இன்றைக்கு யாருக்குமே தலையில் எண்ணெய் வைத்துச் சென்று வரும் பழக்கம் இருப்பதில்லை. அதை விட ஃப்ரீ ஹேர் என்று சொல்லி தலை முடியை பராமரிப்பதேயில்லை. இதனால் தலைக்கு தேவையான போஷாக்கு கிடைக்காமல் அரிப்பு ஏற்ப்பட்டு பொடுகுத்தொல்லை உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. நமது தோல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும். இறந்த செல்களை தள் ளி, புதிய செல்களை உருவாக்கும். இந்த வேலை பொடுகினால் வேகமாக செய்யு ம்படி ஆகிறது. அதிகளவு செல்கள் உரு வாகி, ஒன்றோடொன்று ஒட்டிக்கொண் டு செதில் போல் ஆகின்றன. மண்டைத் தோலின் மேற்புர செல்கள் அதிகமாக இறந்து வெளியேறுவது தான் பொடுகு.தீவிர சரும வியாதியான சோரியாசிஸ்ஸின் ஆரம்ப அறிகுறிகளும், பொடுகு போலத் தான் தோன்றும்.
காரணம் : ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, நோய் எதிர்ப்புத் தன்மையின் மாறுபாடு, அதீத மனஉளைச்சல், தட்பவெப்பநிலை மாறுபாடு, முகப்பரு, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள தோல், தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக் கொள்ளுதல், அதிக உடல் பருமன் போன்றவை இதற்குக் காரணமாகின்றன. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம். எக்ஸீமா(Eczema), சொரியாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நோய்களாளும் பொடுகு வரலாம். எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது போன்ற காரணங்களாலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
கெமிக்கல் : இதைத் தவிர பருவ மாற்றங்கள், ஹேர் ஸ்ப்ரே அதிகமாக பயன்படுத்துவது, ஹேர் டை பயன்படுத்துவது,ஹேர் ஸ்ட்ரயிட்னிங்,ஹேர் க்ர்ல் செய்வது,ஹேர் அடை பயன்படுத்துவது, ஈரத்தலையுடன் அதிக நேரம் செலவிடுவது,மன அழுத்தம் ஆகியவையும் பொடுகு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாகும்.
அறிகுறிகள் : இந்நோய் உள்ளவர்களுக்குத் தோலின் தன்மையில் மாற்றம் காணப்படும். தலை, கண் புருவம், மூக்கு, உதடு, காதின் பின்பகுதி, நெஞ்சு போன்ற பகுதிகளில் இது வரலாம். பின்னர் இது பொடுகு போல மாறும். அரிப்பு ஏற்படும், முடி உதிரும். பார்த்தவுடன் இதைக் கண்டறிந்துவிட முடியும். இது Psoriasis இல்லை என்பதை, பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
வகைகள் : பொடுகினை இரண்டு வகையாக பிரிப்பார்கள். ஒன்று… கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பது. இரண்டு… எண்ணெய் பசையுடன் இருப்பது. முதல் வகையினை கவனிக்காமல் விட்டால் அது சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களை ஏற்படுத்திவிடும். இதன் முலம் நெற்றியில் சின்ன சின்ன பருக்கள் வந்து முக அழகும் பாழாகிவிடும். இரண்டாம் வகையில் முடி உதிர்தல் அதிகமாக நிகழும். தலையில் இருந்து ஒருவித துர்நாற்றமும் வரும்.
யாருக்கு வரும் : பொதுவாக இளைமைக் காலத்தில் தோன்றும் இது நடுத்தர வயது வரை நீளக் கூடும். ஆயினும் முதியவர்களுக்கு வராது என்று சொல்ல முடியாது. சிலருக்கு முதுமை வரை தொடர்ந்து இருக்கக் கூடுமாயினும் பெரும்பாலும் வயதாகும்போது அதன் வேகம் குறைந்துவிடும். பெண்களைவிட ஆண்களுக்கு பொடுகுத் தொல்லை அதிகமாயிருப்பதற்குக் காரணம் அவர்களது தலையில் கூடியளவு எண்ணெய்ச் சுரப்பிகள் இருப்பதாகும். ஆண்களுக்கு ஹார்மோன்கள் அடிப்படைக் காரணமாயிருக்கலாம் என நம்பப்படுகிறது. எண்ணெய்த் தன்மையுள்ள சருமம் உள்ளவர்களுக்கு அதிகம் தோன்றலாம்.
சத்துக்குறைபாடு : ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்கிறவர்களுக்கு பொடுகுத் தொல்லை ஏற்படுவதுண்டு. குறிப்பாக ஜிங்க் மற்றும் விட்டமின் பி சத்து குறைபாடு இருந்தாலும் இப்பிரச்சனை ஏற்படுவதுண்டு.
ஷாம்பு : பொடுகு கட்டுப்படுத்த முடியாத பிரச்சனை அல்ல. சற்று அதிக காலம் எடுக்கக் கூடியது என்பதால் சற்று பொறுமையாகவும், தொடர்ந்தும் அக்கறை எடுப்பது அவசியமாகும். பொதுவாக மென்மையான ஷம்பூக்களை உபயோகித்து தலையைச் சுத்தமாக வைத்திருப்பது மட்டுமே பலருக்கு அதன் தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கும். முடியாதபோது மருத்துவ ஷம்பூக்களை நாடவேண்டி நேரிடும். Zinc,Coal Tar, சலிசலிக் அமிலம், செலீனியம் , பங்கசுக்கு எதிரான மருந்துகளான Ketoconazole கலந்தவை எனப் பல வகையுண்டு. மருத்துவ ஆலோசனையுடன் தங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உணவு : நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சிறிது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய்ப் பசை கிடைக்கிறது. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடியைக் காப்பாற்றலாம். வாரம் இருமுறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும். தலையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தவிர்க்க : தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள ஷாம்புவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம்.இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.
எலுமிச்சை தோல் : மூன்று அல்லது நான்கு எலுமிச்சைப் பழ தோல்களை எடுத்து நான்கு அல்லது ஐந்து காப் தண்ணீருடன் சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்க விடுங்கள். அது குளிர்ந்த பின்னர், இந்த கலவையை வைத்து முடியை வாரம் ஒரு முறையாவது அலசவும்
வெந்தயம் : இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை எடுத்து, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விட்டு, மறுநாள் காலை அதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முடியிலும், தலை சருமத்திலும் படுமாறு தேய்த்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும். பின் 30 நிமிடங்கள் கழித்து முடியை நன்கு தண்ணீரில் அலச வேண்டும். இந்த சிகிச்சையை தொடர்ந்து 4 வாரங்கள் மேற்கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை ஜூஸ் : குளிக்க போகும் முன், தலை சருமத்தில் எலுமிச்சை ஜூசை வைத்து நன்கு மசாஜ் செய்து, 15-20 நிமிடங்களுக்கு பின் தலையை தண்ணீரில் அலசுங்கள். இந்த சிகிச்சை முடியின் பசைத் தன்மையை குறைத்து, பொடுகை ஒழித்து, கூந்தலை ஜொலிக்க செய்யும்.
வினிகர் : சமமான அளவில் தண்ணீரையும், வினீகரையும் சேர்த்து ஒரு கலவையை தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலை எழுந்தவுடன் மிதமான ஷாம்புவால் தலை முடியை அலசுங்கள்.
தயிர் : தலையிலும், தலைச் சருமத்திலும் படுமாறு தயிரை தடவிக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்திற்கு ஊற விடுங்கள். பின் மிதமான ஷாம்பூவால் தலை முடியை நன்றாக அலசுங்கள். இதனை வாரம் இரண்டு முறையாவது செய்ய வேண்டும்.
முட்டை : இரண்டு முட்டைகளை எடுத்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். அந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, பின் ஒரு மணி நேரம் கழித்து முடியை அலசுங்கள். இந்த சிகிச்சை பொடுகை ஒழிக்க மட்டுமல்லாமல், முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் உதவும்.
ஆயில் மசாஜ் : பொடுகை நீக்க பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி, தலைச் சருமத்திற்கு மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் நன்கு ஊற விட்டு, காலையில் எழுந்ததும், தலையை ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.
கற்றாழை : குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கற்றாழை ஜெல்லை, தலைச் சருமத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து ஒரு ஷாம்புவை கொண்டு தலையை அலசிக் கொள்ளவும்.
வேப்பிலை : சில வேப்ப இலைகளை எடுத்து, அதை நன்கு பேஸ்ட் செய்து, அதனை அப்படியே தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் தலையை கழுவிக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை இப்படிச் செய்து வர பொடுகுத்தொலை மட்டுமல்லாது தலையில் வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கூட நீங்கிடும்.
துளசி மற்றும் நெல்லிக்காய் : துளசி மற்றும் நெல்லிக்காய் தனித்தனியாக அரைத்து ,கலந்து ஒரு பசையை தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த பசையை கொண்டு தலைச் சருமத்தில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் ஷாம்புவால் தலைமுடியை நன்றாக அலசுங்கள்.
பூண்டு : இரண்டு டீஸ்பூன் பூண்டு பொடியை, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறோடு கலந்து பேஸ்ட் செய்து, அதனை தலைச் சருமத்தில் தேய்த்து, 30-40 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்னர் ஷாம்புவைக் கொண்டு குளிர்ந்த நீரில் முடியை அலசுங்கள்.
இஞ்சி மற்றும் பீட்ரூட் : இஞ்சி மற்றும் பீட்ரூட்டை ஒன்றாக அரைத்து கொண்டு, அந்த பசையை கொண்டு தலையில் நன்கு மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற விடுங்கள். மறு நாள் காலை, முடியை நன்றாக அலசுங்கள். இதனை தொடர்ச்சியாக 4-5 இரவுகள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்