28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
gram flour face pack 720x480 1
முகப் பராமரிப்பு

ஒளிரும் பிங்க் நிற சருமத்தை பெற கடலை மாவை இதனுடன் இப்படி கலந்து பயன்படுத்தனும் தெரியுமா?அப்ப இத படிங்க!

அனைத்து பெண்களுக்கும் தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த அழகை எப்படி பெருவது என்பது பற்றி தெரியாது… சில பெண்கள் சீக்கிரமாக அழகாக வேண்டும் என்று கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த க்ரீம்கள் போன்ற கெமிக்கல்களை பயன்படுத்துவதால் சிறிது நாட்களுக்கு முகம் பொலிவடைவது போல தோற்றமளித்தாலும் கூட,

நாளடைவில் உங்களுக்கு வேறு சில பிரச்சனைகள் தோன்றிவிடும்.
அல்லது சருமம் மேலும் கருப்பாகிவிடும். என்றைக்குமே இயற்கையான முறையில் அழகை பெருவது தான் சிறந்த வழியாகும். இயற்கை முறையில் நீங்கள் அழகை பெறுவது என்பது சற்று தாமதமானதாக இருந்தாலும் கூட, உங்களுக்கு அது ஒரு நிரந்தர தீர்வாக அமையும்… தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…

பெண்கள் தங்களது முகத்தை என்ன தான் பேணி பாதுகாத்தாலும், கூட சில வகையான பிரச்சனைகள் அவர்களது முகத்தை வந்து தாக்க தான் செய்கிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க பெண்கள் நிச்சயமாக இயற்கை முறையில் தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது… இந்த பகுதியில் பெண்களின் சருமத்தை தாக்கும் அத்தனை பிரச்சனைகளையும் விலை மலிவாக கிடைக்கும் கடலை மாவை கொண்டு எப்படி போக்குவது என்பது பற்றி காணலாம்.

சருமம் மென்மையாக…:சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும்.

பளிச்சென்ற தோற்றம் பெற..:அழகை பேணிக்காப்பதில் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது. பொலிவிழந்த சருமத்தை இளைமையூட்ட இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊற விடவும், நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என தோன்றும்.

குளிக்கும் போது..:குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் முகம் வழுவழுப்பாகும். சுருக்கம் ஏற்படாது. இளமையாக காட்சியளிக்கலாம். இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், 2 ஸ்பூன் ரோஸ்வாட்டர், 4 ஸ்பூன் பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும்.10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது.

எண்ணெய் பசை சருமம்:சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக இருந்தால் அதற்கு கடலை மாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போட்டால் முகம் அழகு பொலிவு பெரும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து அதில் தயிர் , எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.

சோர்வான முகம்:சிலருக்கு முகம் எப்போதும் சோர்ந்து வாடியபடி இருக்கும். அந்த முகம் பொலிவாக இருக்கவும் கடலை மாவு உதவும். தோலுடன் இருக்கும் அரை கிலோ கடலை பருப்பு, துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி, நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அரைத்த பொடியை போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு பூசி ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவாக காணப்படும். சோர்வு தெரியாது. வாரம் ஒரு முறை செய்தால் பள,பளவென முகம் பிரகாசமாக இருக்கும்.

வெயில் கருமையை போக்க..:வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு, சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். தேங்காய் பால் 1 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசை போல பிசைந்து, பின்னர் முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இப்படி செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

கடலைமாவு மஞ்சள்:தொன்று தொட்ட முதியோர் காலத்திலிருந்து பாரம்பரியப் பொருனாக பயன்படுத்தப்படும் பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.

உருளைக்கிழங்கு:உருளைகிழங்கு சாறுடன் கடலை மாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும். இது உங்களுக்கு பார்லர்களில் பேசியல் செய்தது போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கும். ஆயிரக்கணக்கான பணத்தை பார்லர்களில் செலவிடுவதை விட இந்த முறையை செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

குளியல் பவுடர்:முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலை பருப்பு கால் கிலோ, பாசி பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் என மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்.

வறட்சியைப் போக்க..:கடலை மாவில், தேன், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசினால், வறட்சி நீங்கி, முகம் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்.

பரு அதிகமா இருக்கா?:சிலரது சருமத்தில் முகப்பருக்கள் அதிகம் இருக்கும். அத்தகைய முகப்பருக்களை போக்குவதற்கு பல பொருட்களைப் பயன்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கடலை மாவில் சிறிது சந்தனப் பவுடர், மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

தேவையற்ற முடியா?:சில பெண்களுக்கு, வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு, கடலை மாவில் மஞ்சள் தூளை சேர்த்து, நீர் ஊற்றி போஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில், முடி வளரும் இடத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், நாளடைவில் முடியின் வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.

மூட்டுகளில் கருமை:நிறைய பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு, ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது கடலை மாவு மாஸ்க் தான். அதற்கு கடலை மாவில், தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவி, நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், கருமை விரைவில் போய்விடும்.gram flour face pack 720x480 1

Related posts

பெண்களே பளிச்சென்ற முகம் வேண்டுமா? அப்ப தினமும் ஆவி புடிங்க….

nathan

பிளாக் ஹெட்களை போக்க உதவும் அசத்தலான டிப்ஸ்!!!

nathan

உங்க சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க இந்த விஷயங்கள மறக்காம செய்யணுமாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா புளியை பயன்படுத்தி எப்படி அழகாவது.?

nathan

பேக்கிங் சோடாவை கண்களைச் சுற்றி தடவுவதால் ஏற்படும் அற்புதங்கள்!

nathan

பழக்கூழை தினமும் முகத்தில் பூசிக்கொள்ளலாம். சருமத்திற்கு நிறமும், மினிமினுப்பும் கிடைக்கும்

nathan

ரெடிமேட் கொலாஜன் மாஸ்க்

nathan

கரும்புள்ளிகள், பருக்களை போக்கும் பீட்ரூட் ஃபேஸ் பேக்

nathan

உங்களுக்கு தெரியுமா இயற்கை முறையில் வீட்டிலேயே முக அழகை பராமரிக்கும் வழிகள்

nathan