28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
14 1510665341 5
தலைமுடி சிகிச்சை

முடி உதிர்வை தடுக்க இந்த 3 பொருட்களைக் கொண்டு ஒரு சிகிச்சை முறை தெரியுமா!!

குளிர் காலம் வந்தாலே முடி உதிர்தல், வறட்சி, பொடுகு என பல தொல்லைகள் ஏற்படும். அதுவும் கொத்து கொத்தாக கூந்தல் உய்திர்வதால் பார்க்கவே மனதிற்கு சங்கடம் தரும். கூந்தல் உதிர்வை தடுக்க என்ன செய்தாலும் பலனில்லை என அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம்.

ஓரிரு தடவை முயற்சித்து பின் முன்னேற்றம் இல்லை என சிலர் விட்டுவிடுவார்கள். இன்னும் சிலர் கூந்தல் உதிர்வு கம்மியாகிவிட்டது. இனி இந்த குறிப்புகளை பயன்படுத்த வேண்டாம் என விட்டு விடுவார்கள். இரண்டுமே தவறு.
எப்படி நீங்கள் தினமும் சாப்பிடுகிறீர்களோ, குளிக்கிறீர்களோ அப்படி தினமும் உங்கள் கூந்தலை கவனிக்காவிட்டால் மீண்டும் மீண்டும் பாதிப்புகள் தொடரத்தான் செய்யும்.

உங்களுக்கு நீண்ட கூந்தல் வேண்டும். அடர்த்தியாக வேண்டும் என்று நினைத்தால் முறையாக பராமரியுங்கள். உங்களின் கூந்தல் உதிர்வை தடுத்து வளர்ச்சியை தூண்டச் செய்யும் 3 பொருட்களைக் கொண்டு எப்படி சிகிச்சை ஆரம்பிக்கலாம் என தொடர்ந்து படியுங்கள்.

தேவையானவை :
மீடியம் சைஸ் வெங்காயம் – 5
தேன் – 1/2 கப்
வாசனை எண்ணெய் – 10 துளிகள்.

செய்முறை
ஸ்டெப் – 1
வெங்காயத்தை தோலை உரித்து பொடிப்பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு எடுங்கள். வெங்காயம் பெரிதாக இருந்தால் அதன் காரத்தன்மை கூந்தலில் எரிச்சலை உண்டாக்கும். ஆகவே நடுத்தர அளவில் வெங்காயங்களாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

ஸ்டெப்- 2 : தேனை அரைக் கப் அளவு எடுத்து அதனை வெங்காயச் சாறுடன் கலக்க வேண்டும். வெங்காயச் சாறுடன் தேன் நன்றாக சேரும் வரை கலக்குங்கள். இல்லையென்றால் தலையில் த்டவும்போதும் வெங்காயச் சாறு தனியாக தேன் தனியாக பிசுபிசுப்புடன் இருக்கும்.

ஸ்டெப் – 3 இந்த வெங்காய- தேன் கலவையில் இறுதியாக வாசனை எண்ணெய் 10 துளிகள் சேருங்கள். வாசனை எண்ணெய் எதுவாகவும் இருக்கலாம். உங்களுகு பொடுகு இருந்தால் தெயிலை மர எண்ணெய் அல்லது யூகலிப்டஸ் எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம். வறட்சி அதிகம் என்றால் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை : இப்போது இந்த கலவையை நீங்கள் பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஸ்கால்ப்பாக எடுத்து இந்த கலவையை தடவுங்கள். ஸ்கால்ப்பில் படும்படியே நன்றாக தடவுவது முக்கியம். மீதமுள்ள எண்ணெயை நுனி வரை பூசுங்கள்.

வாரம் 2 முறை : அதனை அப்படியே 45 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரில் மைல்ட் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரம் இருமுறை செய்தால் விரைவில் நல்ல பலன் தரும்.

வெங்காயத்தின் பலன் : வெங்காயத்தில் சல்ஃபர் இருக்கிறது. முடி மெலிவதை தடுக்கிறது. கூந்தல் செல்களை தூண்டுவதால் மிகவவும் பாதிக்கப்பட்ட கூந்தல் கூட ஊட்டம் பெற்று அடர்த்தியாக கூந்தல் வளரத் தொடங்கும். நரை முடியை கூட தடுக்கும்.

தேன் : தேன் சிறந்த மாய்ஸ்ரைஸர். அதுமட்டுமல்லாது கூந்தலில் தங்கும் அழுக்குகளையும் சுத்தப்படுத்துகிறது. பொடுகு உண்டாவதை தடுக்கிறது. வறட்சியைப் போக்கி ஈரப்பதம் அளிக்கிறது.

வாசனை எண்ணெய்கள் : வாசனை எண்ணெய்கள் நீரினை தலைக்குள் போகவிடாமல் காக்கிறது. இதனால் சைனஸ் வராமல் காக்கப்படும். கிருமிகளை அழிக்கும். கூந்தல் வளர்ச்சியை தூண்டும்.14 1510665341 5

 

Related posts

ஆண்களே! முடி அதிகமா கொட்டுதா? அப்ப இதெல்லாம் செய்யாதீங்க…

nathan

முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் ஜூஸ்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கும் ஷாம்பு !

nathan

அடர்த்தியான, நீளமான முடியை பெற என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது!!!

nathan

முடியில் ஸ்பிலிட் எண்ட்ஸ் (பிளவு முனைகள்) இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதோ…

nathan

முடி வெடிப்பைத் தடுக்கும் சில அற்புதமான வீட்டு வைத்தியங்கள்!

nathan

கூந்தல் சந்தேகங்கள்…

nathan

முடி உதிர்வை தடுக்க எழிய வழிமுறைகள்..!தலைக்கு எண்ணெய்யை ஒரு போதும் இப்படி தேய்காதீர்கள்..

nathan

இந்த எண்ணெயை எலுமிச்சை சாறுடன் மசாஜ் செய்க.. பொடுகு பிரச்சனைக்கு தீர்வு

nathan