23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
19 hair dye
தலைமுடி சிகிச்சை

ஹேர் டை அடிக்காதீங்க!: நிபுணர்கள் கூறும் தகவல்கள்

ஹேர் டை பயன்படுத்துபவர்களுக்கு அலர்ஜி தொடங்கி ஹார்மோன் பிரச்சினை, புற்றுநோய் வரை தாக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதற்குக் காரணம் டையில் உள்ள ரசாயனம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

டை என்ற வார்த்தை இறப்பு என்ற வார்த்தையை குறிக்கப்படுகிறது எனவேதான் கலரிங் என்ற வார்த்தையை பலரும் பயன்படுத்துகின்றனர். தலைமுடியை கருப்பாக்கவும், கலரிங் செய்யவும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விற்பனை இன்றைக்கு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப விளம்பரங்களும் ஊடகங்களில் கொடி கட்டிப்பறக்கின்றன. டை அடிக்காவிட்டால் அங்கிள் என்று கூப்பிடுவதும், டை அடித்து முடியை கருப்பாக வைத்திருந்தால் ரொமான்ஸ் லுக் விடுவதுமாய் விளம்பரம் செய்யப்படுகிறது.

கருப்பு முடிக்கு ஆசைப்பட்டு உபயோகிப்படும் டை நம் உயிருக்கே உலை வைக்கின்றது என்ற உண்மை அதனை உபயோகிக்கும் பலருக்கும் தெரிவதில்லை. தொடர்ந்து ஹேர் டை உபயோகிப்பவர்களுக்கு அலர்ஜியில் தொடங்கியில் புற்றுநோயில் முடிகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

டையில் இருக்கும் ரசாயனங்களான பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு, போன்றவை நம் ஹார்மோன்களை சரியாக செயல்பட விடாமல் தடுக்கின்றனவாம். இதனால் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து ஒவ்வொருவிதமான பாதிப்பு ஏற்படுமாம். அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, சிறுநீர்ப்பை புற்றுநோய், ரத்தப்புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்று அச்சுறுத்துகின்றனர் நிபுணர்கள்.

ஆண்கள் பலரும் தலைக்கு மட்டுமல்லாது மீசையைக் கூட விட்டுவைக்காமல் டை அடிக்கின்றனர் இதுவும் கூட உடலுக்கு தீங்குதரக்கூடியவைதான் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ரசாயனப் பொருட்கள் அடங்கிய ஹேர் டையினை உபயோகிப்பதை விட செம்பருத்தி, மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நரைமுடியை மாற்ற முயற்சிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். வயதான பின்னர் ஏற்படும் நரை என்பது அழகை அதிகரிக்கத்தான் செய்யும் அதனை மாற்ற முயற்சி செய்யாமல் அவ்வாறே ஏற்றுக்கொள்வதுதான் அழகோடு ஆரோக்கியமும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.19 hair dye

Related posts

முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெய்

nathan

நுனிமுடி பிளவை தவிர்க்க சில வழிமுறைகள்

nathan

முடி உதிராமல் இருக்க முடியை கட்டுங்க!

nathan

இதை முயன்று பாருங்கள் வீட்டுலே உங்க முடியை ஸ்ட்ரைட்னிங் பண்ணலாம் பால் இருந்தா போதும்

nathan

பயன்படுத்தி பாருஙக! பொடுகை விரட்ட இந்த ஒரு பொருள் மட்டுமே போதும்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பட்டுப்போன்ற மென்மையான கூந்தலைப் பெற சில எளிய வழிகள்!!!

nathan

கூந்தல் வெடிப்பை தடுக்கும் வழிமுறைகள்

nathan

உங்க நெற்றி மேல ஏறிட்டே இருக்கா? முடி உதிர்வை தடுக்க அற்புதமான டிப்ஸ்!

nathan

கொய்யா இலை முடி உதிர்வை கட்டுப்படுத்தி நன்றாக வளர உதவும் …!

nathan