22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
08 1510120081 7
முகப் பராமரிப்பு

உங்களுக்கு அழகான கொழுக்கொழு கன்னங்களை பெற சூப்பரான டிப்ஸ்!அப்ப இத படிங்க!

முகத்திற்கு பொலிவு தருபவை கன்னங்கள். கன்னங்கள் கொஞ்சம் கொழுக்கொழு என்று இருந்தாலே உங்கள் அழகை அதிகரித்துக் காட்டும். அதேசமயம் என்னதான் உடல் என்ன தான் குண்டாக இருந்தாலும் ஒட்டிய கன்னங்கள் முகத் தோற்றத்தையே கெடுத்துவிடும். எனவே ஒட்டிய கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கிய உணவு முறை அவசியம். கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். அதோடு சில மசாஜ் முறைகளையும் செய்ய வேண்டியது அவசியம்.

உணவு முறைகள் அன்றாட உணவில் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய சேர்க்க வேண்டும். காலையில் எழுந்து சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கலவை செய்து முகத்திற்கு பேசியல் போட கன்னம் பளபளப்பாக மாறுவதோடு குண்டாகும்.

உப்பு நீர் மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து அதை வாயில் ஊற்றி வைத்திருந்து பின் கொப்பளிக்க வேண்டும். இதனால் கன்னத்தின் அழகு கூடும். சில ஆப்பிள் துண்டுகள், சில கேரட் துண்டுகள், அரை கப் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கன்னம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயில் கன்னத்தில் தேய்த்து வர பளபளப்புகூடும். பார்ப்பவர்களை பிடித்து கிள்ளத் தூண்டும். கற்றாழையால் செய்யப்பட்ட கிரீம் முகத்திற்கு ஆரோக்கியம் தருவதோடு பளபளப்பையும் தரும். ஒரு கப் பாலில் ஒரு தேக்கரண்டி தேன், கொஞ்சம் சீஸ் ஒரு மேஜைக் கரண்டி ஓட்ஸ் கலந்து குடிக்க வேண்டும்.

ஆரஞ்ச் தினமும் ஆரஞ்ச் ஜூஸ் குடித்து வர கொழுக்கொழு கன்னம் கிடைக்கும். ஒரு டீ ஸ்பூன் தேன், ஒரு டீ ஸ்பூன் பப்பாளி சேர்த்து பேஸ்டாக்கி முகத்தில் அப்ளை செய்யவும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவு தரும்.

உறக்கம் பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண்ணெய், நெய், வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு, கீரைகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.தினமும் எட்டு மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும்.

கவலை கவலை ஏற்பட்டாலே முகத்தின் பொலிவு குன்றி கன்னங்கள் ஒட்டிவிடும். எனவே நடப்பது நன்மைக்கே என்று நினைத்து கவலையை விரட்டுங்கள் அப்புறம் பாருங்கள் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி அழகு அதிகரிக்கும்.

சிரிப்பு முகத்தில் உள்ள தசைகளுக்கான சிறந்த பயிற்சி தான் சிரிப்பு. வாய் விட்டு நன்கு சிரிக்கும் போது, முகத்தில் உள்ள தசைகள் நீட்சியடைவதால், அது கன்னங்கள் அழகாக வைத்துக் கொள்ள உதவும். எனவே எப்போதும் நன்கு சிரித்துக் கொண்டே இருங்கள்.

சூயிங்கம் பொதுவாக சூயிங் கம் போட்டால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் இந்த சூயிங்கம் மெல்லுவது என்பது முகத்திற்கான ஒரு சூப்பரான பயிற்சியாகும். இதனால் இரட்டை தாடைகளை தவிர்க்கலாம்.

பலூன் ஊதுதல் பலூன் ஊதும் பயிற்சியானது மிகவும் சிறந்த பயிற்சியாகும். பலூன் ஊதும் பயிற்சியினால் கன்னங்கள் புத்துணர்ச்சியடைகிறது. கன்னங்கள் கொழுக்கொழுவென ஆவதற்கும் இந்த பயிற்சி உதவுகிறது.
08 1510120081 7

Related posts

முகம் பொளிவு பெற

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றுவது எப்படி தெரியுமா..?

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! பரு வந்த இடத்துல கருப்பா தழும்பு மட்டும் போகவே மாட்டேங்குதா?

nathan

ஸ்கின் டானிக்

nathan

முகத்தையும், கூந்தலையும் பாதுகாக்கும் அரிசி கழுவிய தண்ணீர்

nathan

பெண்கள் சிவப்பழகை பெற

nathan

இறந்த செல்களை உடனடியாக அகற்றி விட சூப்பர் டிப்ஸ்!…

sangika

வயதாவதை தடுக்கும் பேக் ,tamil beauty tips

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க முகம் இப்படி இருக்கா? அதுக்கு உடம்புல இருக்குற இந்த பிரச்சனை தான் காரணம் தெரியுமா?

nathan