30.3 C
Chennai
Wednesday, Jul 16, 2025
Facial Hair Removal
முகப் பராமரிப்பு

உங்க முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க வீட்டு வைத்தியம்.இதை முயன்று பாருங்கள்

பெண்களுக்கு முகத்தில் வரும் ரோமங்களை போக்க வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டே தீர்வு காண முடியும்.

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க வீட்டு வைத்தியம்
பெண்கள் சிலருக்கு முகத்தில் முடி இருக்கும். இவர்கள் அழகு நிலையங்களுக்கு சென்று முடியை நீக்கினால் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சனைக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காண முடியும்.

* மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

* பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.

* சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

* குப்பமேனி இலையை தினமும் சாறு எடுத்து முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.

* மஞ்சள் தூள், கடலைமாவு இரண்டையும் சமஅளவில் எடுத்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் முடி உள்ள இடங்கல் தடவி அப்படியே காயவிடுங்கள். நன்றாக காய்ந்த பின்னர் முடி முளைத்திருக்கும் திசைக்கு எதிர்திசையாக கையால் மெதுவாக சுரண்டி எடுக்க வேண்டும். பின்னர் முகத்தை நன்றாக கழுவி விடவும்.Facial Hair Removal

Related posts

முகத்தில் தழும்புகளா?

nathan

முகத்தைத் துடைக்க ஈரமான டிஸ்யூக்களைப் பயன்படுத்தும் போது செய்யும் தவறுகள்!

nathan

பப்பாளி சருமத்தை பளபளப்பாக

nathan

சருமத்திற்கு அழகு தரும் பீர் பேஷியல்

nathan

முகத்தை நீண்ட காலம் இளமையாக வைக்க கொய்யாப்பழத்தை இப்படி பயன்படுத்துங்க..!

nathan

பெண்களே! இதோ உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்குகள்!

nathan

:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

nathan

தினமும் நைட் படுக்கும் முன், இந்த க்ரீம்மைத் தடவினால், சீக்கிரம் வெள்ளையாகலாம்!

nathan

முகத்தில் கரும்புள்ளியால் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan