29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
12 30 1512039429
தலைமுடி சிகிச்சை

சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரச் செய்யும் ஊமத்தைங்காய்!!சூப்பர் டிப்ஸ்

கூந்தல் உதிர்வது சாதரண பிரச்சனை என்றாலும் அதிலும் அளவோடு இருந்தால்தான் நல்லது. அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல் உங்கள் உடலில் உண்டான பாதிப்பையே உணர்த்துகிறது.

முடி உதிர்வு பருவத்திற்கு தகுந்தாற்போல் மாறினாலும், சிலருக்கு எப்போதுமே உதிர்ந்து கொண்டிருக்கும். இன்னும் சிலருக்கு கொத்து கொத்தாய் உதிரும். அது நல்லதல்ல. அப்படியே விட்டுவிட்டால் சொட்டை விழுந்துவிடும்.

மரபு ரீதியாக மட்டுமின்றி சிலருக்கு சரியாக பராமரிக்காமல் போனாலும் சொட்டை விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி முடி சொட்டையானவர்கள் இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை முயற்சிக்கலாம். எந்த பக்கவிளைவும் இல்லை. இவை சக்தி வாய்ந்த மூலிகைகள் என்பதால் நல்ல பலன்கள் தருகின்றன. அதோடு இங்கு சொல்லப்பட்டுள்ள அனைத்து மூலிகைகளும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது.

கருமையான முடி கிடைக்க : அவுரி இலை பொடி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் தவிர்க்கப்படாத ஒன்று. இது நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்காக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. அது கருமையாக மாற்றுவதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டும். அதனை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: அவுரி இலை மருதாணி இலை.

செய்முறை: அவுரி இலையுடன், மருதாணி இலையை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் செம்பட்டை முடி கருமையாக மாறும்.

நரை முடி மறைய : கரிசலாங்கண்ணி நரை முடியை கருமையாக மாற்றும் அற்புத மூலிகையாகும். அதனை பயன்படுதும் முறையில் பயன்படுத்தினால்தான் அதனுடைய முழுப் பலனும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்: எலுமிச்சை பழச்சாறு. கரிசலாங்கண்ணிச்சாறு. பால். நல்லெண்ணெய்.

செய்முறை: எலுமிச்சை பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் எல்லாகற்றையும் சமமாக அரைலிட்டர் அளவு எடுத்து ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி ஆறு மாதத்திற்குமேல் தலைமுடியில் தேய்த்து வந்தால் நரை முடி குறையும்.

பொடுகு குறைய : செம்பருத்திப் பூ கூந்தலை அற்புதமாக வளரச் செய்யும். செம்பருத்தி, துளசி, வெட்டிவேர் கலந்த எண்ணெய் கூந்தலை நீண்டு வளரச் செய்யும் . மேலும் பொடுகை முழுவதும் கட்டுப்படுத்தும். செம்பருத்தி பூ. துளசி விதை. வெட்டிவேர். தேங்காய் எண்ணெய்.

செய்முறை: தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூவை நன்றாக காய வைத்து போட்டு அதனுடன் துளசி விதை மற்றும் வெட்டிவேர் இரண்டையும் சேர்த்து போட்டு நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.

அடர்த்தியாக வளர பாதாமில் புரதம் இருப்பதால் அவை கூந்தலின் வளர்ச்சியை தூண்டும். அதோடு எலுமிச்சை சாறும் கலந்து பயன்படுத்துவதால் முடி அடர்த்தியாக வளரும்.

தேவையான பொருட்கள் : பாதாம் பருப்பு. எலுமிச்சைச்சாறு.

செய்முறை: 10 பாதாம் பருப்பை எடுத்து 3 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு விட்டு நன்றாக அரைத்துக் கொள்லுங்கள். இதனை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.

பொடுகுத் தொல்லைக்கு : படிகாரம் சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்லது. கிருமிகளால் உருவாகும் சரும பற்றும் கூந்தல் பாதிப்பௌ குணப்படுத்தும். பூஞ்சைத் தோற்று மற்றும் பொடுகை முழுக்க கட்டுப்படுத்தும்.

தேவையான பொருட்கள்: படிகாரம் சீயக்காய்

செய்முறை: படிகாரத்தை 20 கிராம் எடுத்துப் பொடியாக்கி தண்ணீரில் கரைத்து தலையில் தேய்த்து ஒன்று அல்லது 2 மணி நேரம் சென்றபின் சீயக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை வராது

முடி நன்றாக செழித்து வளர : பூசணி கொடியி்ன் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு பிழிந்து அந்த சாற்றை முடி உதிர்ந்த இடத்தில் தடவி வந்தால் முடி வளரும். வாரம் இருமுறை செய்தால் அதன் பலன் இரட்டிப்பாகும்.

ஊமத்தைங்காய் : பிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளியுங்கள். இப்படி செய்தால் சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரும். வாரம் ஒரு நாள் கட்டாயம் செய்து பாருங்கள். தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு எல்லாம் மறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.

முடி உதிர்தல் நிற்க : முடி உதிர்வதை தடுக்க தேங்காய் பால் உதவுகிறது. கூந்தலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.

தேவையான பொருட்கள்: வெந்தயம். தேங்காய்ப் பால்.

செய்முறை: வெந்தயத்தை எடுத்து தேங்காய் பாலில் நன்றாக ஊறவைக்க வேண்டும். பின்பு நன்றாக விழுதுப் போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.

கருமையாக முடி வளர : மாசிக்காய் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனை வாங்கி வாரம் 2 நாட்கள் பயன்படுத்துங்கள். பக்க விளைவுகளில்லாதது.

தேவையான பொருட்கள்: மாசிக்காய் பால்

செய்முறை: மாசிக்காயை எடுத்து பொடி செய்து அந்த தூளை தண்ணீர் அல்லது பாலில் குழைத்து தலை முடியில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலை முடி கருமையாக மாறும்.

அடர்த்தியாக வளர தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை. தயிர்.

செய்முறை: கறிவேப்பிலையை அரைத்து தயிருடன் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் குளிக்கவும். இவ்வாறி வாரம் இருமுறை செய்தால் முடி நல்ல அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

வாரம் ஒரு நாள் : மிளகிலேயே வால் மிளகு என்று கிடைக்கும் அதனை வாங்கி பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லையே இருக்காது, சிலருக்கு வெள்ளை வெள்ளையாக செதில் போக் உதிரும். அதனையும் இந்த குறிப்பு போக்கிவிடும்.

வால் மிளகு. நல்லெண்ணெய்.

செய்முறை: வால் மிளகை, நல்லெண்ணெயில் காய்த்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

கூந்தல் நீண்டு வளர சப்பாத்திக் கள்ளி விஷம் என்று சொன்னாஅலும் அது விஷத்தை முறிக்கவும் பயன்படுகிறது. சப்பாத்திக் கள்ளி மருத்துவம் குணம் நிறைந்தவை. அதன் பூக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்: சப்பாத்திக் கள்ளி பூக்கள் தேங்காய் எண்ணெய்.

செய்முறை: சப்பாத்திக் கள்ளியின் சிவந்த பூக்களில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயில் அந்த சாறை கலந்து எண்ணெயை காய்ச்ச வேண்டும். இதனை தலையில் தேய்த்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.

வெங்காயம் : வெங்காயம் சொட்டை விழுந்த இடத்தில் முடியை வளரச் செய்யும் . இது நிறைய பேருக்கு பலனைத் தந்திருக்கிறது.

தேவையானவை : வெங்காயம். செம்பருத்திப்பூ

செய்முறை: வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவி வர வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.

மரிக்கொழுந்து : மரிக்கொழுந்து இலையை புதிதாக பறித்து அரைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி வாரம் ஒரு நாள்: செய்து வந்தால் நாளடைவில் முடி கருமையாக மாறும்.

பொடுகு மறைய : வேப்பம் பூ பொடுகு, பேனை விரட்டும். அது கிருமிகளையும் அழிக்கும். சருமத்திற்கும் பயன்படுத்தலாம். கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.

செய்முறை: வேப்பம் பூவுடன் வெல்லத்தையும் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்தால் வர பொடுகு நீங்கும்

12 30 1512039429

Related posts

முடி கொட்டி வழுக்கை ஏற்படுவதற்கு இதுதான் காரணமாம்…

nathan

நரைமுடியை உடனே போக்க பிளாக் டீயும் உப்பும் போதுங்க… இத படிங்க!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பின் ஏற்படும் கூந்தல் உதிர்தலைத் தடுக்க சில டிப்ஸ்…

nathan

இந்த பழக்கங்கள் உங்கள் கோடைகால முடி ஆரோக்கியத்தை முற்றிலும் கெடுத்துவிடும்.

nathan

உங்க தலையில வெள்ளை முடி அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில வழிகள்!

nathan

நரை முடியைப் போக்கி, முடியின் அடர்த்தியை அதிகரிக்க வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது?

nathan

இளநரையை மறைய செய்யும் கரிசலாங்கண்ணி தைலம்!!!

nathan

உங்க முடியெல்லாம் கொட்டி சொட்டை தலை ஆயிடுச்சா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஆரோக்கியமான முடிக்கான‌ டாப் குறிப்புகள் – அழகு குறிப்புகள்

nathan