29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 10 1510299800
தலைமுடி சிகிச்சை

சீகைக்காயை இந்த வழிகளிலெல்லாம் பயன்படுத்தினால் முடி அடர்த்தியாகும் தெரியுமா!!

சிகைக்காய் ஆண்டாண்டுகளாக இந்தியர்கள் வைத்திருக்கும் நீளமான மற்றும் வலிமையான கூந்தலுக்கான இரகசியமாகும். இதை பல நூற்றாண்டுகளாக கூந்தல் வளர்ச்சிக்கும் மற்றும் அதன் ஒட்டுமொத்த நன்டைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கூந்தல் பராமரிப்பு பொருள் கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு பிரசித்தி பெற்றது. இது புரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மறறும் இதர மூலக்கூறுகள் செறிந்தது.

இதன் பன்முக நன்மைகளால், நீண்ட கரிய கூந்தலை பெற விரும்புபவர்களுடய உண்மையான விருப்பமாக திகழ்கிறது. எண்ணற்ற கூந்தல் பராமரிப்புப் பொருட்கள் கிடைக்கப்பெறும் இந்த யுகத்தில் கூட கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இன்றளவும் பல பெண்கள் சிகைக்காய் பயன்படுத்துவதையே விரும்புகின்றனர்.

நீங்கள் இதுவரை இந்த பாரம்பரிய முறையை முயற்சி செய்திருக்கவில்லை என்றால், இது முயன்று பார்ப்பதற்கான நேரம். இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட கடைகளில் வாங்கும் தயாரிப்புகளை மறந்துவிட்டு இந்த இயற்கையான மூலப்பொருளை உங்கள் கூந்தல் வளர்ச்சிக்குப் பயன்படுத்துங்கள்.

இன்று நாம் போல்ட்ஸ்கையில் இந்த அற்புதமான மூலப்பொருளைக் கொண்டு நேர்த்தியான கூந்தலைப் பெற நாங்கள் சில ஆற்றல் வாய்ந்த முறைகளை பட்டியலிட்டு உங்கள் முன் கொண்டு வந்து தருகிறோம். சிகைக்காய் தூளை சமமான நனமைகள் அடங்கிய தேங்காய் எண்ணெய், தயிர் மற்றும் பல பொருட்களோடு கலந்து பயன்படுத்தும் போது அதன் செயல்பாட்டை மேம்படுத்தலாம் மேலும் விரைவான விளைவுகளைப் பெறலாம். அதைப் பற்றி இங்கே பார்க்கலாம் வாருங்கள்.

தேங்காய் எண்ணையுடன் : 1 டீஸ்பூன் சிகைக்காய் தூளை 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் கலந்து கொள்ளவும். அந்தக் கலவையை உங்கள் உச்சந்தலை முழுதும் தடவவும். அதை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு அதை அலச ஒரு மிதமான ஷாம்பூவையும் இளஞ்சூடான நீரையும் பயன்படுத்தவும். இந்தக் கலவையை வாராந்திர அடிப்படையில் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யுங்கள்.

ஆம்லா எண்ணெயுடன் சிகைக்காய் தூள் பயன்படுத்துவது எப்படி: 1 டீஸ்பூன் சிகைக்காய் தூளை 2 டீஸ்பூன் ஆம்லா எண்ணையுடன் கலந்து கொள்ளுங்கள். இந்த பூச்சை உங்கள் உச்சந்தலை முழுவதும் பரவலாகத் த்டவுங்கள். இதை ஒரு மணி நேரம் காய விடுங்கள். காய்ந்த கலவையை அலச வெதுவெதுப்பான் நீரையும் மற்றும் ஷாம்பூவையும் பயன்படுத்துங்கள். கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க மாதம் ஒரு முறை இந்த கலவையைப் பயன்படுத்துங்கள்.

க்ரீன் டீயுடன் சிகைக்காய் தூள் பயன்படுத்துவது எப்படி: 1 டீஸ்பூன் சிகைக்காய் தூளுடன் 2 டீஸ்பூன் க்ரீன் டீயை கலந்து கலவையை தயாரித்துக் கொள்ளுங்கள். அதை மண்டை முழுவதும் தடவுங்கள். ஒரு மணி நேரம் அதை தலையில் ஊறவிட்ட பிறகு மிதமான ஷாம்பூ மற்றும் இளஞ்சூடான நீரில் அலசுங்கள். நீண்ட கூந்தலைப் பெற வாராந்திர அடிப்படையில் இந்த முறையைப் பயன்படுத்துங்கள்.

தயிருடன் சிகைக்காய் தூள் பயன்படுத்துவது எப்படி: 1 டீஸ்பூன் சிகைக்காய் தூளை 2 முதல் 3 டீஸ்பூன் தயிருடன் நன்கு கலந்து கொள்ளுங்கள். உங்கள் தலை முழுவதும் இந்தக் கலவையை பரவலாகத் தடவுங்கள். வெதுவெதுப்பான நீரில் இதை அலசுவதற்கு முன்னால் ஒரு மணி நேரம் இந்தக் கலவையை உங்கள் தலையில் ஊறவிடுங்கள். சிறந்த பலன்களைப் பெற மாதத்திற்கு ஒரு முறை இந்த மூலப்பொருட்களைக் கொண்டு உங்கள் கூந்தலுக்கு சிகிச்சை அளியுங்கள்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிகைக்காய் தூள் பயன்படுத்துவது எப்படி: ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை 2 டீஸ்பூன் சிகைக்காய் தூளுடன் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை உங்கள் தலை முழுவதும் தேய்த்து 40 முதல் 45 நிமிடங்கள் ஊறவிடுங்கள். உங்கள் தலையை விருப்பமான ஷாம்பூ மற்றும் வெதவெதப்பான நீரில் அலசுங்கள். உங்கள் கூந்தல் வளர்ச்சியைத் தூண்ட இதே முறையை 2 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் செய்யுங்கள்.

வெங்காயச் சாற்றுடன் சிகைக்காய் தூள் பயன்படுத்துவது எப்படி: 1 டீஸ்பூன் சிகைக்காய் தூளை 3 டீஸ்பூன் வெங்காயச் சாற்றுடன் கலந்து கொள்ளுங்கள். கலவையை உங்கள் தலை முழுவதும் தடவி அரை மணி நேரம் நன்கு ஊறவிடுங்கள். இளஞ்சூடான நீரில் தலையை அலசுங்கள். உங்கள் கூந்தல் நீளமாகவும் வலிமையாகவும் வளர மாதம் ஒரு முறை இந்த சிகிச்சையை செய்யுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகருடன் சிகைக்காய் பயன்படுத்துவது எப்படி: 1 டீஸ்பூன் சிகைக்காய் தூள், ½ டீஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் பன்னீரை சேர்த்து கலவையை தயார் செய்யுங்கள். உங்கள் மண்டை முழுதும் இந்தக் கலவையை பரவவிடுங்கள். சுமார் ஒரு மணி நேரம் காயவிடுங்கள். வாரம் ஒரு முறை இந்தக் கலவையை தடவினால் சிறந்த விளைவுகளைப் பெற முடியும்.

ஆலிவ் எண்ணையுடன் சிகைக்காய் தூள் பயன்படுத்துவது எப்படி: ½ டீஸ்பூன் சிகைக்காய் தூளுடன் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணையை கலந்துக் கொள்ளுங்கள். சிறந்த பலன்களைத் தரும் இந்த கலவையை உங்கள் தலை முழுவதும் தடவுங்கள். அதை வெதுவெதுப்பான நீரில் அலசும் முன் ஒரு மணி நேரம் வரை தலையில் வைத்திருங்கள். உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இந்த கலவையை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள்

வாரம் ஒருமுறை சீகைக்காய் நமது பாரம்பரியமான மூலிகைப் பொருள் மட்டுமல்ல. பக்க விளைவுகளை தராது. தலையில் பூஞ்சைகளை அழிக்கும். பொடுகை அண்டச் செய்யாது. முடி உதிர்வை தடுக்கும். வாரம் ஒரு முறையாவது சீகைக்காய் தேய்த்து குளித்தால் உங்களுக்கு எந்தவித முடி பிரச்சனைகளும் ஏற்படாது.1 10 1510299800

Related posts

முடியின் வேர்கள் வலுவடைய இயற்கை வைத்தியங்கள்

nathan

உங்களுக்கு கூந்தலில் கெட்ட நாற்றம் வருகிறதா? இத ட்ரைப் பண்ணி பாருங்க….

nathan

10 நொடியில் உங்கள் கூந்தல் ஆரோக்கியமானதா என கண்டுபிடிக்கும் ஒரு ஈஸி வழி !!

nathan

அடர்த்தியான, நீளமான முடியை பெற என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது!!!

nathan

முடி உதிர்வை முற்றிலும் தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்

nathan

கூந்தல் உதிர்வை ஒரே மாதத்தில் தடுக்கும் வெங்காயம்

nathan

இளநரையை தவிர்க்க

nathan

நீங்கள் தூங்கும்போது செய்யும் இந்த தவறுகள்தான் உங்கள் கூந்தல் உதிர்விற்கு காரணம்!!

nathan

முடி உதிர்வை குறைத்து, அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா?

nathan