உடலில் அக்குள், கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் வரும் மருக்கள், வலியை ஏற்படுத்தாமல் இருக்கலாம். இருப்பினும் அவை அழகைக் கெடுக்கும் வகையில் இருப்பதால், அதை எப்படியாவது நீக்க வேண்டும் என நினைப்போம். ஆனால் அதற்கான சரியான வழி மட்டும் தெரியாது.
பொதுவாக 25% ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த மருக்களைக் கொண்டுள்ளனர். அதுவும் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயைக் கொண்டவர்களுக்கு இந்த மரு பிரச்சனை பொதுவாக இருக்கும். அதோடு, இறுக்கமான உடை அணிந்து சருமத்தில் தொடர்ச்சியாக உராய்வு ஏற்படும் போது, மருக்கள் வர வாய்ப்புள்ளது.
இக்கட்டுரையில் சருமத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிரச் செய்யும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினாலே மருக்களை எளிதில் உதிர வைக்கலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர்
* சருமத்தில் உள்ள மருக்களை உதிரச் செய்வதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு மரு உள்ள பகுதியை சுத்தம் செய்து, பின் ஒரு பஞ்சுண்டையை ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து பிழிந்து, மருக்களின் மீது வைத்து நன்கு காய வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், மருக்கள் உலர ஆரம்பிக்கும்.
* இப்படியே தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், மருக்கள் நன்கு உலர்ந்து உதிர்ந்துவிடும்.
விளக்கெண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா
* 1 1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெயில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, மருக்களின் மீது தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், மருக்கள் உதிர்ந்துவிடும்.
டீ-ட்ரீ ஆயில்
* 4-5 டீஸ்பூன் நீரில், 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டையின் உதவியுடன் அக்கலவையை மருக்களின் மீது தடவ வேண்டும். பின் அப்பகுதியை உலர வைக்க வேண்டும்.
* இந்த செயல்முறையை ஒரு நாளைக்கு தினமும் 3 முறை என ஒரு மாதம் தொடர்ந்து செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
நெயில் பாலிஷ்
இது மிகவும் எளிமையான ஒரு வழி. அது என்னவெனில் நெயில் பாலிஷை மருக்களின் மீது தடவ வேண்டும். இச்செயலை தினமும் பலமுறை செய்து வந்தால், சீக்கிரம் மருக்கள் உதிர்ந்துவிடும்.
எலுமிச்சை சாறு
* ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியைப் பிழிந்து சாறு எடுத்து, பஞ்சுருண்டையில் நனைத்து மருக்களின் மீது தடவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், மருக்கள் விரைவில் காய்ந்து உதிரும்.
* ஒருவேளை இச்செயலால் மருக்களின் தோற்றத்தில் மாற்றத்தைக் கண்டால், தோல் மருத்துவரிடம் சென்று ஆலோசனைப் பெறுங்கள்.