25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
beer 28 1514458524
தலைமுடி சிகிச்சை

உங்க தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கணுமா? இத ட்ரை பண்ணி பாருங்க

பொதுவாக தலைமுடியைப் பராமரிப்பதற்கு பழங்கள், காய்கறிகள், தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவோம். ஆனால் பீர் கொண்டு தலைமுடியைப் பராமரித்ததுண்டா? பீரில் உள்ள உட்பொருட்கள், தலைமுடி மற்றும் சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. குறிப்பாக பீரில் இருக்கும் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் வளர்ச்சிக்கு நல்லது. இது ஒரு நல்ல கண்டிஷனராக மட்டும் செயல்படுவதோடு, தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கவும் செய்யும். ஏனெனில் இதில் சிலிகா என்னும் கனிமச்சத்து உள்ளது
குறிப்பாக பீரில் இருக்கும் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் வளர்ச்சிக்கு நல்லது. இது ஒரு நல்ல கண்டிஷனராக மட்டும் செயல்படுவதோடு, தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கவும் செய்யும். ஏனெனில் இதில் சிலிகா என்னும் கனிமச்சத்து உள்ளது.
பீர் தலைமுடிக்கு நல்லதா? * பீரில் புரோட்டீன்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த புரோட்டீன்கள் சேதமடைந்த தலைமுடியை சரிசெய்வதோடு, தலைமுடியின் அமைப்பையும் தக்க வைக்கும். * பீர் தலைமுடியின் வளர்ச்சி மற்றும் வலிமையை ஊக்குவிக்கும். * பீர் தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கும். ஏனெனில் இதில் புரோட்டீன்கள் அதிகளவில் உள்ளது. * பீரில் உள்ள பயோடின், தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, பொடுகு மற்றும் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். இக்கட்டுரையில் பீரைக் கொண்டு எப்படியெல்லாம் தலைக்கு மாஸ்க் போடலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் #1 (வறட்சியான தலைமுடிக்கு…) * மிக்ஸியில் ஒரு வாழைப்பழம், ஒரு முட்டையின் மஞ்சள் கரு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1/2 கப் பீர் ஆகியவற்றை எடுத்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். * பின் இந்த கலவையை தலைமுடியில் நன்கு தடவிக் கொள்ள வேண்டும். * பின்பு துணியால் தலையைச் சுற்றி, 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். * அடுத்து ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். * இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்த, தலைமுடி வலிமையாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.

மாஸ்க் #2 (பொலிவிழந்த தலைமுடிக்கு…) ஒரு பௌலில் 1/2 கப் பீர் எடுத்து 24 மணிநேரம் திறந்தவாறே வைத்திருக்க வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் அவகேடோ ஆயில் மற்றும் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை நன்கு அலசவும்.* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 1 முறை மேற்கொள்வது மிகவும் நல்லது
மாஸ்க் #3 (தலைமுடியின் வளர்ச்சிக்கு…) * மிக்ஸியில் ஒரு வெங்காயத்தைப் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் அத்துடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 டம்ளர் பீர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். * இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால், தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்

மாஸ்க் #4 (தலைமுடியின் அடர்த்திக்கு…) * ஒரு பௌலில் ஒரு கப் பீர் எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் ஜெலாட்டின் பவுடர் சேர்த்து கலந்து, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். * பின் தலைமுடியை நீரில் நனைத்து, தயாரித்து வைத்துள்ள கலவையை தலைமுடியில் தடவி துணியால் தலையைச் சுற்றிக் கொள்ளுங்கள். * 1 மணிநேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலசுங்கள்.
மாஸ்க் #5 (முடி வெடிப்பு கொண்டவர்களுக்கு…) * ஒரு பௌலில் நன்கு கனிந்த 3 ஸ்ட்ராபெர்ரி பழங்களை மசித்து, அதில் 1 கப் பீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். * பின் அந்த கலவையை தலைமுடியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். * பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைலை நீரில் நன்கு அலசுங்கள்.

மாஸ்க் #6 (கண்டிஷனர்) * 1 டேபிள் ஸ்பூன் ஜொஜோபா ஆயிலை 1 கப் வெதுவெதுப்பான பீரில் கலந்து கொள்ள வேண்டும். * பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலசுங்கள். * அடுத்து தயாரித்து வைத்துள்ள கலவையை தலைமுடியில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சாதாரண நீரில் அலசுங்கள். * இப்படி ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் போதும் செய்ய வேண்டும்.

மாஸ்க் #7 (அடர்த்தியை அதிகரிக்க…) * ஒரு பௌலில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் பீரை எடுத்துக் கொள்ளுங்கள். * பின் அந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி, மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். * பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை நீரில் அலசுங்கள்
மாஸ்க் #8 (பட்டுப் போன்ற முடியைப் பெற…) * இந்த மாஸ்க்கை பயன்படுத்தும் முன், மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசிக் கொள்ளுங்கள். * பின் ஒரு டம்ளர் பீரை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 15 நிமிடம் நன்கு மசாஜ் செய்யுங்கள். * பின்பு சாதாரண நீரால் தலைமுடியை அலசுங்கள்.
மாஸ்க் #9 (தலைமுடியின் வளர்ச்சிக்கு…) ஒரு கப் பீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி 20 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, குளிர வையுங்கள். * பின் அதில் 1 கப் ஷாம்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். * பின்பு இந்த கலவையை தலைமுடியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். * பிறகு நீரால் தலைமுடியை அலசுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், தலைமுடி நன்கு வளர்ச்சி பெறும்.

மாஸ்க் #10 (பொடுகைப் போக்க…) * ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாறு, 1 முட்டையின் மஞ்சள் கரு, 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 1 கப் பீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். * பின் அந்த கலவையை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு 20 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
எச்சரிக்கை: * தலைமுடிக்கு பயன்படுத்தும் போது ப்ளாட் பீரைப் பயன்படுத்துங்கள். * முக்கியமாக வாரத்திற்கு ஒருமுறை தான் பீரை தலைக்கு பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது முடியை வறட்சியடையச் செய்துவிடும். * ஏற்கனவே வறட்சியான தலைமுடியைக் கொண்டவர்கள், தலைக்கு எண்ணெயைத் தேய்த்துக் கொள்ள வேண்டும்.beer 28 1514458524

Related posts

2 வாரத்தில் நரைமுடியில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

nathan

இரு மடங்கு அடர்த்தியான கூந்தல் கிடைக்கனுமா? இதை ட்ரை பண்ணுங்க!!

nathan

இரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க

nathan

உங்க முடியெல்லாம் கொட்டி சொட்டை தலை ஆயிடுச்சா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கற்றாழை முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமாக வைக்கிறது!

nathan

பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகு தொல்லைக்கு சமையலறையில் ஒளிந்திருக்கும் 11 தீர்வுகள்.:

nathan

சொட்டையில் முடி வளர வேண்டுமா? இந்த வைத்தியத்தை யூஸ் பண்ணுங்க!!

nathan

கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்

nathan