28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
ythayasafsgfa
ஃபேஷன்அலங்காரம்

பெண்களை புரிந்து கொள்வது ரொம்பவே கஷ்டம் தான்.

“பெண்கள் விருப்பங்களைவாய்விட்டு கேட்க மாட்டார்கள். புரிந்து கொள்வது”!!
அனைவருக்கும் வித்தியாசமான விருப்பங்கள் இருக்கும். அதே சமயம் சில வெறுப்பூட்டும் விஷங்களும் இருக்கும். ஆனால் அதனை வெளியே மற்றவர் முன்பு சொல்லமாட்டார்கள். அதிலும் காதலிப்பவர்களுக்கு இருக்கும் விருப்பங்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.ythayasafsgfa
அதில் குறிப்பாக பெண்கள், தங்கள் காதலனிடம் சில விஷங்களை வாய்விட்டு கேட்கவே மாட்டார்கள். ஏனெனில் அதில் சிறிது வெட்கம் மற்றும் சரியாக வெளிப்படுத்த தெரியாதவை போன்றவை இருப்பதாலேயே தான்.
ஆம், சில பெண்களுக்கு தங்கள் விருப்பங்களை காதலனிடம் கேட்பதற்கு தயங்குவார்கள். ஆனால் அதனை அவர்களே எதிர்பாராதவாறு செயல்பட வேண்டும் என்று நினைப்பார்கள். என்ன புரியவில்லையா? ஆமாங்க… பெண்களை புரிந்து கொள்வது ரொம்பவே கஷ்டம் தான்.
ஏனெனில் அவர்கள் எந்த நேரத்தில் எப்படி இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்வது மிகவும் கஷ்டம் தான். இப்போது அந்த வகையில் பெண்கள் தங்கள் காதலனிடம் கேட்காமல், எதிர்பார்க்கும் சில விஷயங்கள் என்னவென்று சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து உங்கள் காதலியை குஷிப்படுத்துங்கள்.
* பொதுவாக ஆண்கள் வெளியே நண்பர்களுடன் செல்லும் போது, காதலியை அழைத்துச் செல்லமாட்டார்கள். ஏனெனில் சில பெண்கள் கூச்சசுபாவம் உடையவர்கள். ஆகவே ஆண்கள், காதலி வரமாட்டாள் என்று நினைத்து கேட்கவும் மாட்டார்கள், அழைத்தும் செல்லமாட்டார்கள். ஆனால் உண்மையில் பெண்கள் காதலன் மற்றும் அவனுடைய நண்பர்களுடன் வெளியே செல்ல விரும்புவார்கள். ஆனால் அதைக் கேட்க மாட்டார்கள். ஆகவே ஆண்களே! உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்லும் போது, உங்கள் காதலியிடம் வருகிறாயா என்று கேட்டு, அவர்கள் வந்தால் அழைத்துச் செல்லுங்கள்.
* அனைத்து பெண்களுக்கும் பாராட்டு என்றால் மிகவும் பிடிக்கும். சில பெண்கள் அதை வெளிப்படையாக கேட்க மாட்டார்கள். ஆனால் அதற்கான முயற்சியில் மறைமுகமாக ஈடுபடுவார்கள். உதாரணமாக, உங்கள் மனைவி காதலி திடீரென்று ஆச்சரியப்படுத்தும் வகையில் ஏதாவது உணவை சமைத்துக் கொடுத்தால், அதை சாப்பிட்டு அவர்களை பாராட்டுங்கள்.
* காதலி ஏதாவது வேலையோ அல்லது காத்திருக்கும் போதோ, அவர்களின் பின்புறம் வந்து, அவர்களது இடுப்பை தொட்டாலோ அல்லது பின்புறம் வந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாலோ மிகவும் பிடிக்கும். மேலும், இது காதலியை சமாதானப்படுத்துவதற்கான ஒரு சூப்பரான வழியும் கூட. இதனை பெண்கள் விரும்பினாலும், கேட்கமாட்டார்கள்.
* பெண்கள் அவர்களுடைய தோழிகளின் முன்பு, தன் காதலன் பாசத்தை, அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் அதை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள்.
* ஒவ்வொரு பெண்ணும், தன் கணவன் ,காதலன் தனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதிலும் ஏதேனும் மன வருத்தத்தில் அல்லது கஷ்டத்தில் இருந்தால், அப்போது மனதை ஆறுதல் படுத்துவதற்கு தன் காதலன் வர வேண்டும் என்று நினைப்பார்கள்.
குறிப்பாக, தன் கஷ்டத்தை காதலன், கணவன் தன்னைப் பார்த்த உடனேயே தெரிந்து கேட்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இவையே பெண்கள் தங்கள் காதலனிடம் கேட்காமலேயே எதிர்பார்க்கும் விஷயங்கள்.

Related posts

அக்‌ஷய திருதியைக்கு நகை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

nathan

பெண்கள் விரும்பி அணியும் வளையல்கள்

nathan

நீண்ட நேரம் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா?

nathan

பட்டுப்பெண்களின் பளபள புடவைகள்!

nathan

டீன்ஏஜ் பெண்களின் முன்னழகு பற்றிய சில உண்மைகள்

nathan

இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் …..

sangika

முறையான புரிதல் இல்லாத மாமியார் மருமகள் பிரச்னைகளுக்கு தீர்வு!….

sangika

நளினமான விரல்களுக்கேற்ப ஜொலிக்கும் வைர மோதிரங்கள்

nathan

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப் !

sangika