25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
07 1510032038 17
அழகு குறிப்புகள்

உங்களுக்கு வெள்ளையான சருமம் வேணும்னு ஆசையா? அப்ப இத படிங்க!..!

நமது அடையாளமாக திகழ்வது நமது முகம் தான். அந்த முகம் மற்றவர்களது பார்வைக்கு, எண்ணெய் வழிந்து கருப்பாக இருப்பது என்பது நன்றாக இருக்காது. நாம் தினமும் வெயிலில் செல்வதாலும், முகத்தை அடிக்கடி கழுவி பராமரிக்காததாலும் முகத்தில் உள்ள ஈரப்பதம் குறைகிறது. மேலும் அடிக்கடி வெளியில் செல்வதால் முகம் கருமையாகிவிடுகிறது. முகத்தில் இறந்த செல்கள் வெளியேறாமல் இருந்து விடுகின்றன.

நாம் வாரத்தில் இரண்டு முறையாவது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டியது அவசியம். இதனால் முகம் பளபளப்பாகவும், நல்ல நிறத்துடனும் இருக்கும். இதனால் நீங்கள் நாள் முழுவதும் அழகாக ஜொலிக்க முடியும். இந்த பகுதியில் நல்ல பலன் தரக் கூடிய பேஸ் பேக்குகள் சில கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி சிறப்பான பயன்பெறுங்கள்.

பேக்கிங் சோடா பேஸ்ட் பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

வாழைப்பழம் மற்றும் பால் வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.

பால் ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

கற்றாழை ஜெல் கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.

சூரியகாந்தி விதை இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

மாம்பழத் தோல் மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.

தேன் தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

சர்க்கரை சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.

தேங்காய் தண்ணீர் தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள தழும்புகள், கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.

கருமை நீங்க எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.

மாஸ்க் எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முட்டை எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

எலுமிச்சை, தேன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

இரவில் செய்யவும் வெள்ளையான சருமம் வேண்டுமானால், இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

தழும்புகள் மறைய ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.

ரோஸ் வாட்டர் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

தண்ணீர் குடிக்கவும் முக்கியமாக தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதிலும் தினமும் குறைந்தது 9 டம்ளர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும்.

நன்கு தூங்கவும் தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் கருவளையங்கள் நீங்கி, முகம் இயற்கையான அழகுடன் காணப்படும்.07 1510032038 17

Related posts

வெளியே வந்த அடுத்த நாளே ஹோட்டலுக்கு சென்ற பிரியங்கா! யாருடன் தெரியுமா?

nathan

மார்பகங்களின் அளவை பெரிதாக்க இயற்கை வைத்தியங்கள்

nathan

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்!,tamil beautytips ,beauty tips tamil ,25 beauty tips tamil

nathan

தனுஷ் தொடர்பான சில வீடியோ ஆதாரங்கள் சுசித்ராவிடம் -சைலன்ட் மோடில் இருக்கும் தனுஷ்..

nathan

அழகுபராமரிப்பிற்கும் உதவும் துளசி!…

sangika

மாகாபா-வை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. பொண்ணு முன்னாடி இப்படியா பண்றது!

nathan

தரையிறக்கத்தின் போது இரண்டாக பிளந்த விமானம் -நீங்களே பாருங்க.!

nathan

ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு ஏற்பட்டால், அவருக்கு பப்பாளி இலை ஜூஸ் கொடுத்து ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். நோயின் தீவிரத்தில் இருந்து மீட்கலாம்.

nathan

ஒரு சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தாலே இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு முடிவை கட்டி விடலாம்……

nathan