28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
28 1511846759 1
தலைமுடி சிகிச்சை

ஒரு கைப்பிடி வேப்பிலை உங்க பொடுகை நிரந்தரமா போக்கிடும்!! எப்படி தெரியுமா முயன்று பாருங்கள்?

பொடுகு குளிர்காலத்தில் எல்லாருக்குமே பிரச்சனை தரக் கூடியது. பொடுகிற்கு காரணம் அதிக வறட்சி, குளிர்காலம், எண்ணெய் இல்லாத கூந்தல், மற்றொருவரின் சீப்பு, துண்டு என உபயோகிப்பது என பல காரணங்கள் சொல்லிக் கொண்டு போகலாம்.பொடுகுகள் இருந்தால் தலையில் அரிப்பு ஏற்படும். அதனால் தொடர்ச்சியாக தலையை சொரியும் போது எண்ணைச் சுரப்பிக் கொப்புளம் உண்டாகும்.

இயற்கை முறையில் பொடுகினை ஒழிக்க முற்படுவதே, சிறந்த வழி. இதனால் பொடுகு நீங்குவதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக பொலிவோடு காணப்படும்

அந்த மாதிரி சமயங்களில் கவனிக்காவிட்டால் இன்னும் பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும். என்ன செய்யலாம் என இந்த கட்டுரையில் காணலாம்.

வேப்பிலை மற்றும் ஆலிவ் எண்ணெய் : வேப்பிலை எண்ணெய் – கைப்பிடி அளவு ஆலிவ் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை : வேப்பிலையை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். குறைவான தீயில் ஆலிவ் எண்ணெயை சூடேற்றி அதில் வேப்பிலை விழுதை போடுங்கள். பின்னர் கிளறிக் கொண்டு இருக்குங்கள். சலசலப்பு அடங்கியவுடன் அடுப்பை அணைத்து விடவும். இந்த எண்ணெயை ஆறிய பின் வடிக்கட்டி உபயோகப்படுத்துங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெயை தலையில் வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்தால் ஒரே வாரத்தில் பொடுகு காணாமல் போய்விடும்.

தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப் : தேவையானவை : தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் – 2 ஸ்பூன் தேன் – 2 ஸ்பூன் யோகர்ட் – 3 ஸ்பூன்

தயாரிக்கும் முறை : தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை கலந்து லேசாக சூடு படுத்துங்கள். பின்னர் இவற்றுடன் தேன் மற்றும் யோகார்ட் கலந்து தலையில் பேக் போல் படவும். 5 நிமிடம் அப்படியே மசாஸ் செய்யுங்கள். பின்னர் 20 நிமிடம் ஊற வைத்த பின் தலைமுடியை அலசுங்கள்.

ஆஸ்பிரின் : தேவையானவை : 2 ஆஸ்பிரின் மாத்திரைகள்.

தயாரிக்கும் முறை : 2 ஆஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்புவில் இந்த பொடியை சேர்த்து தலையில் பயன்படுத்த வேண்டும். 2 நிமிடம் அப்படியே இருந்த பின்னர் தலைமுடியை அலசவும்.

எலுமிச்சை சாறு மற்றும் சமையல் சோடா : தேவையானவை : எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன் சமையல் சோடா – 2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் – 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை : எலுமிச்சை சாறில் சமையல் சோடாவை கலந்து அதில் சிறிது ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து தலையில் தேய்க்கவும். லேசாக தலையில் அரிப்பு வரும் வரை அல்லது 10 நிமிடங்கள் வரை ஊறிய பின் தலைமுடியை அலசுங்கள்.

லிஸ்டரின் மவுத் வாஷ் : லிஸ்டரின் மவுத் வாஷ் பொடுகிற்கு அற்புதமாக பலனைத் தருகிறது. தேவையானவை : லிஸ்டரின் – 1 ஸ்பூன் நீர் – 9 ஸ்பூன்.

தயாரிக்கும் முறை : நீரில் லிஸ்டரின் மவுத் வாஷை கலந்து தலையில் த்டவி லேசாக மசாஜ் செய்யுங்கள். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசவும்.

பூண்டு : தேவையானவை : பூண்டு பொடி – 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை : இரண்டு டீஸ்பூன் பூண்டு பொடியை, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறோடு கலந்து பேஸ்ட் செய்து, அதனை தலையில் தேய்த்து, 30-40 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்னர் ஷாம்புவைக் கொண்டு குளிர்ந்த நீரில் முடியை அலசுங்கள்

வெங்காயம் : தேவையானவை : வெங்காயம் – ஒருகைப்பிடி எலுமிச்சை சாறு – அரை மூடி

தயாரிக்கும் முறை : சிறிது வெங்காய விழுதை தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின் தலையை நன்றாக கழுவி, இறுதியில் சிறிது எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து நீரில் அலசினால், வெங்காய வாடை தலையை விட்டு நீங்கும், அத்துடன் பொடுகும் நீங்கிவிடும்.28 1511846759 1

Related posts

பொடுகு என்றால் என்ன ? பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

nathan

நரை முடியை கருப்பாக்க கற்பூர வள்ளியை எப்படி பயன்படுத்தலாம்? நீங்கள் அறியாத பலன் தரும் குறிப்பு

nathan

சொன்னா நம்பமாட்டீங்க… இந்த வழிகள் வழுக்கை தலையிலும் முடியை வளரச் செய்யும்!

nathan

முடி உதிர்வை தடுத்து உங்கள் தலைமுடியை வலுப்படுத்த வேண்டுமா? இதோ உடனடி தீர்வுகள்!!

nathan

கூந்தல் உதிர்வில் சீப்பின் பங்கு

nathan

ஆண்களே வழுக்கைத் தலையில் முடி வளரனுமா?

nathan

சும்மா தலைக்கு குளிச்சா என்ன ஆகும் தெரியுமா ?

nathan

பலவீனமான முடியை வலிமையாக்க உதவும் சில அட்டகாசமான எளிய வழிகள்!

nathan

முடி உதிர்வை தடுக்க இந்த 3 பொருட்களைக் கொண்டு ஒரு சிகிச்சை முறை தெரியுமா!!

nathan