29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
10 1510297027 2
கண்கள் பராமரிப்பு

உங்களுக்கு கண் பார்வைக் கோளாறு நீங்கி அற்புதமான பார்வைத் திறனை தரும் வாகை மருந்து!!

வாகை மரம், பத்தடி உயரத்தில் இருந்து, முப்பது அடி உயரம் வரை, ஓங்கி வளரும் ஒரு, மிகத்தொன்மையான மரமாகும். மரத்தின் கிளைகள் பரந்து விரிந்து பெரிய குடையைப் போல காணப்படுவதால், மரத்தின் அடியில் நிழல் நிரந்தரமாக இருக்கும், இதனால், வாகை மரத்தை நிழல் தரும் மரம் என்றும் அழைப்பர்.

சிறிய இலைகளுடன், நறுமணமிக்க அழகிய மலர்களையும், அதிக விதைகள் கூடிய காய்களையும் கொண்ட வாகை மரம், சங்க காலத்தில் இருந்து தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்து இருக்கிறது.

சங்ககாலத்தில் தமிழகப் போர்வீரர்கள், போர்களில் வென்றவுடன், வெற்றியின் சின்னமாக, வாகை மலர்களை சூடிக்கொள்வர், இன்றுவரை, அதைக் குறிக்கும்வகையில், போட்டி, பந்தயங்கள், தேர்தல் இவற்றில் வென்றவர்களை, வெற்றிவாகை சூடினார்கள் என்றே குறிப்பிடுகிறோம்!

தொன்மையான மரங்களை காத்து வருங்கால சந்ததிகள் பயன்பெற, திருக்கோவில்களில் தல மரங்கள் என்ற பெயரில் பாதுகாக்கும் மரங்களில், வாகை மரமும் ஒன்று! மண்ணரிப்பை போக்கும் மரமாகக் கருதப்படும் வாகை மரம், பல நற்பலன்களை மனிதர்க்கும் தருகிறது. வாகை மரத்தின் இலைகள், மலர்கள், காய்கள், வேர் பட்டை போன்ற அனைத்து பாகங்களும் மனிதர்களின் வியாதிகளைப் போக்கும் தன்மை உள்ளவை, வாகையில் கால்சியம், புரதம், சோடியம், பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற தாதுக்களும், வேதி உப்புகளும் நிறைந்திருக்கின்றன.

வாகை மரத்தின் பொதுப்பயன்களாக, அழற்சி எனும் உடலின் வியாதி பாதித்த செல்களை வெளியேற்றி, உடலை நலம்பெற வைக்கும் தன்மை மிக்கது. உடலில் தோன்றும் வீக்கங்கள், நெறிக்கட்டிகள் இவற்றைப் போக்குவதில் சிறப்புடன் விளங்குகிறது. ஒவ்வாமையைப் போக்கும். விஷத்தை விலக்கும். தொன்மையான வாகை மரமும், தூங்குமூஞ்சி மரமும் ஒன்றல்ல!

சில இடங்களில் வாகை மரங்கள் போன்று காட்சியளிக்கும், நிழல் தரும் தூங்குமூஞ்சி மரத்தை, வாகை மரங்கள் என்று, தவறாக புரிந்துகொள்வர், வாகை மரங்கள் சங்ககாலத்துக்கு முன்பிருந்து நமது தேசத்தில் இருப்பவை, தூங்குமூஞ்சி மரங்கள், இடைக்காலத்தில் வெளி நாடுகளில் இருந்து, நமது தேசத்துக்கு வந்தவை. வாகை மரத்தின் இலைகள் மூலம் செய்யப்படும் தேநீர் பற்றி, இப்போது பார்க்கலாம். தேநீர் என்பது, மூலிகைகளைத் தண்ணீரில் இட்டு, தீயில் கொதிக்க வைத்து, பின்னர் பருகும் காய்ச்சிய நீராகும்.

1. கண் வியாதிகள் போக்கும் : கண் வியாதிகள், கண்கள் சிவப்பது முதல் கண் எரிச்சல்,கண் அரிப்பு, நீர் வடிதல், பார்வை மங்குதல் மற்றும் மாலைக்கண் வியாதி இவற்றுக்கு வாகை இலைகளில் தயாராகும் தேநீர், சிறந்த தீர்வளிக்கிறது.

2. கண் பார்வை திறன் அதிகரிக்க : சிறிது வாகை இலைகளை நன்கு அலசி, அத்துடன் சிறிது சீரகம் சேர்த்து, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு, நன்கு காய்ச்சி, பாதியாகச் சுண்டியதும், பனங்கற்கண்டு சேர்த்து பருகிவர, கண்களின் பார்வைத்திறன் அதிகரிக்கும். இதனால், கண்கள் வலுப்பட்டு, மாலைக்கண் வியாதி, கண் சிவப்பது, நீர் வடிதல் உள்ளிட்ட கண் வியாதிகளின் பாதிப்புகள் அகலும்.

3. கண்களின் வலியைப்போக்கும் முறை : சிறிதளவு விளக்கெண்ணையில், ஐந்தாறு வாகை இலைகளை வதக்கி வைத்துக்கொண்டு, ஆறியபின் அவற்றை, கண்களை நன்கு தண்ணீர் விட்டு அலசியபின், கண்களை மூடி, கண் இமைகளின் மேல், வதக்கிய வாகை இலைகளை வைத்துக் கட்டி, சிறிது நேரம் கழித்து, கட்டைப் பிரிக்க, கண் வலிகள், கண் வீக்கம், கண் எரிச்சல் உள்ளிட்டவை சரியாகிவிடும்.

4. வாகை மலர் மருந்து வாகை மரத்தின் நறுமணமிக்க மலர்களைக் கொண்டு, விஷக்கடிகளுக்கான மருந்தை தயாரிக்கலாம். சிறிதளவு வாகை மலர்கள் அல்லது மொட்டுக்கள் இவற்றுடன் சிறிது மிளகைப் பொடி செய்து, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு, சூடாக்கி, பாதி அளவு வந்ததும் ஆற வைத்து, தேனைக் கலந்து பருகிவர, உடலில் கை கால்களில் ஏற்பட்ட குத்துவது போல இருந்த வலிகளெல்லாம் மாயமாகும், உடலில் சேர்ந்த விஷங்கள் முறிந்துவிடும், விஷக்கடிக்கு மருந்தாகவும் அமையும்.

5. விஷமுறிவு மருந்து தயாரிக்கும் முறை வாகை மரத்தின் பூக்களைப் பயன்படுத்தி, விஷமுறிவுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: வாகை பூக்கள், மிளகு, தேன். (இரண்டு மூன்று பூக்கள், பூக்கள் கிடைக்கவில்லை என்றால் மொட்டுக்களை பயன்படுத்தலாம்.)

6. செய்முறை : இதனுடன் சிறிது மிளகை பொடி செய்து, சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு, கொதிக்க வைக்கவும். வடிகட்டி எடுத்து தேன் சேர்த்து பருகிவர, கை, கால் வலிகள் சரியாகும். விஷம் முறியும். நாய், எலி, தேள், பாம்பு கடிக்கு மருந்தாகிறது.இரத்த ஓட்ட பாதிப்பினால் ஏற்படும், வாத வியாதிகளையும் போக்கும். வாகை மர விதைகளின் மருத்துவ பலன்கள்.

7. வீக்கம் குறைய : வாகை மரத்தின் விதைகள் வியாதி எதிர்ப்பு தன்மைகள் மிக்கது, வியாதிகளைப் போக்கி, வீக்கங்களையும் கரைக்கும் தன்மையுடையது. வாகை மரத்தின் விதைகள் சிறிது எடுத்துக்கொண்டு, மிளகுத்தூளுடன் கலந்து இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி, ஒரு தம்ளராக நீர் சுண்டியபின், ஆற வைத்து, பனங்கற்கண்டு சேர்த்து பருகிவர, பாதிப்புகள் தரும் கழுத்து, இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளில் வலியைத் தந்துவந்த நெறிகட்டிகள் மறைந்துவிடும்.

8. ஆறாத புண்களை ஆற்றும் : வாகை மரத்தின் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணை, உடலில் குஷ்ட ரோகம் எனும் வியாதியால் உண்டாகும் ஆறாத புண்களைக் குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது.

9. வாகை குடிநீர்: மருத்துவத் தன்மைகள் நிரம்பிய வாகை மரத்தின் விதைகளை பொடியாக்கி, தண்ணீரில் இட்டு காய்ச்சி பருகி வர, உடலில் தோன்றும் ஒவ்வாமை பாதிப்புகளுக்கு மருந்தாகும். சில நேரங்களில், உடலில் நெறிக்கட்டிகள் உண்டாக்கும் காய்ச்சலை குணமாக்கும், இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த நாளங்களில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.

10. வாகை மரப்பட்டைகளின் பயன்கள் : வாகை மரத்தின் பட்டைகளை நிழலில் உலர்த்தி, தூளாக்கி வைத்துக்கொண்டு, பாலில் கலந்து பருகிவர, பசியின்மை பாதிப்புகள் விலகி, நன்கு பசி எடுக்கும். உடல் சூட்டினால், உணவை சாப்பிட முடியாத நிலையை உண்டாக்கும் வாய்ப்புண்களை, ஆற்றும் தன்மைமிக்கது.

11 மூல வியாதிகள் : உலர்த்தி தூளாக்கிய வாகை மரத்தின் பட்டைகளை சிறிது எடுத்து, அதை வெண்ணை அல்லது நெய்யில் குழைத்து சாப்பிட்டு வர, துன்பங்கள் தந்து வந்த, மூல வியாதிகளின் பாதிப்புகள் விலகும்.

12 வயிற்றுப் போக்கு : சிலருக்கு உண்ட உணவின் ஒவ்வாமை காரணமாக, இடைவிடாத வயிற்றுப்போக்கு உண்டாகும், அந்த பாதிப்பை சரிசெய்ய, வாகை மரப்பட்டைத் தூளை, மோரில் கலந்து பருகி வர, வயிற்றுப்போக்கு விலகி விடும்.

13 கால் நடை தீவனம்: காயங்கள், புண்கள் மீது, வாகை மரப்பட்டைத் தூளை, எண்ணைவிட்டு குழைத்துத் தடவிவர, காயங்கள் சீக்கிரம் ஆறி விடும். வாகை மரங்கள் மனிதர்க்கு மட்டும் நன்மைகள் செய்யவில்லை, கால் நடைகளுக்கும் தீவனமாக வாகை மரத்தின் இலைகள் பயன்படுகின்றன.10 1510297027 2

Related posts

காஜல் பயன்படுத்தி வந்த கருவளையத்தை நீக்க!….

sangika

கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துவது எப்படி?

nathan

கண்களை ஜொலிக்க வைக்கும் ஆரஞ்சு !

nathan

இதை இரவில் படுக்கப்போகும் முன், நம் கண்ணை சுற்றி தடவி வந்தால், கருவளையம் மறைந்து விடும்.

sangika

அழகிய கண்களை பெறுவது எப்படி ?

nathan

கண்ணுக்கு மை அழகு!

nathan

கருவளையத்திற்கு தீர்வு தரும் எலுமிச்சை

nathan

கருவளையத்தை போக்கும் நேச்சுரல் தெரப்பி

nathan

கண்ணழகையே கெடுத்து விடும் கருவளையம்…..

sangika