பெண்களை போலவே ஆண்களுக்கும் சிவப்பாக, அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சொல்லப்போனால் பெண்களை விட ஆண்கள் தான் தங்களது முகத்திற்கு அதிக பாரமரிப்பு தர வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அவர்கள் தான் மிக அதிக நேரம் வெயிலில் அலைகிறார்கள். அவர்களுக்கு தான் அதிகமாக வெயிலில் அலைவதால், முகம் கருமையாகின்றது. மேலும் தூசி புகைகள் போன்றவை தொடர்ந்து படுவதால் முகப்பருக்களும் வருகின்றன.
ஆண்கள் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டியது அவசியமாகும். எண்ணெய் பசை சருமத்தை கொண்ட ஆண்கள் முகத்திற்கு சோப்பிற்கு பதிலாக பேஸ் வாஷை பயன்படுத்தலாம்.
முதலில் தான் ஆண்கள் தங்களது முக அழகை பற்றி கவலைப்படாமல் இருந்தார்கள். ஆனால் இப்போது எல்லாம் பெண்களை விட ஆண்கள் தான் தங்களது அழகு விஷயத்தில் அதிகமாக கவனம் செலுத்துகின்றனர். இந்த பகுதியில் ஆண்களின் தோற்றத்தை மேம்படுத்தும் சில அழகுக்குறிப்புகளை காணலாம்.
சந்தனம் சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் . சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனால் உங்களது முகம் பொலிவடையும்.
தக்காளி தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 – 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.
பால் முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.
இளநீர் சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை சீக்கிரமாக காண முடியும்.
சீரகம் மற்றும் முள்ளங்கி சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.
புதினா மற்றும் எலுமிச்சை புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம். இவை முகத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கும். இவை முகத்தின் நிறத்தை கூட்டுவதையும் கண்கூடாக காணலாம்.
முட்டை முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.
அன்னாசி பழம் அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சன் ஸ்க்ரீன் லோஷன் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடுமையான வெயில் இருக்கும். அந்த நேரத்தில் பைக் ஓட்டுபவர்கள் முகத்துக்கும் கைகளுக்கும் சன் ஸ்க்ரீன் லோஷன் தடவிக்கொள்ள வேண்டும். எண்ணெய் சருமம்கொண்டவர்கள் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தக் கூடாது. ஸ்லிப்பர் போடுபவர்கள், பாதங்களிலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்.
மாய்ஸ்சரைசர் மாய்ஸ்சரைஸர் பயன்படுத்தினால், சருமத்தின் கடினத்தன்மை மறைந்து, மென்மையாக மாறும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் மாய்ஸ்சரைஸர் பயன்படுத்த வேண்டாம்.
கரும்புள்ளிகள் பேஷியல் செய்வதால், முகத்தில் உள்ள அழுக்குகள் படிப்படியாக நீக்கப்பட்டு, கரும்புள்ளிகள் நீக்கப்படும். நீராவி பிடிப்பதால் முகம் புத்துணர்ச்சி அடைவதோடு பிரகாசமாகவும் இருக்கும். முகத்தைச் சுத்தப்படுத்தவே ஃபேஷியல்.
தண்ணீர் அதிகளவு தண்ணீர் குடிப்பது உதடு வறண்டு போகாமல் பாதுகாக்கும். பொதுவாகவே, தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வது சருமத்தைப் பொலிவாக்கும். பழங்கள் அதிகம் சாப்பிடுவது, உதட்டை அழகாக்கும். இரவு நேரத்தில் உதட்டில் வெண்ணை தடவிவிட்டுப் படுக்கலாம். பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை உதட்டுக்குத் தடவுதவன் மூலம், உதடு கருமையாகமல் தடுக்க முடியும்.
பேரீச்சம் பழம் கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.
கண்களுக்கு கண்களுக்கான க்ரீம் தடவ சிறந்த நேரம் இரவு தான். இரவு நேரத்தில் கண்களுக்கான க்ரீமை தடவி மசாஜ் செய்து உறங்கினால், காலையில் எழுந்த பின் கண்கள் பொலிவோடு அழகாக காணப்படும்.
மென்மையான சருமத்திற்கு… காலையில் எழுந்த பின் உங்கள் சருமம் மென்மையாக இல்லையா? அப்படியெனில் இரவில் படுக்கும் போது கலோரி குறைவான டயட் அல்லது சாலட் மற்றும் ஜூஸ் போன்றவற்றை எடுத்து வாருங்கள். இதனால் பஞ்சு போன்ற சருமத்தைப் பெறலாம்.
குங்குமாதி தைலம் ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதனை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒருமுறை முகத்திற்கு மசாஜ் செய்யவும். மசாஜ்க்கு பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேஸ் பேக் போட வேண்டும். இதனால் முகம் நிச்சயமாக நல்ல நிறம் பெறுவது உறுதி.
உணவு பச்சைக்காய்கறிகள், பிரஷ் ஆன பழங்கள் போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது என்பது நன்மை தரும். துரித உணவுகளை போதுமான வரை தவிர்ப்பது என்பது நல்லது.