23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cover 04 1509778145
முகப் பராமரிப்பு

பூசணிக்காய் வச்சு கூட்டு மட்டுமல்ல உங்க அழகையும் வச்சு செய்யலாம்!!முயன்று பாருங்கள்

ஹலோவீன் திருநாளில் வெறும் அலங்காரத்திற்கும் சாப்பிடுவதற்கும் பயன்படுவதைத் தவிர பூசணிக்காயில் மேலும் பல நன்மைகள் இருக்கின்றன. மேலும் இந்த ஆரஞ்சு வண்ண காய்கறி அதன் ஏராளமான அழகு நன்மைகளுக்காக பிரசித்தி பெற்று விளங்குகிறது.

பழங்காலத்திலிருந்து பூசணிக்காய் சருமப் பராமரிப்புக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சருமத்தை மேம்படுத்தும் விட்டமின்களுடன் ஆல்ஃபா ஹைட்ராக்ஸி ஆசிட் (ஏஹெச்ஏ) நிறைந்துள்ளது. அது உங்கள் சருமத்தை உயிர்ப்பிக்கவும் அத்துடன் இளமையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது.

ஏராளமான மக்கள் அவர்களுடைய வழக்கமான சருமப் பராமரிப்பவில் இந்த அற்புதமான காயை சேர்த்துள்ளனர். ஒருவேளை, நீங்கள் இதுவரை இதை உங்கள் சருமத்தின் மீது முயற்சி செய்து பார்க்கவில்லை என்றால். இன்று போல்ட் ஸ்கையில் நீங்கள் சருமப் பராமரிப்பிற்காக அதை பல்வேறு வழிகளில் எப்படி பயன்படுத்தலாம் என்று உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

பூசணிக்காயின் நன்மைகளை முழுமையாகப் பெற அதை ஒரு குறிப்பிட்ட வழியில் பயன்படுத்த வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிகள் சிறந்த விளைவுகளை பெறுவதற்கு உங்களுக்கு உதவும்.

நீங்கள் இந்த காயை உங்கள் சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்குவதற்கும் மற்றும் கண்ணுக்குத் தெரியாத வயது முதிர்வின் அறிகுறிகளை தாமதப்படுத்தவும் பயன்படுத்தலாம். உங்கள் வழக்கமான சருமப் பராமரிப்பில் பூசணிக்காயை எப்படி சேர்க்கலாம் மற்றும் நீங்கள் பெற ஏங்கும் ஆரோக்கியமான சருமத்தை எப்படி பெறலாம் என்று பார்வையிடலாம் வாருங்கள்.

பூசணிக்காய் + விட்டமின் ஈ எண்ணை ஒரு பூசணித் துண்டை மசித்துக் கொண்டு அத்துடன் ஈ விட்டமின் கேப்ஸ்யுலிலிருந்து வெளியேற்றிய எண்ணையை கலந்து கொள்ளுங்கள். தயாரித்த கலவையை உங்கள் சருமத்தில் பூசி 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே இருக்க விடுங்கள். பிறகு உங்கள் சருமத்தை க்ளென்சர் மற்றும் இளஞ்சூடான நீரைக் கொண்டு கழுவுங்கள் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்க பூசணிக்காயை இந்த வழியில் பயன்படுத்துங்கள்.

பூசணிக்காய் + பட்டைத் தூள் 1 டீஸ்புன் பூசணிக்காய் விழுது, 1 டீஸ்பூன் பன்னீர், 1 சிட்டிகை பட்டைப் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு கலவையை தாயார் செய்யுங்கள். அதை உங்கள் தோல் மீது அடர்த்தியாக பரவலாக பூசி 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். பிறகு இளஞ்சூடான நீரில் கழுவுங்கள். இளமையாக தோற்றமளிக்கும் சருமத்தைப் பெறுவதற்கு இந்த முறையை பயன்படுத்துங்கள்.

பூசணிக்காய் + தேன் மசித்த பூசணிக்காய் மற்றும் தேனை தலா 1 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை உங்கள் சருமத்தில் தடவி குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள் காய்ந்த சக்கையை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். பருக்கள் மற்றும் தழும்புகளை நீக்க ஒரு வாரம் விட்டு வாரம் இதே செயல்முறையை தொடர்ந்து செய்யுங்கள்.

பூசணிக்காய் + கெட்டித்தயிர் 1 டீஸ்பூன் பூசணி சாற்றை 2 டீஸ்பூன் கெட்டித் தயிருடன் கலந்துக் கொள்ளங்கள். இந்தக் கலவையை உங்கள் சருமத்தில் பரவலாகத் தடவி 10 நிமிடங்கள் நன்கு ஊறவிடுங்கள். காய்ந்த பிறகு சக்கையை இளஞ்சூடான நீரில் கழுவி விடுங்கள். வயதான சருமத்தின் அறிகுறிகளை குறைக்க இந்த கலவையைக் கொண்டு உங்கள் சருமத்திற்கு சிகிச்சையளியுங்கள்.

பூசணிக்காய் + பாதாம் எண்ணெய் ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் பூசணி பேஸ்டையும் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணையையும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சருமம் முழுவதும் இந்தக் கலவையை சமமாகப் பரவும்படி தடவி பிறகு 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு காய்ந்த சக்கையை இளஞ்சூடதன நீரைக் கொண்டு கழுவி விடுங்கள்.

பூசணிக்காய் + ஆப்பிள் சிடார் வினிகர் 1 டீஸ்பூன் மசித்த பூசணிக்காயையும் அத்துடன் 1/2 டீஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரையும் கலந்து ஒரு முகப்பூச்சை தயாரியுங்கள். அதை உங்கள் முகம் முழுவதும் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு இளஞ்சூடான நீரைக் கொண்டு உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தவும். உங்கள் சருமத்திலுள்ள கரும்புள்ளிகளை போக்க இந்தக் கலவையை பயன்படுத்தவும்.

பூசணிக்காய் + எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன் மசித்த பூசணிக்காய் விழுதுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். இந்த சிறந்த பலனைத் தரக்கூடிய கலவையை உங்கள் சருமத்தில் தடவி குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள். இந்தக் கலவை காய்ந்த பிறகு சக்கையை நீங்கள் குளிர்ந்த நீரிலேயே கழுவி விடலாம். வாராந்திர அடிப்படையில் இந்தக் கலவையை பயன்படுத்துவதால் பிரகாசமான ஒளிரும் சருமத்தைப் பெறலாம்.

பூசணிக்காய் + ஓட்ஸ் வேகவைத்த ஓட்ஸையும் பூசணி சாற்றையும் தலா ஒரு டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதை உங்கள் சருமத்தில் தடவி மிருதுவாக சிறிது நேரம் தேய்த்து விடுங்கள். உங்கள் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவுவதற்கு முன்பு ஒரு 10 நிமிடங்கள் இதை சருமத்தில் ஊறவிடுங்கள். இந்த பூசணி கலவையைக் கொண்டு சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்திலுள்ள நச்சுக்களை அகற்றுங்கள்

பூசணிக்காய் + பப்பாளி கூழ் பூசணி சாற்றையும் பப்பாளி கூழையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை உங்கள் சருமத்தில் பரவலாகத் தடவி 10 நிமிடங்கள் ஊற அனுமதியுங்கள். காய்ந்தவுடன் குளிர்ந்த நீரைக் கொண்டு உங்கள் சருமத்தைக் கழுவுங்கள். வாராந்திர அடிப்படையில் இந்தக் கலவையை பயன்படுத்துவதன் மூலம் உடனடியாக ஒளிரும் சிகப்பழகை பெறலாம்.

cover 04 1509778145

Related posts

முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள்!

nathan

ரெடிமேட் கொலாஜன் மாஸ்க்

nathan

பனிக்காலத்தில் சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா?

nathan

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்..

nathan

அழகை கெடுக்கும் முகப்பருவிலிருந்து! இதை மட்டும் பயன்படுத்துங்கள்..

nathan

வெயிலில் அலைந்து முகம் சோர்வாக உள்ளதா?

nathan

மற்றவர்களை மயக்க வேண்டுமா? இதோ சூப்பர் பேஷியல்

nathan

இதோ எளிய நிவாரணம்! உங்க முகத்துல அசிங்கமா சுருக்கம் இருக்கா? இத செஞ்சா, சுருக்கம் இருந்த இடம் தெரியாமல் போயிடும்…

nathan

வேனிட்டி பாக்ஸ்: சிவப்பழகு

nathan