24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
09 1510229454 5
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா உடலில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற இப்படியொரு வழியா!

வேக்சிங் என்றாலே பலருக்கும் பயம். காரணம் அது ஒரு வகையில் இடைஞ்சலாகவும் அதே சமயம் அதீத எரிச்சலையும் வலியையும் தரக்கூடியதாக இருக்கும்.
உடலில் இருக்கும் முடியை அகற்ற பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது, அப்படி அகற்றும் போது சிலருக்கு டார்க் ஸ்பாட், மற்றும் அலர்ஜி போன்றவை ஏற்படும்.

வேக்சிங் செய்யும் போது அதீத வலி ஏற்படாமல் இருக்கவும், பிற அலர்ஜிகள் மற்றும் டார்க் ஸ்பாட் ஏற்படாமல் இருக்கவும் சில அற்புதமான யோசனைகள்.

சுத்தம் : பொதுவாக வேக்சிங் செய்வதற்கு முன்னால் ஏதேனும் ஜெல் அல்லது கிளன்சர் தடவப்படும். இது அப்பகுதியில் இருக்கும் சருமத்தை சுத்தமாக்குவதற்காக. சருமத்தை சுத்தமாக்குவதை விட இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? நாம் அகற்ற நினைக்கும் முடியை முதலில் வலுவிழக்கச் செய்ய வேண்டும். கிருமிகள், அழுக்கு போன்றவை முடியில் அதிகமாக தங்கியிருக்கும். அவற்றை எல்லாம் நீக்கும் பொருட்டு முழுமையாக சுத்தமாக்க வேண்டும். அப்போது தான் வேக்சிங் மேற்கொள்ளும் போது அதீத எரிச்சல் ஏற்படாது.

நீளம் : ஒரு இன்ச் அளவு வளர்ந்த முடியை மட்டுமே வேக்சிங் மூலமாக அகற்ற வேண்டும். நீளம் குறைவான முடியை வேக்சிங் செய்தால் அது அதீத வலியை ஏற்படுத்தும். நீளமாக இருக்கும் முடியைத் தான் எளிதாக அகற்ற முடியும்.திக்காக மற்றும் அரைகுறை நீளமுடைய முடி அகற்றுவதற்கு மிகவும் சிரமமானதாக இருக்கும்.

சிறிய பகுதி : வேக்சிங் செய்யும் போது நீளமான பகுதியாக ஒரே முயற்சியில் முடியை நீக்க வேண்டாம். இப்படிச் செய்தால் அதீத வலியைக் கொடுக்கும். இதற்கு பதிலாக சிறிய சிறிய பகுதியாக எடுத்தால் வலி அவ்வளவாக இருக்காது. இது சற்று அதிக நேரம் பிடித்தாலும் உங்களுக்கு எளிதாகவும் வலியில்லாத வேக்சிங்கும் செய்திடலாம்.

சீரம் : சந்தையில் சருமத்தை மதமதப்பாக்கிடும் சீரம் கிடைக்கிறது. அவற்றை முதலில் தடவிக்கொள்ளலாம். இது வேக்சிங் வலியை உணரச் செய்யாமல் தடுத்திடும்.அதோடு இதற்கென்றே பிரத்யோக வலி நிவாரணிகளும் கிடைக்கிறது. அவற்றையும் பயன்படுத்தலாம். குறைந்தது வேக்சிங் செய்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு இதனைப் பயன்படுத்த வேண்டும்.

குளியல் : வேக்சிங் செய்வதற்கு முன்னால் சூடான நீரில் குளிக்க வேண்டும்.இது சருமத்துளைகளை விரிவாக்கும். அதோடு முடியின் வேர்கால்களும் இலகுவாகும் என்பதால் அதனை நாம் எளிதாக அகற்றிடலாம். உங்களால் பொறுத்துக் கொள்ள முடிகிற அளவில் சூடான குளியல் வேக்சிங்கை எளிமையாக்கும்.

லோஷன் : வேக்சிங் முடிந்த பிறகு பெரும்பாலும் அந்த இடத்தில் அரிப்பு, சிவந்து போதல், எரிச்சல் ஆகியவை ஏற்படும். இதனை கட்டுப்படுத்த லோஷன் பயன்படுத்தலாம்.ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும், சருமத்தை குளிர்விக்கும் லோஷன்களை நாம் பயன்படுத்தினால் எரிச்சல் சட்டென குறைந்திடும்.

ஐஸ் : வேக்சிங் முடிந்த பிறகு அதீத எரிச்சல் ஏற்பட்டால் அங்கே ஐஸ்கட்டியை வைத்து தேய்த்திடுங்கள். நேரடியாக தேய்க்காமல். சுத்தமான காட்டன் துணியில் ஐஸ் கட்டியை கட்டி அதை வைத்து சருமத்தில் தேய்க்கலாம். இது உடனடியாக ரத்த ஓட்டத்தை கொடுக்கும் என்பதால் எரிச்சல் குறைந்திடும்.

வொர்க் அவுட் : வேக்சிங் முடிந்து பிறகு கை கால்களை அசைத்து சின்ன வொர்க் அவுட் செய்யலாம். உங்கள் உடலை ஃபிலக்சிபிலாக வைத்துக் கொள்ளுங்கள்.இப்படிச் செய்வதால் கை கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் இதனால் சருமத்தின் எரிச்சல் குறையும்.

சோப் : வேக்சிங் முடிந்த பிறகு சருமத்தை சுத்தமாக்குகிறேன் என்று சோப், ஃப்ரேக்னென்ஸ் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். இதில் எக்கச்சக்கமான கெமிக்கல்கள் அடங்கியிருக்கும். அவை சருமத்தின் எரிச்சலை இன்னும் அதிகமாக்கிடும். அதனால அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது தான் நல்லது.

மாய்சரைசர் : வேக்சிங் செய்வதற்கு முன்னால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கிறதா என்று பாருங்கள். முதல் நாள் இரவிலிருந்தே சருமத்தில் மாய்சரைசர் க்ரீம் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.   கடைசி நேரத்தில் தடவுவதை விட இதனைத் தொடர்ந்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும். அதே சமயம். உங்கள் சருமத்தை பாதுகாக்க குறிப்பாக ஈரப்பதத்துடன் வைத்திருக்க நீங்கள் அதிகமான தண்ணீரை குடிக்க வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
09 1510229454 5

Related posts

சாமந்தி பூ ஃபேஸ் பேக்

nathan

தூய்மையான முகம் எப்படி பெறலாம்? சில சிறந்த ஆயுர்வேத குறிப்புகள் !!

nathan

உங்களுக்கு தெரியுமா அரிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

nathan

சூப்பர் டிப்ஸ்! முகத்தில் மருக்களா? இதை தடவினால் போதும்- ஐந்தே நாட்களில் தீர்வு

nathan

உங்கள் அழகை இரட்டிப்பாக்க இந்த பழத்தை உபயோகித்திருக்கிறீர்களா?

nathan

முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகள்

nathan

மேக்கப் செய்ய கொஞ்சம் கஷ்டமா ஃபீல் பண்றீங்களா? இதோ உங்களுக்காக ஈஸி ட்ரிக்ஸ்

nathan

முகத்திற்கு ஃபேஷியல் ஏன் அவசியம்?

nathan

பெண்களே அடர்த்தியான புருவங்களைப் பெற இந்த வழிகளை ட்ரை பண்ணி பாருங்க…

nathan