24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
cover 15 1510745141
கால்கள் பராமரிப்பு

கவணம் அடிக்கடி கால் வலி வருதா? அப்போ அதுக்கு காரணம் இது தான்!!!

உடல் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் அவை செயல்படுவதற்கான ஆற்றல் இருந்தால்தான் மொத்த உடலாலும் சீராக இயங்க முடியும். நம் உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆற்றல் ரத்தம் மூலமாகத்தான் கிடைக்கிறது

உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் ரத்தம் சரியாக வழங்காதபோது உடலில் பிரச்னை தொடங்குகிறது.

ஏன் அவசியம் ? : உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற தீவிரமான பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிடும். இவற்றைத் தவிர்க்க, ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கவேண்டியது அவசியம்

அறிகுறிகள் : முறையான இரத்த ஓட்டம் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்கும். ஆனால் இரத்த ஓட்டம் ஒருவருக்கு மோசமாக இருந்தால் கை மற்றும் கால்கள் அதீத குளிர்ச்சியை சந்திக்கும்.அதே நேரத்தில் குளிர்காய்ச்சல் கூட ஏற்படும். சிலருக்கு கை,கால்களில் வீக்கம் ஏற்பட்டு சரியாக இயக்க முடியாது.

காரணங்கள் : நீண்ட நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருப்பது, சத்தான உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது புகை மற்றும் மதுப்பழக்கம், அதிகமாக காபி குடிக்கும் பழக்கம் இருப்பது தான் நம் உடலில் ரத்த ஓட்டம் குறைவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

மருத்துவக் காரணங்கள் : இதைத் தவிர மருத்துவ ரீதியாக என்று பார்த்தல ஃபுட் அலர்ஜி, அனீமியா, நரம்புக் கோளாறுகள்,உயர் ரத்த அழுத்தம், ஒபீசிட்டி, தைராய்டு, கொலஸ்ட்ரால்,சர்க்கரை நோய் மற்றும் கர்ப்பமாக இருப்பது. இவையும் நம் உடலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதற்கு ஒரு காரணியாக இருக்கிறது.

கை கால்கள் : உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கிறதென்றால் அதன் அறிகுறியாக முதலில் நம் உடல் வெப்ப நிலையில் மாற்றம் தெரியும்,அதன் பிறகு கால்களில் தான் அதிகப்படியான அறிகுறி தெரிந்திடும். கால் மறத்துப் போகுதல்,கால் வலி ஆகியவை உண்டாகும். இதனால் கால்கள் வலுவிழக்கும். இது அதிகமாகும் பட்சத்தில் உங்கள் எடையை தாங்கும் சக்தியை உங்கள் கால் இழந்திடும். கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்ய நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்

பூண்டு : காலுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவுகளில் முதன்மையானது பூண்டு. பூண்டு குறைந்த ரத்த அழுத்தத்தை மாற்றிடும். ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பை கரைத்த ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. தினமும் தேனில் ஊறிய பூண்டு சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும்.

இஞ்சி : நம் அன்றாட சமையலுக்கு அதிகம் பயன்படுத்தக்கூடிய இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. அவற்றை எடுப்பதால் நம் ஜீரண சக்தி அதிகரிக்கிறது.அதோடு ரத்த ஓட்டத்தையும் துரிதப்படுத்துகிறது. இஞ்சியில் இருக்கக்கூடிய zingerone மற்றும் gingerols ஆகியவை நம் உடலில் தட்பவெட்பத்தை பராமரிக்க உதவுகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். தொடர்ந்து உங்கள் உணவுகளில் இஞ்சியை சேர்த்து வர அது உடலில் ஒரேயிடத்தில் ரத்தம் உறைந்து கிடப்பதை தவிர்க்கச் செய்யும். தினமும் காலையில் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்த நீரை பருகலாம். இல்லையெனில் இஞ்சி டீ தயாரித்து குடிக்கலாம். தற்போது சந்தைகளில் இஞ்சி மாத்திரை கூட கிடைக்கிறது, அதனை பயன்படுத்துவதற்கு முன்னால் மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள்.

டார்க் சாக்லெட் : டார்க் சாக்லெட்டில் அதிகப்படியான கொக்கோ தான் நிறைந்திருக்கிறது. இது ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தும்.அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி இதிலிருக்கும் குறிப்பிட்ட வகை பயோ கெமிக்கல் கால்களுக்கு ரத்தம் செல்வதை மேம்படுத்துகிறது.   Loading ad தினமும் சிறு துண்டு அளவு டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் அது உங்கள் ரத்த நாளங்களை விரிவாக்கும். இதனால் ரத்தஓட்டம் துரிதமாக நடைபெறும். டார்க் சாக்லெட் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் சாக்லெட் என்றாலே அதில் இனிப்புச்சுவையை தான் அதிகமாக சேர்த்திருப்பார்கள். அது போன்ற சாக்லெட்டுகள் வாங்குவதை தவிர்த்திட வேண்டும். மாறாக அந்த சாக்லெட்டில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமாக கோக்கோ இருக்கிறதா என்று பரிசோதித்து விட்டு வாங்கலாம்.

தினமும் சிறு துண்டு அளவு டார்க் சாக்லெட் சாப்பிடுவதால் அது உங்கள் ரத்த நாளங்களை விரிவாக்கும். இதனால் ரத்தஓட்டம் துரிதமாக நடைபெறும். டார்க் சாக்லெட் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் சாக்லெட் என்றாலே அதில் இனிப்புச்சுவையை தான் அதிகமாக சேர்த்திருப்பார்கள். அது போன்ற சாக்லெட்டுகள் வாங்குவதை தவிர்த்திட வேண்டும். மாறாக அந்த சாக்லெட்டில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமாக கோக்கோ இருக்கிறதா என்று பரிசோதித்து விட்டு வாங்கலாம்.

க்ரீன் டீ : க்ரீன் டீயில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. அவை உங்கள் உடலில் நச்சுக்கள் சேராமல் தவிர்க்கச் செய்திடும். இது உங்கள் உடலில் நிட்ரிக் ஆக்ஸைட் அளவை அதிகரிக்க உதவிடும். இதன் அளவு உயர்வதால் நம் ரத்த நாளங்கள் விரிவடைந்து ரத்தம் எளிதாக சென்று வரும்.

தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயில் அதிகப்படியாக நல்ல கொழுப்பு மட்டுமேயிருக்கிறது. அதனைக் கொண்டு மசாஜ் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெயை இரண்டு ஸ்பூன் அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை லேசாக சூடாக்கி கால்களில் தடவி மசாஜ் செய்திடுங்கள்.

மிளகு : மிளகில் capsaicin என்ற சத்து இருக்கிறது. இது உள்ளுருப்புகளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதினால் ஏற்படும் அறிகுறிகளை இது சரி செய்திடும்.கால் வலி,தலைவலி, அதீத குளிர் ஆகியவற்றை போக்க மிளகு உதவிடும். சூடான நீரில் மிளகுத்தூள் கலந்து குடித்து வாருங்கள். கர்பிணிப்பெண்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது.

மஞ்சள் : நாம் அன்றாடம் பயன்படுத்தும், அதே சமயம் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது இந்த மஞ்சள். சமையலில் தொடர்ந்து மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் சூடான பாலில் மஞ்சள் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைத்திடும். உங்களுக்கு ஏதேனும் அலர்ஜி இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு பயன்படுத்துங்கள்.

கோதுமை : கோதுமையில் மாவுச்சத்து சற்றுக் குறைவு என்பதால், உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுத்து, ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. நரம்பு மண்டலமும் மூளையும் நன்கு செயல்படவும், புதிய செல்கள் உற்பத்திக்கும் உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. தைமஸ் சுரப்பி விரைந்து செயல்பட, முழுக் கோதுமையில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் துணைசெய்கிறது.

மாதுளை : மாதுளைச்சாறு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொழுப்பைக் குறைக்கின்றன. ரத்தம் உறைதல் பிரச்னையில் இருந்து காக்கின்றன. தொடர்ந்து மாதுளை உண்பதன் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை மேம்படுத்தலாம்.

நன்னாரி : மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் சிறந்தது. மேலும், இந்த வேரில் ஆன்டிசெப்டிக் பொருள் நிறைவாக உள்ளது. இது, ரத்தத்தில் இருக்கும் கிருமிகளை அழித்துச், சுத்தமாக வைக்கிறது.

பீட்ரூட் : இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கான புரதமும் உள்ளது. பீட்ரூட்டின் மேல் இருக்கும் தண்டில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் நிறைவாக உள்ளதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

கற்றாழை : கற்றாழைச் சோற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. கற்றாழை, உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. ரத்த நாளங்களை ஆரோக்கியமாக்குகிறது. இதனால், ரத்த ஓட்டம் சீராகிறது.

உணவைத் தவிர : இந்த உணவுகளைத் தவிர, கால்களுக்கு வலுவூட்ட குறிப்பாக ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த வேறு என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா? ஹைட்ரோ தெரபி மேற்கொள்ளலாம். இது கால்களின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்திடும். தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். தொடர்ந்து ஒரேயிடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதை தவிர்த்து காலுக்கு அசைவு கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இதைத் தவிர காலுக்கு சூடான எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யலாம்.

கவனம் : அடிக்கடி களைப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்தை உணர்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் உடலின் உறுப்புகளுக்கு வேண்டிய ஆக்ஸிஜன் குறைந்துள்ளது. ஆக்ஸிஜன் குறைவதற்கு காரணம், இரத்த ஓட்டம் மோசமாக இருப்பது. எனவே இதைக் கொண்டு உங்கள் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். ஆண்களுக்கு உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால், இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டத்தின் அளவு போதிய அளவில் இல்லாமல், விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால், இரைப்பை குடல் பாதையிலும் இரத்தம் குறைவாக உந்தப்பட்டு, செரிமான மெதுவாக நடைபெறும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையையும் ஏற்படும்.

மூளை : மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு சீரான இரத்த ஓட்டம் அவசியம். ஆனால் இரத்த ஓட்டம் உடலில் சிறப்பாக இல்லாவிட்டால், மூளையின் செயல்பாடு குறைந்து கவனக்குறைவு மற்றும் ஞாபக மறதி போன்றவை ஏற்படக்கூடும். உடலில் மோசமாக இரத்த ஓட்டம் இருந்தால், உடலைத் தாக்கும் நோய்கிருமிகளை எதிர்த்துப் போராட முடியாமல், நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாகிவிடும். மோசமான இரத்த ஓட்டத்தினால், கல்லீரல் பசிக்கான சிக்னல் மூளையை அடையவிடாமல் செய்யும்.

ஆக்ஸிஜன் : உங்கள் உடலில் உள்ள திசுக்களுக்கு போதிய அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால், சருமத்தின் நிறத்தில் மாற்றத்தைக் காண முடியும். குறிப்பாக சருமம் கருஞ்சிவப்பு அல்லது நீல நிறமுடையதாய் காணப்படும். பலவீனமான நகங்கள் மற்றும் முடி உதிர்வது ஆகியவை மோசமான இரத்த ஓட்டத்தினால் ஏற்படுகிறது.cover 15 1510745141

 

Related posts

பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா

nathan

அழகான தொடைக்கு…

nathan

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்

nathan

பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு….

sangika

குதிகால் வெடிப்பை குணமாக்க வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சரிசெய்யலாம்!..

sangika

இதை ஆரோக்கியத்துக்குரியதாகவும் தேர்வு செய்வது அவசியம்…….

sangika

பட்டுப்போன்ற பாதம் பெற ஆலோசனைகள்

nathan

ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பாத வெடிப்பை சரி செய்வது எப்படி?….

sangika

பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்!

nathan