36 C
Chennai
Saturday, Jul 12, 2025
201612010951359291 Fenugreek controlling hair fall SECVPF
தலைமுடி சிகிச்சை

உங்க கூந்தலிற்கு தயிரா?? நல்ல அழகான முடியை பெற்று கொள்ள தயிரை இப்படி முயன்று பாருங்கள்……!

உங்கள் முடி சூப்பரா வளர, முதல முடியை ஆரோக்கியமாக வச்சுக்கணும்.தலை முடியை பராமரிப்பதில் தயிர் மிக சிறந்த பொருள். தயிரை கொண்டு முடியை அழகாக வளர செய்வது எப்படி? தெரிந்து கொள்ளலாமா!

முடி அழகை பளபளவைக்கும் தயிர் வைத்தியம்.தயிர் ஒரு பொதுவான இயற்கை முடி பராமரிப்பு பொருளாக உள்ளது.இதில் நிறைய ப்ரோடீன், வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது பல வகையான தலை முடி பிரச்சனையை போக்க உதவுகிறது.

கறிவேப்பிலை – தயிர் ஹேர் பேக்
கறிவேப்பிலையில் உள்ள இரும்பு சத்தும் (Iron), தயிரில் உள்ள ப்ரோடீன் (Protein) சத்தும் முடியை செழுமையாக அடர்த்தியாக வளர உதவும்.2 கொத்து கறிவேப்பிலை உடன் 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலை முழுக்க தடவி 2 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்கள் அழித்து தலையை அலசி விடுங்கள். முடிக்கு நல்ல போஷாக்கு கிடைக்கும், நன்கு வளரும்.

முட்டை – தயிர் ஹேர் பேக்
ஒரு முட்டை வெள்ளை கருவை எடுத்து கொள்ளுங்கள். 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து கலக்கவும்.உங்கள் முடியை பிரித்து, இந்த கலவையை தடவவும். 20-30 நிமிடங்கள் அழித்து ஷாம்பு போட்டு தலையை அலசி விடுங்கள். முட்டையின் வெள்ளை கரு மற்றும் தயிரில் உள்ள ப்ரோடீன் (Protein) முடி நன்கு வளர உதவும்.

வாழை பழம் – தயிர் ஹேர் பேக்
ஒரு கிண்ணத்தில், ஒரு வாழைப்பழதை நன்றாக மசித்து கொள்ளுங்கள். அதடுடன், 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து கலக்கவும். உங்கள் முடியை பிரித்து, இந்த கலவையை தடவவும்.20 நிமிடங்கள் அழித்து தலையை நன்றாக அலசி விடுங்கள். உங்கள் முடி பட்டு போல மென்மையான பளபளப்பாக இருக்கும்.

கற்றாழை – தயிர் ஹேர் பேக்
ஒரு மென்மையான கலவையைப் பெறுவதற்கு ஒரு கிண்ணத்தில் சிறிது கற்றாழை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, 10 நிமிடங்கள் உங்கள் உச்சந்தலை, முடி முழுக்க தடவி மசாஜ் செய்யுங்க.

30 நிமிடங்களுக்கு அதை விட்டு விடுங்கள். பின்னர் ஷாம்பு போட்டு முடியை அலசி விடுங்கள். கற்றாழையில் உள்ள அமினோ அமிலங்கள் புது முடிகளை வளர தூண்டும்.

வெந்தயம் – தயிர் ஹேர் பேக்
வெந்தயத்தை நன்றாக பவுடர் ஆக அரைத்து கொள்ளுங்கள். 2 தேக்கரண்டி வெந்தய பொடி, 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை தலை முழுக்க தடவவும்.

அரை மணி நேரம் அழித்து வெறும் தண்ணீரில் தலையை அலசி விடுங்கள். முடி பஞ்சு போல மென்மையான பளபளப்பாக இருக்கும். இந்த கலவை பொடுகை போக்க மிக சிறந்த வைத்தியம்.இந்த ஈஸியான தயிர் வைத்தியத்தை செய்து நாமும் முடியை அழகாக ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாமே!201612010951359291 Fenugreek controlling hair fall SECVPF

Related posts

முடி அதிகம் கொட்டுதா? கிடுகிடுன்னு முடி வளருமாம்!

nathan

கூந்தலுக்கு எண்ணெய் எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் ..

nathan

பூண்டு கொண்டு தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுவது எப்படி?

nathan

கூந்தலுக்கு ஆரஞ்சு தோல் சிகிச்சை

nathan

கோடை கால கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்

nathan

கொத்து கொத்தா முடி கொட்டுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்யும் கற்றாழை!!!

nathan

பெண்களே எலி வால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலை வழுக்கை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

nathan