28.2 C
Chennai
Monday, Dec 30, 2024
06 1509949046 3
கால்கள் பராமரிப்பு

உங்களுக்கு பாதங்களில் வெடிப்பு வர இது கூட ஒரு காரணமா இருக்கலாம்னு தெரியுமா?

பாத வெடிப்பால் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பாத வெடிப்பிற்கான காரணமும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. சாதாரண பாத வெடிப்பு தானே என்று விட்டுவிடக் கூடாது. இந்த பாத வெடிப்பானது, பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதால் உண்டாகிறது. இதனால் வெடிப்புகள் ஏற்பட்டு, அந்த வெடிப்பு புண்களாக மாறி நடக்கும் போது மிகவும் வலியை தருவதாகவும் உள்ளது. இந்த பாத வெடிப்புகள் மூலமாக கிருமிகள் தொற்று உண்டாகும் வாய்ப்பு உள்ளது. பாத வெடிப்புகள் உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உண்டாகிறது.
நமது பாதங்களின் அழகை கெடுக்கும் இந்த பாத வெடிப்பை சீக்கிரமாக போக்க வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய முறைகளை இந்த பகுதியில் காணலாம்.

1. வெதுவெதுப்பான நீர்

தினமும் மாலை நேரத்தில், உங்களது பாதங்களை வெதுவெதுப்பான நீரில் உங்களது பாதங்களை 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் ஸ்கிரப்பர் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.

2. மாய்சுரைசர்

தினமும் இரவு உறங்கும் போது பாதங்களில் மாய்சுரைசர் அல்லது வாசலின் தடவி பின்னர் சாக்ஸ் அணிந்து உறங்க வேண்டும். இதனால் பாதங்கள் மிருதுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

3. கிளிசரின்

ஒரு டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, கால் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு, காலை எழுந்தவுடன் வெது வெதுப்பான நீரில் காலை கழுவி விடுங்கள்.

4. தேன் பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்யுங்கள்.

5. ஆலிவ் ஆயில் பாதங்கள் பித்த வெடிப்புடன், வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெயை சேர்த்து, வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவிய பின், அந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்க்கவும்.

7. வாழைப்பழம் வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து நீரில் கழுவ குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

8. எலுமிச்சை சாறு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை ஊற்றி பாதங்களை வாரம் ஒருமுறை 10 நிமிடம் ஊற வைத்து வந்தால் பாதங்கள் மென்மையுடன் இருக்கும்.

9. பப்பாளி பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்பு மறைந்து விடும்.

10. மருதாணி மருதாணி இலைகள் பாதங்களுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது. மருதாணி இலைகளை நன்றாக அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

11. கடுகு எண்ணெய் கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

12. மஞ்சள் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு, அதனுடன் மஞ்சளை சேர்த்து கலந்து பாதங்களில் தடவினால் பித்த வெடிப்புகள் நீங்கும்.

3. காலணிகள் உங்களது பாதங்களுக்கு ஏற்ப சரியான அளவு மற்றும் வடிவமைப்பு உள்ள காலணிகளை பயன்படுத்துவதன் மூலமாக பாதங்களில் பிரச்சனை வராமல் பாதுகாக்கலாம். மேலும் குளித்து முடித்ததும், பாதங்களில் ஈரத்தன்மை இல்லாதவாறு சுத்தமாக துடைத்து உலர்த்தி விட வேண்டும்.

14. ஆமணக்கு இலை ஆமணக்கு இலை, சீந்தில்கொடி, குப்பை மேனி ஆகிய மூன்றையும் சேர்த்து தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யை இரவு படுக்கப் போகும் முன்நர் பாதத்தைச் சுத்தமாக தேய்த்துக் கழிவிய பின்னர் பாதங்களில் தடவிக் கொள்ள வேண்டும். இதனை சில நாட்கள் செய்து வந்தாலே நல்ல பலன் தெரியும்.

15. தேங்காய் எண்ணெய் தினமும் இரவு தூங்க போவதற்கு முன்னர் கால்களில் தேங்காய் எண்ணெய்யை தடவிக் கொண்டு உறங்கினால் கால்களில் உள்ள பித்த வெடிப்புகள் சீக்கிரமாக குறைந்து விடும்.06 1509949046 3

Related posts

குதிகால் வெடிப்பை போக்கும் சிம்பிளான பெடிக்யூர்

nathan

முழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்கள்!…

sangika

முழங்காலில் உள்ள கருமையை போக்க சில அற்புத வழிகள்!

nathan

பாதங்கள் சுத்த‍மாக இருந்தால்தானே ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்!…

sangika

பாதங்களில் உள்ள வெடிப்பை போக்க எளிய வழிகள்

nathan

பட்டு போன்ற பாதத்திற்கு வீட்டில் செய்யலாம் மசாஜ்

nathan

கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை

nathan

பனிக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?

nathan

நடக்கும் போது வேதனையைத் தரும் குதிகால் வெடிப்பை போக்க சில டிப்ஸ்.

nathan