25.8 C
Chennai
Thursday, Jan 29, 2026
03 1509701265 1
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா தலையில் இதனை தூவினால் பொடுகுத்தொல்லை இனியில்லை!

உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில் அதேயளவு அதிக முக்கியத்துவம் கொடுக்கிற இன்னொரு விஷயம் சருமம் தான். ஆம், சருமத்தில் எந்த பாதிப்பும் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்று என்னென்ன முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் சமையலில் அதிகமாக பயன்படுத்துவோம். அதில் ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.இவை உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை செய்கிறது.

செரிமாணத்தை துரிதப்படுத்துவதும், தொண்டைக்கட்டு, குளிர்காய்ச்சல், நரம்புகளை வலுப்படுத்துவது என நமக்கு பெரும் துணையாய் இருக்கிறது, அதே நேரத்தில் ஏலக்காயை பயன்படுத்தி உங்களுடைய சருமத்தையும் தலைமுடியையும் நீங்கள் அழகாக பராமரிக்கலாம் தெரியுமா?

ஏலக்காயில் அதிகப்படியான அண்ட்டி பாக்டீரியா மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் துகள் இருக்கின்றன. இவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதுடன் சருமத்தில் ஊடுருவும் பாக்டீரியாக்களை அழித்திடும்.

நிறம் : சருமத்திற்கு பயன்படுத்தும் பல்வேறு ப்ராடெக்ட்களில் இந்த ஏலக்காய் எண்ணெய் கலக்கப்படுகிறது. இது சருமத்தில் ஏற்படுகின்ற நிறமாற்றங்களை தவிர்த்து, நிறத்தை மேம்படுத்தும். ஏலக்காய் எண்ணெய் கடைகளில் கிடைக்கும். அதனை இரவு தூங்கச் செல்வதற்கு முன்னதாக முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். மறு நாள் காலை வழக்கமாக நீங்கள் குளிப்பது போல குளித்துவிடலாம். இதனை தினமும் கூட நீங்கள் செய்யலாம்.

ரத்த ஓட்டம் : ஏலக்காயில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது. இவை உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதோடு இவை சருமத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதனால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

அலர்ஜி : ஏலக்காயில் இருக்கும் ஆண்ட்டிபாக்டீரியல் துகல்கள் அலர்ஜியை போக்கிடும். ஏலக்காயை அரைத்து சலித்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அதனை உங்கள் முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி விடலாம். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பினால் ஏற்படும் அலர்ஜியை தவிர்க்க முடியும்.

உதடுகளுக்கு : உதடுகள் வரண்டு போய் இருந்தால் அதனை சரி செய்ய ஏலக்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். ஏலக்காய் எண்ணெய் கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கிக் கொண்டு அந்த எண்ணெயை நேரடியாக உதட்டிற்கு தடவலாம். அல்லது அத்துடன் இரண்டு சொட்டு பாதாம் எண்ணெய் கலந்து உதவுகளுக்கு தடவலாம். இது உதட்டின் வறட்சியை போக்குவதட்ன் உதட்டிற்கு தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கிறது.

டோனர் : ஏலக்காய் மிகச்சிறந்த டோனராக செயல்படும் . இரண்டு ஸ்பூன் ஏலக்காய்த் தூளை ஒரு ஸ்பூன் பாலில் கலந்து முகத்தில் மாஸ்க்காக போட வேண்டும். பின்னர் பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இதனை தொடர்ந்து செய்வதால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்க முடியும்.

தலைமுடி : ஏலக்காய் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். வாரம் ஒரு முறை ஏலக்காய் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இது தலையில் ஏற்படும் தொற்றுக்களை நீக்கிடும்.

பொடுகு : தலையில் எண்ணெய் தடவுவதற்கு முன்னர் ஏலக்காய் தூளை நேரடியாக தலையில் தூவிக் கொள்ளுங்கள். அப்படியில்லையெனில் இரண்டு ஸ்பூன் ஏலக்காய்த்தூளுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையின் எல்லா பாகங்களுக்கும் பரவுமாறு தடவிக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் தலைக்குளிக்கலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கிடும்.

பசி : ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம். நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம்.

வாயுத்தொல்லை : வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

துர்நாற்றம் : ஏலக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு அதிகம் உள்ளதால், வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகளை அழித்துவிடும். இதன் இனிமையான சுவை மற்றும் மனம் துர்நாற்றத்தைப் போக்கிவிடும். ஏலக்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்தலாம் அல்லது தினமும் சாப்பிட்டவுடன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மெல்லலாம். இதனால் சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும்.03 1509701265 1

Related posts

தலைமுடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?

nathan

பொடுகை போக்கி, இளநரையை தடுக்கும் வெந்தயம்

nathan

பளபளப்பான தலை முடிக்கு டிப்ஸ்

nathan

கூந்தல் 1 அடிக்கு மேல வளர மாட்டேங்குதா? இதை ட்ரை பண்ணுங்க !!

nathan

பேன் தொல்லையை போக்கும் இயற்கை வழி

nathan

நரை முடி தவிர்க்க இயற்கை ஹேர் டை 5

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பளபளப்பான பட்டுப் போன்ற உறுதியான கூந்தலுக்கு 10 எளிய வழிகள்!!!

nathan

வழுக்கைத் தலையாவதை தடுக்கும் பாட்டி வைத்தியம்

nathan

கூந்தல் உதிர்வை தடுத்து வளர்ச்சியை தூண்டும் மசாஜ்

nathan