29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
25 1508930874 6
முகப் பராமரிப்பு

அரிசி மாவை இப்படி பயன்படுத்துவதால் நிகழும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?அப்ப இத படிங்க!

முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். பெரும்பாலும் பலர் தங்களது முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் வீட்டிலேயே தீர்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தெந்த பொருளை எப்படி பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பது பற்றி சுத்தமாக தெரியாது.

நீங்கள் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய ஒரு பொருள் அரிசி. ஆனால் இந்த அரிசியை அழகிற்காக பலவிதமாக பயன்படுத்துவதால் கிடைக்கும் ஆச்சரியமூட்டும் அழகு பற்றி உங்களுக்கு தெரியுமா? அரிசியை ஒரு சில பொருட்களுடன் கலந்து பயன்படுத்தும் போது உங்களது முகம் மிகவும் அழகாக மாறும். அரிசியை எந்தெந்த பொருட்களுடன் கலந்து எப்படி பயன்படுத்துவது என்று தெரியாதவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்

1. அரிசி மாவு, பால் சருமம் வெயிலினால் கருமையாகி இருக்கும். இந்த கருமையை போக்கி உங்களது உண்மையான நிறத்தை வெளிக் கொண்டு வர. பாலில் அரிசி மாவை கலந்து அதனை முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும். இதனை அப்படியே 15 நிமிடங்கள் விட்டு பின்னர் கழுவினால் முகம் இழந்த நிறத்தை ஒரே மாதத்தில் பெரும். அரிசியை கழுவிய தண்ணீரில் முகத்தை கழுவி வந்தாலும் இதே போன்ற பலனை பெறலாம்.

2. கருவளையங்கள் கண்களுக்கு அடியில் கருவளையங்கள் இருந்தால், நீங்கள் மிகவும் சோர்வாகவும், ஒரு நோயாளியை போலவும் தோன்றுவீர்கள். அதற்கு வாழைப்பழம், விளக்கெண்ணை, அரிசி மாவு போன்றவற்றை ஒன்றாக கலந்து கருவளையங்களுக்கு மேல் அல்லது கருமையாக உள்ள சருமத்தின் மீது தடவலாம். இது உங்களது கருமையான இடங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரும். உங்களை இளமையாக காட்டும் தன்மையும் இதற்கு உண்டு.

3. தலைமுடிக்கு அரிசி மாவு மற்றும் முல்தாணி மட்டியை சம அளவு எடுத்து கொண்டு, அதை நன்றாக மிக்ஸ் செய்து, தலைமுடிக்கு பேக் போல போட வேண்டும். இதனால் தலைமுடி வலிமையாக காணப்படும்.

4. கருமை போக அரிசி மாவுடன் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை சாறு போன்றவற்றை கலந்து முகத்திற்கு பேக் போட வேண்டும். இது நன்றாக காயும் வரை விட்டுவிட்டு பின்னர் முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும். இதனால் முகம் பளிச்சிடும். வெயிலினால் கருப்பான கலையிழந்த முகத்திற்கு அழகு கூடும்.

5. பொழிவான முகம் உங்களது முகம் மிருதுவாகவும், பொழிவாகவும் இருக்க, அரிசி மாவில் தயிர் மற்றும் தேன் கலந்து முகத்திற்கு பேக்காக போட வேண்டும். இது நன்றாக காய்ந்ததும், இதை சுத்தமாக கழுவி விட வேண்டும். இதனால் முகம் புதுப்பொழிவுடன் இருக்கும்.

6. பாசிப்பயறு, அரிசி மாவு தயிரில் பாசிப்பயறு தூள் அல்லது அரிசி மாவு கலந்து பயன்படுத்தினால் முகம் எப்போதும் இல்லாத அளவிற்கு அழகாக மின்னும்.

7. மேக்கப் போக 2 ஸ்பூன் அரிசி மாவு, 2 ஸ்பூன் தயிர் கலந்து இரவில் முகத்தில் தேய்த்து பிறகு நன்றாக கழுவி விடுங்கள். இதனால் பகலில் போட்ட மேக் அப் கலைந்து இயல்பு நிலைக்கு திரும்பும்.

8. அழுக்குகள் நீங்க சோப்புப் போட்டு போகாத அழுக்குகள், மூக்கு நுனியிலும், மூக்கின் ஓரங்களிலும் தேங்கி நின்றுவிடும். பால் கலந்த அரிசி மாவு கொண்டு ஸ்கிரப் போல தேய்த்தால் அழுக்குகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

9. சுருக்கங்கள் அரிசி மாவில், ஆலிவ் ஆயில் மற்றம் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சரும சுருக்கங்கள் நீங்கும்.

10. ஆடை தழும்புகள் மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால், பிரேஸியரின் ஸ்ட்ராப் எனப்படும் பட்டை, தோள்களில் அழுந்தப் பதிந்து கருமையும், நாளடைவில் புண்ணாக மாறி தழும்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு உள்ளாடை விற்கும் கடைகளில் கிடைக்கக்கூடிய ஸ்ட்ராப் குஷனை வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம். தவிர, குளிக்கும் முன், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு பால் கலந்து கருமை படிந்த இடத்தில் தேய்த்துக் கழுவவும். இது இறந்த செல்களை நீக்கும். பின்னர் பால் ஏடு அல்லது வெண்ணெயைக் கொண்டு கருமை படர்ந்த இடத்தில் தேய்த்து மசாஜ் கொடுக்கவும். நாளடைவில் கருமை மறைந்துவிடும்.

11. மஞ்சளுடன்... 2 ஸ்பூன் அரிசி மாவு, 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 2 ஸ்பூன் பால் மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல செய்து, முகம் மற்றும் கழுத்து பகுதிகள் இரண்டிலும் தடவி 10 நிமிடங்கள் கழித்து ஸ்கிரப் போல மசாஜ் செய்து முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக மாறிவிடும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே முகம் பட்டு போல மாறிவிடும்.

12. வெள்ளரி ஜூஸ் 3 டீஸ்பூன் அரிசி மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் , 1 டீஸ்பூன் தேன் மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து பேஸ்ட் போல செய்து சருமத்திற்கு பயன்படுத்தினால் முகம் பளிச்சென்று அழகாக மாறும்.

13. ஸ்கிரப் கடலை மாவு, அரிசி மாவு, சர்க்கரை, தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்ந்த இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து வட்ட வடிவமாக மசாஜ் செய்ய வேண்டும். இதை மூன்று நிமிடங்கள் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவினால் பட்டு போன்ற மென்மையான முகம் கிடைக்கும்.25 1508930874 6

Related posts

முகத்தையும், கூந்தலையும் பாதுகாக்கும் அரிசி கழுவிய தண்ணீர்

nathan

வீட்டில் இருந்தபடியே அழகான தோலைப் பெற 10 சிறந்த நைட் கிரீம்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா உடம்புக்குள்ள என்ன பிரச்னை இருக்குன்னு இந்த முகப்பருக்களை வெச்சே கண்டுபிடிச்சிடலாம்…

nathan

சூப்பர் டிப்ஸ்! கருமையை போக்கி சிகப்பழகு தரும் டிப்ஸ்

nathan

ஒளிரும் பிங்க் நிற சருமத்தை பெற கடலை மாவை இதனுடன் இப்படி கலந்து பயன்படுத்தனும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

பொலிவான முகத்தைப் பெற வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..?

sangika

சரும பொலிவுக்கு களிமண் பேஸ்பேக்

nathan

உங்களுக்கு தெரியுமா இயற்கை முறையில் வீட்டிலேயே முக அழகை பராமரிக்கும் வழிகள்

nathan