23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
06 1509958785 7
சரும பராமரிப்பு

உங்களுக்கு சுருக்கமில்லாத சருமத்திற்கு தினமும் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்!!

சரும பராமரிப்பு பொருட்களை சரியான விதத்தில் பயன்படுத்தினால் மட்டுமே உங்களுக்கு ஆரோக்கியமான சருமமும் அழகான தோற்றமும் கிடைக்கும். எல்லாரும் தினமும் சில அத்தியாவசியமான சரும பியூட்டி பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் அதை சரியான முறையில் பயன்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

க்ளீன்சர், டோனர், சீரம் மற்றும் மாய்ஸ்சரைசர் போன்ற பியூட்டி பொருட்கள் வழக்கமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த பியூட்டி பொருட்கள் ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கு மிகவும் அத்தியாவசியமானவையாகும். இதை சரியான ஆர்டரில் பயன்படுத்தாவிட்டால் நமது சருமத்தில் மிகப்பெரிய மாற்றத்தை காட்டும்.

எனவே தமிழ் போல்டு ஸ்கை உங்களுக்கான சரும பராமரிப்பு பொருட்களை எப்படி சரியான வரிசையில் பயன்படுத்த வேண்டும் என்பதை இக்கட்டுரையில் சொல்ல போகிறது. பியூட்டி எக்ஸ்பட் கருத்து படி பார்த்தால் நாம் காலையில் பயன்படுத்தும் சரும பராமரிப்பு முறைக்கும் இரவில் படுப்பதற்கு முன் பயன்படுத்தும் சரும பராமரிப்பு முறைக்கும் வித்தியாசம் உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். சில அடிப்படையான சரும பியூட்டி பொருட்களை பயன்படுத்தும் போது நமது சருமம் புத்துயிர் பெற்று இயற்கையாகவே எந்த வித மேக்கப் இல்லாமல் ஆரோக்கியம் பெறுகிறது.

கீழ்கண்ட வரிசை முறை உங்களுக்கு ஈஸியாக இருக்கும். என்ன உங்கள் நேரத்தில் இதற்காக கொஞ்சம் நேரம் செலவு செய்ய வேண்டும். ஆனால் இதனால் கிடைக்கும் பலன் மிகச் சிறந்தது. சரி வாங்க இப்பொழுது உங்கள் சரும பியூட்டி பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வரிசை முறையை பற்றி பார்க்கலாம்.

காலையில் க்ளீன்சர் முதலில் காலையில் எழுந்ததும் உங்கள் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு உங்கள் முகச் சருமத்திற்கு ஏற்ற க்ளீன்சர் மற்றும் இயற்கை பொருட்கள் அடங்கிய க்ளீன்சரை பயன்படுத்தலாம். இது முடிந்த பிறகு உங்கள் முகத்தை நன்றாக மென்மையான டவல் கொண்டு துடைக்க வேண்டும்.

பேஷியல் டோனர் அடுத்ததாக உங்கள் முகத்திற்கு அப்ளே செய்யப் போவது பேஷியல் டோனர். விரைவாக உறிஞ்சும் தன்மை கொண்ட இந்த பியூட்டி பொருள் உங்கள் சருமத்தை மென்மையாக மற்றும் போதுமான ஈரப்பதம், நிறத்தை கொடுக்கிறது.

பேஷியல் சீரம் டோனர் பயன்படுத்திய பிறகு பேஷியல் சீரத்தை பயன்படுத்துவது நமக்கு வேகமான பயனை கொடுக்கும். இந்த பொருள் நாள் முழுவதும் உங்கள் சரும ஈரப்பதத்தை காக்கிறது.

மாய்ஸ்சரைசர் அல்லது சன் க்ரீன் முன்னாடி பயன்படுத்திய பொருட்களுக்கு பின் கொஞ்சம் மாய்ஸ்சரைசரை பரப்பி விட வேண்டும். நீங்கள் வீட்டிலேயே இருப்பதாக இருந்தால் மாய்சரைசரும் வெளியே செல்வதாக இருந்தால் சன்ஸ்கிரீன் லோசனையும் பயன்படுத்த வேண்டும். இதனால் உங்கள் முகம் நல்ல மாய்ஸ்சரைசர் தன்மையுடன் சூரிய ஒளி தாக்கத்திலிருந்தும் பாதுகாக்கப்படும்.

இரவு நேரத்தில் மேக்கப் ரிமூவர் இது மிகவும் முக்கியமான பியூட்டி பொருளாகும். கண்டிப்பாக இதை மிஸ் பண்ணி விடாதீர்கள். ஒவ்வொரு நாள் இறுதியிலும் மேக்கப் ரிமூவர் கொண்டு உங்கள் மேக்கப்பை கலைக்க மறந்து விடாதீர்கள். இது சருமத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவதோடு பியூட்டி பொருட்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது

க்ளீன்சர் உங்கள் முக மேக்கப்பை ரிமூவ் பண்ண பிறகு பேஷியல் க்ளீன்சர் போட்டு முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். இந்த முறை கண்டிப்பாக உங்கள் சரும அடுக்குகளின் அடியில் படிந்திருக்கும் அழுக்குகளையும் சுத்தம் செய்கிறது. நல்ல பலன் கிடைக்க கெமிக்கல் இல்லாத இயற்கை க்ளீன்சர் பயன்படுத்துவது நல்லது.

பேஷியல் டோனர் நன்றாக க்ளீன்சர் பண்ண பிறகு டோனரை அப்ளே செய்ய வேண்டும். இப்படி செய்வது உங்கள் சருமத்தை இரவு முழுவதும் மென்மையாக வைத்து கொள்ள உதவுகிறது. டோனர் உங்கள் முகச்சருமம் அழகாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.

ஸ்பாட் ட்ரீட்மெண்ட் புராடெக்ட் இந்த முறை உங்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், ஏஜ் ஸ்பாட்ஸ், தழும்புகள் போன்றவற்றை சரி செய்கிறது. டோனருக்கு அடுத்த படியாக இதை பயன்படுத்தும் போது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும் கூட்டி காட்டுகிறது.

பேஷியல் சீரம் ஸ்பாட் ட்ரீட்மெண்ட்டுக்கு அடுத்த படியாக பேஷியல் சீரம் பயன்படுத்த வேண்டும். நீங்களே தயாரித்த சீரம் அல்லது பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்த சீரம் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கொஞ்சம் எடுத்து முகம் முழுவதும் அப்ளே செய்து விட வேண்டும்.

ஐ க்ரீம் காலையில் எழும் போது புஷ் என்று கண்கள் வீங்கி இருக்கும் அல்லது கருவளையம் இருக்கும். எனவே இரவில் படுப்பதற்கு முன் ஐ க்ரீமை அப்ளே செய்து விட்டு படுத்தால் கண்களை புத்துயிர் பெறச் செய்து விடும்.

மாய்ஸ்சரைசர் பிறகு கடைசியாக கொஞ்சம் மாய்ஸ்சரைசர் எடுத்து முகத்தில் பரப்பி விட வேண்டும். இதன் மூலம் காலையில் எழும் போது மென்மையான புத்துணர்ச்சியான சருமத்தை பெறலாம்.

06 1509958785 7

Related posts

டாட்டூஸ் ஆபத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

nathan

வயிற்றில் வெடிப்புக்கள் உள்ளதா?

nathan

கழுத்துப் பராமரிப்பு

nathan

அழகு தரும் நலங்கு மாவு அருமை

nathan

Beauty tips.. முக பளபளப்புக்கு உதவும் திராட்சை

nathan

கவர்ச்சியான தோற்றத்திற்கு சில சூப்பர் டிப்ஸ்!!!

nathan

சருமத்தில் கரும்புள்ளிகளை போக்கும் சூப்பர் பேஷியல்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… சில பாத பராமரிப்பு டிப்ஸ்…

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்தை பொலிவாக்கும் மைசூர் பருப்பு….

nathan