28.4 C
Chennai
Thursday, Dec 26, 2024
27 1509100824 3
முகப் பராமரிப்பு

தயிரை கொண்டு இதெல்லாம் செய்து பார்த்திருக்கிறீர்களா !

தலைமுடிப்பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தலையை பிய்த்துக் கொள்கிற நிலையில் தான் இன்று பலரும் இருக்கிறார்கள் . தலைமுடியில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து உதிர்தலை தவிர்த்து நீளமாக வளர வைப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. முடிக்கு போஷாக்கு தரக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது, முடியை முறையாக பராமரிப்பது, அதிக கெமிக்கல் சேர்க்காமல் இருப்பது என உங்கள் கூந்தலை தொடர்ந்து பராமரித்து வந்தால் மட்டுமே உங்களுக்கு முடி உதிர்வில் இருந்து விடுதலை கிடைக்கும்.

நம் வீடுகளில் தினமும் பயன்படுத்துகிற தயிரைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம். அதுவும் உங்களுடைய தலைமுடியை பராமரிக்க பயன்படும் என்பது தெரியுமா? தயிரில் அதிகப்படியான விட்டமின் மற்றும் ஃபேட்டி ஆசிட் உங்களுடைய தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .

தயிர் : தயிர் நமது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால் தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் ஜீரணிக்கப்பட்டிருக்கும். பாலில் லாக்டோ இருப்பது போல தயிரில் லாக்டோபேசில் என்ற என்சைம் ஜீரணக் சக்தியை தூண்டுகிறது. தயிரில் முக்கியமான விட்டமின் சத்துகளும் புரதச்சத்துகளும் அடங்கியிருக்கிறது. கால்சியமும் ரிபோ ஃப்லேவின் என்ற விட்டமின் பி யும் தயிரில் நிறைந்திருக்கிறது.

தயிரும் முட்டை : முட்டையின் வெள்ளைக்கருவுடன் இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதனை தலையில் ஹேர் பேக்காக போட வேண்டும். முடியை லேயர் லேயராக பிரித்து இந்த பேக்கை போடுங்கள். முடியின் வேர்கால்களில் படுமாறு அப்ளை செய்திடுங்கள். இந்த பேக்கை முப்பது நிமிடங்கள் வைத்திருந்த பின்னர் கழுவி விடலாம். பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவிவிடுங்கள். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்யலாம். இந்த பேக்கினால் உங்கள் தலைமுடிக்கு தேவையான ப்ரோட்டீன் கிடைக்கிறது. இதனால் தலைமுடி ஆரோக்கியமாக வளர்ந்திடும்.

வாழைப்பழம் மற்றும் தயிர் : அரை வாழைப்பழம் அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் . அத்துடன் , ஒரு டீஸ்ப்பூன் தயிர் ஒரு டீஸ்ப்பூன் எலுமிச்சை சாறு , ஒரு ஸ்பூன் தேன் மூன்றினையும் கலந்து ஹேர் பேக்காக போடுங்கள். அரை மணி நேரம் காத்திருந்த பின்னர் குளித்துவிடுங்கள். இது உங்கள் தலைமுடியை வறட்சியிலிருந்து காப்பாற்றுகிறது, அதோடு முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது.

ஆலிவ் ஆயில் மற்றும் தயிர் : ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும். முடி உதிர்வைத் தவிர்ப்பதோடு முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. வேண்டுமானால் இத்துடன் எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் கூந்தல் பொலிவுடன் இருக்கும்.

தயிரும் தேனும் : இரண்டு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தலையில் தடவ வேண்டும். முடியின் வேர்கால்களுக்கு படுமாறு தடவிடுங்கள். இதனை வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் தலையில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் தலையில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தவிர்க்க முடியும் .

கற்றாழை தயிர் : மூன்று ஸ்பூன் கற்றாழை ஜெல் இரண்டு ஸ்பூன் தயிர் ஒரு ஸ்பூன் தேன் மூன்றையும் குழைத்து தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்திடுங்கள். பதினைந்து நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் முப்பது நிமிடங்கள் கழித்து தலைக்குளித்துவிடலாம். கற்றாழையில் அதிகப்படியான அமினோ அமிலோம் மற்றும் ப்ரோட்டீன் நிறைந்திருக்கிறது.

அவகேடோ மற்றும் தயிர் : அவகேடோ பழத்தை அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து இருபது நிமிடங்கள் வரை ஹேர் பேக் போட்டு குளித்திடுங்கள். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். அவகேடோவில் விட்டமின் இ அதிகப்படியாக இருக்கிறது. இதில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைய இருக்கிறது. இது முடியின் வறட்சியை தவிர்த்து ஈரப்பதத்தை வளர்க்கிறது.

தேங்காய்ப்பால் மற்றும் தயிர் : ஒரு கப் தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் அரை கப் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்திடுங்கள். ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னர் வெதுவெதுப்பான நீரினால் கழுவிவிடுங்கள். இதனை வாரம் ஒரு முறை செய்திடுங்கள். தேங்காய்ப்பாலில் அதிகப்படியான ஃபேட்டி ஆசிட் மற்றும் விட்டமின்ஸ் இருக்கிறது. இவை தலைமுடியின் வளர்ச்சிக்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.

வெந்தயம் மற்றும் தயிர் : முதல் நாளே வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்திடுங்கள். மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பத்து நிமிடம் வைத்திடுங்கள். பின்னர் அதனை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பின்னர் குளித்திடலாம். வெந்தயத்தில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் தலைக்கு ஊட்டச்சத்தினை கொடுத்திடும்.

எலுமிச்சை சாறு தயிர் : இரண்டு ஸ்பூன் தயிருடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் அரை டீஸ்ப்பூன் தேன் கலந்து ஹேர் மாஸ்க்காக போடுங்கள். இது தலையில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்து, அதோடு தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு எளிய முறையில் தீர்வளிக்கிறது.27 1509100824 3

Related posts

இளமையைப் பாதுகாக்க இரவில் போட வேண்டிய இயற்கை ஃபேஸ் பேக்

nathan

சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க வாரத்திற்கு ஒரு முறை இதைசெய்து வந்தாலே போதும்!…

sangika

முகப்பருவிலிருந்து தப்பிக்க…….

nathan

ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும்…

nathan

20 நிமிடத்தில் கருமை நீங்கி முகம் ஜொலிக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க.

nathan

எண்ணெய் ஓவரா வழியுதா?அட்டகாசமான 6 ஐடியா

nathan

பண்டிகை காலங்களில் பளிச்சென்று மின்ன வேண்டுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க…

nathan

முயன்று பாருங்கள் முகத்திற்கு அற்புத பேஸ் பேக்குகள்!

nathan

சோப்பை பயன்படுத்தாமல் முகத்தை எப்படி சுத்தம் செய்யலாம்

nathan