29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
cover 28 1511868674
சரும பராமரிப்பு

சர்க்கரை நோய் ஏற்படுத்தும் சருமப் பிரச்சனைகள் பற்றித் தெரியுமா?அப்ப இத படிங்க!

இன்றைய நாகரிக உலகில் நிறைய பேருக்கு சர்க்கரை இரத்த அழுத்த நோய் என்பது சகஜமானதாக இருக்கிறது. இவர்கள் அதிலிருந்து மீள உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இது உங்கள் ரத்தச் சர்க்கரையளவை அதிகரிப்பதுடன் ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் மாரடைப்பு ஏற்படவும் காரணமாக அமைந்திடும். உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் சர்க்கரை நோய் நம் சருமத்தை மட்டும் விட்டு வைத்திருக்குமா என்ன?

சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு சருமத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா? சருமத்தில் இந்த பாதிப்புகள் உங்களுக்கு இருந்தால், சர்க்கரை நோய் இல்லையென்றாலும் ஒரு முறை பரிசோதித்திடுங்கள் சர்க்கரை நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

சருமத்தில் பேட்ச்சஸ் : சருமத்தில் இளமஞ்சள் நிறத்திலோ அல்லது சிகப்பு நிறத்திலோ திட்டு திட்டாக தோன்றலாம். சில நேரங்களில் சிவந்த கொப்பளங்கள் தோன்றலாம். சிலருக்கு இந்த கொப்பளங்கள் வீக்கத்துடனும் காணப்படும். அந்த பரு உள்ள இடமே அரிப்பு எடுக்கும்படியும், வலியுடனும் காணப்படும். இது தொடர்ந்து நீடிக்காமல் விட்டு விட்டும் வந்திடும்.

கருப்புத் திட்டு :
கழுத்துப்பகுதி, அக்குகள் போன்ற பகுதிகள் கருப்பு திட்டுப் படியலாம். இப்படி திட்டு திட்டாக கருப்பு படர்ந்தால் உங்கள் உடலில் அதிகப்படியாக இன்ஸுலின் இருக்கிறது என்று அர்த்தம்.
அதோடு இது ப்ரீ டயாப்பட்டீஸுக்கான அறிகுறியாகும்.

கடுமையான சருமம் : கை விரல்கள், கால் விரல்கள் எல்லாம் கடுமையாகிடும். சிலருக்கு விரல்களில் வெடிப்புகள் கூட உண்டாகும். உடலில் சர்க்கரையளவு கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால் கைகளில் கொப்புளங்கள் உண்டாகும். சிலருக்கு இது முகம், தோல்பட்டை ஆகிய இடங்களில் பரவிடும். மிக அபூர்வமாக மூட்டுகளில் படரும். இது வெறும் சருமம் தொடர்பான பிரச்சனை என்று விட்டு விடாமல் உடனடியாக உங்கள் ரத்தச் சர்க்கரையளவை பரிசோதித்திடுங்கள்.

கொப்புளங்கள் : இது பெரும்பாலும் குறைவானவர்களுக்கே ஏற்படும்.கை கால்களில் பெரிய கொப்புளங்கள் ஏற்படும். கை,கால்களில் இந்த கொப்புளம் ஏற்படும். இதில் வலி எல்லாம் ஏற்படாது. இப்படியான கொப்புளம் ஏற்பட்டாலே அது உடற்சூட்டினால் தான் ஏறபடுகிறது என்று நினைத்து விட்டு விடுவோம். இனி அப்படிச் செய்யாதீர்கள். கொப்புளங்கள் அடிக்கடி ஏற்பட்டால் சர்க்கரை அளவை அவசியம் பரிசோதனை செய்யுங்கள்.

தொற்று : சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சருமத் தொற்று நோய்கள் அடிக்கடி ஏற்படக்கூடும். சருமத்தில் அலர்ஜி, அரிப்பு, வறட்சி ஆகியவை அடிக்கடி ஏற்படும். சிலருக்கும் சருமம் மிகவும் வரண்டு வெள்ளையாக உதிர்ந்து விழும்.

காயங்கள் : உங்கள் ரத்தத்தில் அதிகச் சர்க்கரையளவு இருந்தால் அது உங்கள் நரம்புகளை ஒ பாதிக்கும். இந்த நிலை அப்படியே தொடர்ந்தால் உடலில் ஏற்படுகிற காயங்கள் ஆறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். அதோடு தானாக காயங்களும் ஏற்படும். பெரும்பாலும் இப்படியான காயங்கள் காலில் தான் வரும். இதனை டயாப்பட்டிக் அல்சர் என்றும் சொல்வார்கள்.

ஸ்பாட் : சருமத்தில் சின்ன சின்ன புள்ளிகள் அதிகமாக ஏற்படும், இது நிறைய பேருக்கு ஏற்படுவதுண்டு, ஆனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இந்த டார்க் ஸ்பாட் அதிகமாகவும் அதே சமயம் ஆழமாகவும் இருக்கும். முகம், கன்னம் என எல்லா பகுதிகளிலும் இது தோன்றும். இது வயதாவதால் ஏற்படுவது, சருமப்பிரச்சனை என்று நினைக்காமல் சர்க்கையளவை சோதிப்பது அவசியம்.

சிகப்பு கொப்பளம் : பருக்கள் போலத்தான் இது இருக்கும். சாதரண பருக்களை விட இது கொஞ்சம் லேசான மஞ்சள் நிறத்தில் தெரியும். தொடை,இடுப்புப்பகுதி, தோல்பட்டை, கால் முட்டியின் பின்புறம் ஆகிய இடங்களில் இது ஏற்படும். இது ஏற்பட்டால் அரிப்பும் ஏற்படும். வியர்குரு என்று இதனை அவ்வளவாக யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

சருமம் சிவந்து போவது : எந்த வித்யாசமும் தெரியாமல் சருமத்தின் ஒரு பகுதி மட்டும் சிவந்து லேசாக வீங்கும். ஆரம்பத்தில் வெயிலானால் ஏற்பட்ட அலர்ஜி என்றே எல்லாரும் நினைப்பார்கள். அது தொடர்ந்து நீடித்தால் குறிப்பாக வலியோ எரிச்சலோ ஏதும் ஏற்படவில்லை என்றாலும் மருத்துவரிடம் செல்லுங்கள்.

அதீத வறட்சி : சருமத்தில் அதீத வறட்சி ஏற்படுவது. உடலில் அதிகப்படியான சர்க்கரை இருந்தால் தான் இப்படியான பிரச்சனை ஏற்படும். சிலருக்கு ட்ரைனஸ் அதிகமாகி அரிப்பு ஏற்படும். ட்ரைனஸ் தான் என்று சொல்லி வெறும் மாய்சரைசரை எடுத்து தடவாமல் மருத்துவரை சந்தியிங்கள்.

கண்கள் : கண்களுக்கு கீழே வீங்குவது ஏற்படும். இப்படிச் செய்வதால் சர்க்கரை நோய் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பது ஓர் காரணமாக இருக்கலாம். தூக்கம் சரியில்லை, அல்லது அதீத தூக்கம் என்று அசட்டையாக இல்லாமல் முதலில் ரத்தச் சர்க்கரையளவை பரிசோதித்திடுங்கள்.

மரு : சருமத்தில் அதிகப்படியாக மருக்கள் உண்டாகும். உங்கள் உடலில் அதிகப்படியான இன்ஸுலின் சுரந்தால் அல்லது டைப் 2 டயப்பட்டீஸ் இருந்தால் இப்படியான மரு உண்டாகும். ஏற்கனவே சர்க்கரை நோ இருந்தால் உங்களின் சர்க்கரை அளவை பரிசோதித்திடுங்கள்.

முடி உதிர்வு : சருமப்பிரச்சனை மட்டுமல்ல சர்க்கரை நோய் இருந்தால் அது முடியுதிர்வு பிரச்சனையையும் ஏற்படுத்திடும். ஆரம்பத்தில் பெரும்பாலானோருக்கு அதிகமாக முடி உதிரும். ஆனால் அதனை யாருமே சர்க்கரை நோயுடன் ஒப்பிட்டு பார்க்க மாட்டார்கள்.

பாகற்காய் : கோவைக்காய், கத்திரிக்காய், அவரைப்பிஞ்சு, வாழைப்பூ, சுண்டை வற்றல், முருங்கைக்கீரை, கொத்தமல்லி, புதினா… இவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கக்கூடியவை. பாகற்காயும் வெந்தயமும் சர்க்கரைநோய் கட்டுப்பட உதவுபவை.

பழங்கள் : நாருள்ள, இனிப்பு குறைவாகவும் துவர்ப்பு அதிகமாகவும் உள்ள பழங்களை தினமும் சாப்பிட வேண்டியது அவசியம். மாம்பழம், சப்போட்டா, மோரீஸ் வாழைப்பழம்… இன்னும் ஹைபிரிட் வாழை தவிர, மற்ற பழங்களை மருத்துவர் அறிவுரைப்படி, பிற உணவு இல்லாதபோது மாலை வேளைகளில் சாப்பிடலாம். தோலுடன் கூடிய ஆப்பிள், துவர்ப்புச் சுவையில் இளம்பழுப்பு நிறத்தில் உள்ள கொய்யா, நாவற்பழம், துவர்ப்புள்ள மாதுளை நல்லது.

மோர் குடியுங்கள் : பால், இனிப்பு சேர்க்காத கிரீன் டீ அருந்துவதுதான் நல்லது. பாலுக்கு பதில் மோர் சாப்பிடலாம். காலையில் முருங்கைக்கீரை வெங்காயம் சேர்த்த சூப் அல்லது கொத்தமல்லி, வெந்தயம் சேர்த்த குடிநீரை அருந்தலாம். வெட்டி வேர் போட்ட பானை நீரும், சீரகத் தண்ணீரும் தினசரி உபயோகத்துக்கு நல்லது.

தவிர்க்க : வாழைக்காய், சர்க்கரைப் பூசணி, பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, போன்ற பூமிக்கு கீழே விளைவதை தவிர்க்கவேண்டும்cover 28 1511868674

 

Related posts

உடல் அழகு – சில அழகுக் குறிப்புகள்:

nathan

உங்களுக்கு தெரியுமா எல்லோரையும் கவர கூடிய அழகை தரும் அற்புத பூக்கள்…!

nathan

Beauty tips.. முக பளபளப்புக்கு உதவும் திராட்சை

nathan

அழகைக் கெடுத்துக் கொண்டிரு க்கும் இந்த‌ பூனை முடிகளை முற்றிலுமாக நீக்குவதற்கு….

sangika

சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க வாரத்திற்கு ஒரு முறை இதைசெய்து வந்தாலே போதும்!…

sangika

மிருதுவான சருமத்துக்கு மோர் குளியல்

nathan

தெரிந்துகொள்வோமா? உடல் சூட்டை தணிக்க சில ஸ்பெஷல் குளு குளு குளியல்கள்!!

nathan

உள்ளே…வெளியே.. பால்! அழகு குறிப்புகள்!!

nathan

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடும்!…

sangika