தொடங்குங்கள்.
maxresdefault
சீரில்லாத சருமம் :
வயது அதிகமாக அதிகமாக சருமம் மேடு பள்ளமாக , முகத்தில் சீரில்லாத நிறத்துடன் இருக்கும். இதற்கு சிறந்த மருந்து இதுதான்.பாசிப்பருப்புபை பொடி செய்து கொள்ளுங்கள். தினமும் ஒரு ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடியை எடுத்து அதனுடன் சிறிது ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகம் கழுவுங்கள். இது மிக மென்மையான சருமத்தையும், அழகையும் உங்களுக்கு தரும்.
201711251345345638 pimple on his forehead solution SECVPF
முகப்பரு
1/2 ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடியை எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் த்டவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். தினமும் ந்ரமிருந்தால் இரு வேளை அல்லது இரவில் தினமும் இப்படி செய்து படுத்தால் ஒரே வாரத்தில் முகப்பருக்கள் மறைந்துவிடும். அதன் தழும்புகளும் மறையு
04 1504509703 6healthyskin
நிறத்தை அதிகரிக்க :
1 ஸ்பூன் பாசிப்பருப்பு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் செய்ய வேண்டும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக பால் கலந்து கொள்ள வேண்டும்.
22 1406007083 8 skin8
மிருதுவான சருமம் கிடைக்க :
1 ஸ்பூன் பாசிப்பருப்பை பாலாடையுடன் கலந்து முகம், கழுத்து, போன்ற பகுதிகளுக்கு தடவுங்கள். காய்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இது பட்டு போன்ற மிருதுவான சருமத்தை தரும். வாரம் இருமுறை செய்து பாருங்கள்.
19 skin care image
கருமைக்கு :
சூரிய ஒளியால கருமையாகிப் போன சருமத்தை மாற்ற பாசிப்பருப்பால் முடியும். 1/2 ஸ்பூன் பாசிப்பரு, கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் இரண்டையு கலந்து, கெட்டியாக இருந்தால் சிறிது நீர் கலந்து முகத்தில் தடவுங்கள். இது விரைவில் கருமையை போக்கி முகத்தை பளிச்சென்று மாற்றும்.
12 1497246308 1skin
சுருக்கங்கள் மறைய :
சுருக்கம் மறைய பாசிப்பருப்பு அட்டகாசமான நன்மையை தரும் என்பதில் சந்தேகமில்லை. பாசிப்பருப்பு பொடியை 1 ஸ்பூன் எடுத்து அதில் பேஸ்ட் ஆகும் வரையில் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளுங்கள்.
இதனை முகம், கழுத்து போன்ற பகுதில் மேல் நோக்கி தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் சுருக்கங்கள் மறைந்து இளமையாக நீங்கள் இருப்பீர்கள்.
12 1478931749 2 scrubbingskin
இயற்கை ப்ளீச் :
ஏதாவது நிக்ழ்விற்கு போகும்போது முகம் டல்லாக இருக்கிறதே என்று எண்ணும்போது இந்த பாசிப்பருப்புப் பொடி உங்களுக்கு கை கொடுக்கும்.1 ஸ்பூன் பாசிப்பொருப்பு பொடியை சிறிது தயிர் கலந்து முகத்தில் த்டவி காய்ந்ததும் கழுவுங்கள். முகத்தில் இருக்கும் சோர்வு, கருமை எல்லாம் மறைந்து பளிசென்று மறிவிடும்
02 1501658891 hair 1 1
கூந்தலுக்கு :
1 ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடியுடன் கால் கப் நெல்லிக்காய் ஜூஸ் கலந்து கூந்தலின் வேர்க்கால்களில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசுங்கள். வாரம் ஒருமுறை இந்த முறையை பயன்படுத்தினால் கூந்தலின் வேர்க்கால்களில் உள்ள பாதிப்புகள் குறைந்து ஆரோக்கியமான முடிக்கற்றைகள் வளரும்.
wash1
தலைமுடியை சுத்தப்படுத்த :
மாசுப்பட்ட காற்றினால் உங்கள் தலைமுடியில் உண்டாகும் பாதிப்புகளை பாசிப்பருப்பு சரிப்படுத்துகிறது. 1 ஸ்பூன் பாசிப்பருப்பு பொடி, ரோச் வாட்டர் 1/2 ஸ்பூன், பொடித்த ஓட்ஸ் ஆகிய்வற்றை நீர் கொண்டு பேஸ்ட் போல் செய்து அதனை கூந்தலிக் தடவி மசாஜ் செய்யுங்கள்.
20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசினால் ஸ்கால்ப்பில் உள்ள அழுக்கு, பொடுகு ஆகியவை மறைந்து ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சி ஆரம்பிக்கும்.
ilanarai tips ila narai tipsila narai tips in tamilhair black tips tamil
பொடுகிற்கு :
1 ஸ்பூன் பாசிப்பருப்பை கால் கப் வேப்பிலை சாறுடன் கலந்து பொடுகுள்ள ஸ்கால்ப்பில் த்டவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். இப்படி வாரம் 2 முறை செய்தால் உங்கள் பொடுகு இனி எப்போதும் உங்களை நெருங்காது.
take care of hair
பளபளப்பான கூந்தலுக்கு :
அரை ஸ்பூன் பாசிப்பருப்புடன் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் ரோஸ் வாட்டர் கால் கப் தேங்காய் எண்ணெய் கலந்து தலைமுடிக்கு த்டவி மசாஜ் செய்யுங்கள். பின்னர் அரை மணி நேரம் ஊற வைத்து தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசினால் உங்கள் கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்

Related posts

தேனின் உதவியுடன் எப்படி பேசியல் பண்ணி கொள்ளுவது

nathan

எச்சரிக்கை! இந்தமாதிரி தோலில் வெண்புள்ளிகள் வந்தா அலட்சியம் வேண்டாம்…

nathan

அழகை அதிகரிக்க ஓட்ஸை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

nathan

உங்கள் சரும பிரச்சனையை போக்கும் சமையலறை பொருட்கள்!!

nathan

இப்படி தொடர்ந்துதினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்

nathan

தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும்

nathan

மார்பகங்களுக்கு அடியில் கருமையாக உள்ளதா? அதைப் போக்க இதோ சில வழிகள்!

nathan

15 நிமிடத்தில் அழகாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்….

nathan

அழகுக்கு ஆயுர்வேதம்

nathan