25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
8 03 1512288380
சரும பராமரிப்பு

உப்பிய கண்கள் வயதான தோற்றத்தை தருகிறதா? இதை முயன்று பாருங்கள்!!

வீங்கிய கண்களுடன் தினமும் கண்விழிக்கிறீர்களா? உடனடியாக இதற்கு தீர்வு காண முடியுமா என்று திகைக்கிறீர்களா? ஆமாம் என்றால் இதைப் படியுங்கள். பல்வேறு காரணங்களால் கண் வீக்கம் ஏற்படலாம். மிகப் பொதுவான காரணங்கள் தூக்கமின்மை, நீர் கோர்த்துக் கொள்ளுதல், அழுகை, ஈரப்பதமின்மை, ஒவ்வாமை மற்றும் பல. காரணங்களுக்கு அப்பாற்பட்டு இந்த அழகுக்கு பிரச்சனை கையாள சவாலானதாக இருக்கிறது. அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு ஒப்பனை செய்து மறைத்தாலும் கூட அவை கண் வீக்கத்தை குறைக்காது மேலும் இந்தப் பிரச்சனையை சரிசெய்யாமல் விட்டால் உங்கள் கண்கள் சோர்வடைந்து பொலிவிழந்து தோற்றமளிக்கும்.

எனவே, உடனடியாக உங்கள் கண்களிலிருந்து வீக்கத்தை குறைக்க வழிமுறைகளைத் தேடுகிறீர்கள் என்றால் நாங்கள் அவற்றை உங்களுக்கு இங்கு கொண்டு வந்திருக்கிறோம். இன்றைய தினத்தில் நாங்கள் கண் வீக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெற பல பயனுள்ள வழிகளை தருகிறோம் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கண் வீக்கத்தை குறைக்கிறது. எனவே இந்த நிச்சயமாகப் பலனளிக்கக்கூடிய யுக்திகளை முயற்சித்துப் பார்த்து கண்களை பாதிக்கும் வீக்கப் பிரச்சனையிலிருந்து உடனடி நிவாரணம் பெறுங்கள். அதைப் பற்றி இங்கே படித்துப் பாருங்கள்:

குளிர்ந்த ஸ்பூன்கள் வீங்கிய கண்களின் மீது குளிர்வித்த ஸ்பூன்களை வைப்பது மிகப் பழைய யுக்தியாகும். இது மந்திரம் போல செயல்பட்டு கண்களுக்கு கீழே உள்ள வீக்கப் பைகளை அகற்றுகிறது. இந்த வழிமுறைக்கு சிறிதளவு முன்னேற்பாடு தேவை. வெறுமனே 2 ஸ்பூன்களை குளிர்சாதனப் பெட்டியில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு வைத்து வெளியே எடுக்கவும். அதை உங்கள் இரு கண்களின் மீதும் லேசாக அழுத்தி 5 முதல் 7 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். நீங்கள் வீங்கிய கண்களுடன் கண் விழிக்கும் போதெல்லாம் இந்த வழிமுறையை முயற்சி செய்து பாருங்கள்.

முட்டையின் வெள்ளைக் கரு முட்டையின் வெள்ளைக் கருவில் அடங்கியுள்ள விட்டமின்களும் புரதச் சத்தும் சருமத்தை இறுகச் செய்யும் நோக்கத்திற்கு மிகச் சிறப்பாகப் பயன்படும். அதனால் தான் இந்த இயற்கையான மூலப் பொருள் கண்களின் கீழேயுள்ள சருமத்தில் வீக்கத்தை குறைப்பதில் அதிகப்படியான திறன் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முட்டையிலிருந்து வெள்ளைக் கருவை மட்டும் பிரித்தெடுத்து அதை மென்மையாக உங்கள் கண்களின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரவலாகத் தடவுங்கள். 5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடுங்கள்.

தேநீர் பைகள் தேநீர் பைகள் இயற்கையான டேனின் எனும் துவர்ப்பு பொருளால் செறிவூட்டப்பட்டிருக்கிறது. அது அற்புதமாக செயல்பட்டு கண் வீக்கத்தை உடனடியாகக் குறைக்கும். அது கண் வீக்கத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் கருத்த சருமத்தையும் நிறத்தை லேசாக்குகிறது. 2 தேநீர் பைகளை மூடிய கண்களின் மீது வைத்து சுமார் 5 முதல் 10 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருங்கள். பிறகு கவனமாக இளஞ்சூடான நீரில் கழுவுங்கள்.

வெள்ளரிக்காய் கண்களின் கீழுள்ள சருமத்தின் வீக்கத்தை அகற்றுவதில் வெள்ளரிக்காயைப் போல திறம்பட செயலாற்று வேறு ஒரு பொருள் இல்லை. வெள்ளரிக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் வீக்கத்தை குறைப்பதோடு உங்கள் கண்களை புத்துணர்ச்சியோடு தோற்றமளிக்கச் செய்யும். வெள்ளரிக்காயை இரண்டு வில்லைகளாக வெட்டி அதை உங்கள் கண்கள் மீது வையுங்கள். அதை 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பிறகு ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்து கண்களைத் துடைத்து விடுங்கள்.

அவகடோ அவகடோ ஒரு நிவாரணமளிக்கும் காரணியாக செயல்பட்டு உங்கள் கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை குறைக்கிறது. இந்தப் பழத்தில் அடங்கியுள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் கண் வீக்கத்தை அகற்றுவதில் திறம்பட செயல்படுகிறது. சில துண்டு அவகடோவை வெட்டிக் கொண்டு நன்கு மசித்துக் கொள்ளுங்கள். இந்த கூழை பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.

குளிர்ந்த தண்ணீர் உங்களுக்கு நேரமில்லை சில நிமிடங்களிலேயே கண் வீக்கத்தை குறைக்க வேண்டுமென்றால் குளிர்ந்த நீரை பாதிக்கப்பட்ட இடத்தில் வீசியடித்து கழுவி முயற்சித்துப் பாருங்கள். வீக்கத்தை குறைப்பதில் குளிர்ந்த நீர் ஒரு நிவாரண காரணியாக செயல்பட்டு மேலும் அந்தப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வீக்கத்தை பெருமளவு குறைக்கிறது.

மசாஜ் கண்களின் கீழ் வீக்கப் பைகளுக்கு திறம்பட குணமளிப்பதில் மசாஜ் செய்தல் மற்றொரு பிரபலமான நுட்பமாகும். உங்கள் விரல் நுனிகளால் பாதிக்கப்பட்ட பகுதியை மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கண் வீக்கத்திலிருந்து உங்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.

உருளைக் கிழங்கு வில்லைகள் வெள்ளரிக்காயைப் போலவே உருளைக்கிழங்கும் இந்த குறிப்பிட்ட அழகு குறிப்புக்காக பளன்படுத்தப்படும் குளிர்ச்சி தரும் மற்றொரு நிவாரணமாகும். உங்கள் இரு கண்களின் மீதும் உருளைக் கிழங்கு வில்லைகளை வையுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். அதன் பிறகு அந்தப் பகுதியை இளஞ்சூடான தண்ணீரில் கழுவி விடுங்கள். இந்த வழிமுறையை முயற்சித்துப் பார்த்து கண் வீக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறுங்கள். மேலும் கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சருமத்தில் ஒரு புத்துணர்ச்சியை அடையுங்கள். மேலும் இதைப் பற்றித் தெரிந்துக் கொள்ள படியுங்கள்: கண்கள், உடனடி நிவாரணம், வீட்டிலேயே செய்யும் நிவாரணங்கள்.

8 03 1512288380

Related posts

கருப்பா இருக்குறேன்னு ஃபீல் பண்றீங்களா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கழுத்தில் உள்ள கருமையைப் போக்க சில சிம்பிளான டிப்ஸ்…

nathan

பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…!

nathan

பருக்களால் உண்டான தழும்புகள், புள்ளிகள் ஆகியவற்றை மறைக்க உருளைக் கிழங்கு பேஸ் பேக்!….

nathan

சருமத்தில் ஏற்படும் முதன்மையான 5 நோய்கள்!!!

nathan

அழகை இயற்கையாக மேருகூட்ட விரும்புகிறீர்களா?

nathan

சரும வகைக்கு ஏற்ப கற்றாழையைப் பயன்படுத்துவது எப்படி?

nathan

வசிகரமான முகத்தை பெற இதோ ஈஸியான சில டிப்ஸ்….!

nathan

ஹேர் ஃபிரீ சில்கி ஸ்கின்

nathan