24.9 C
Chennai
Wednesday, Jan 22, 2025
நக அலங்காரம்

நீங்கள் நகங்களின் நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்க! உங்களுக்குதான் இந்த விஷயம்

நகங்கள் அழகாக இருந்தாலே நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். கை, கால் நகங்களை அழகாக்க பியூட்டி பார்லர் தேடி ஒடவேண்டியதில்லை வீட்டில் தினசரி சில நிமிடங்கள் செலவழித்தாலே போதும் ஆரோக்கியமான அழகான நகங்களை பெறமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

உடம்பில் கால்சியம் சத்து குறைந்தாலே எலும்பு, பற்கள், நகங்கள் பாதிப்பிற்குள்ளாகும். எனவே சத்தான உணவுகளை உட்கொள்ளவேண்டும். பால்பொருட்களான பால், யோகர்டு, சீஸ், பாதாம் போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். அன்றாட உணவில் வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட், புருக்கோலி, ஆப்ரிகாட் போன்றவகைளை சேர்த்துக்கொள்ளலாம்.

தினசரி இரவு உறங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் கைகளை ஊறவைத்து கழுவவும். பின்னர் டவல் கொண்டு துடைத்து நன்றாக காயவைக்கவும். பின்னர் கைக்கு மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யவும். நகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பெட்ரோலியம் ஜெல்லி கொண்டு அப்ளை செய்யவும்.
நகங்கள் எளிதில் உடைந்துபோனால் இரவு நேரத்தில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வெண்ணெய் தடவவும் விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றில் நகங்களை நனையுமாறு 15 நிமிடம் வைக்க வேண்டும்.

வீட்டுவேலைகளை செய்யும் போதும், பாத்திரம் கழுவுதல், வீடு, பாத்ரூம் கழுவுதல் போன்றவைகளை செய்யும்போது கைக்கு கிளவுஸ் போட்டுக்கொள்ளவும் இல்லையெனில் ரசாயனப்பொருட்களினால் நகங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

தினசரி சரியான அளவு தண்ணீர் பருகவேண்டும். பழரசங்களை அவ்வப்போது தயாரித்து உட்கொண்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் நகங்களும் அழகாகும். அதேபோல் கேரட் ஜூஸ் பருகுவது நகங்களுக்கு ஆரோக்கியத்தை தரும்.நகங்களுக்கு பாதிப்பை தரும் நெயில் பாலீஸ், பாலீஸ் ரிமூவர் போன்றவைகளை உபயோகிக்க வேண்டாம். நகங்கள் அதிக அளவில் உடைந்து போனால் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும், வைட்டமின் சி, போலிக் அமிலம் அடங்கிய உணவுகளையும் உட்கொள்ளலாம்.

உடம்பில் வைட்டமின் பி 12 சத்து குறைந்தாலும் நகங்கள் உலர்ந்து உடைந்து விடும். எனவே நமது அன்றாட உணவில் வைட்டமின் பி 12 சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் ஆரோக்கியமான அழகான நகங்களை பெறலாம்.

நகங்களை வெட்டுவதிலும் கலைநயம் உள்ளது. நக வெட்டியால் நகங்களை வெட்டும்போது நம் கைகளின் அமைப்பிற்கு ஏற்ப வெட்டிக் கொள்வது நல்லது. நீளமான விரல்களாக இருந்தால் வளைவாக வெட்டிக் கொள்ளலாம். குட்டையான விரல்களை ‘U’ எழுத்து வடிவில் வெட்டி ஷேப் செய்து கொள்ள வேண்டும்.

Related posts

உங்க நகமும் அழகா இருக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan

நகங்களை அற்புதமாக வெளிப்படுத்தும் நெயில்பாலிஷ் கலவைகள்

nathan

சரும நிறத்திற்கேற்ற நெயில் பாலிஷை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

நகங்களில் கோடி நிலாக்கள்! வியக்க வைக்கும் நெயில் ஆர்ட்!

nathan

வீட்டில் இலகுவாக நீங்களே ‘நெய்ல் ஆர்ட்’ செய்யலாம்

nathan

ஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை!…

sangika

கை, கால்களின் வசீகரம் கூட நகங்களை பாதுகாத்தல்!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கை, கால்களின் வசீகரம் கூட நகங்களை பாதுகாத்தல்!…

nathan

வீட்டிலேயே ‘நெய்ல் ஆர்ட்’ – எளிய டிப்ஸ்

nathan