26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
26 1509020625 facialhair
முகப் பராமரிப்பு

உதட்டின் மேல் முடி வளர்ச்சியை நீக்க நிரந்தர தீர்வு இதை முயன்று பாருங்கள்

ஒரு செயல் ஒரு இடத்தில் நடக்கும்போது சந்தோஷம் தரும், ஆனால் மற்றொரு இடத்தில் நடக்கும்போது சந்தோஷத்தை தராது. அது என்ன? இது என்ன பட்டி மன்ற பேச்சு மாதிரி உள்ளது என்று நினைக்கிறீர்களா? ஆம்! முடி வளர்ச்சி தலையில் அதிகமாக இருக்கும்போது, சந்தோஷப்படுகிற நாம், அதே முடி மற்ற தேவையற்ற இடங்களில் வளரும்போது நமக்கு ஒரு வித கவலையை உண்டாக்குகிறது. குறிப்பாக கால்களில், முகத்தில் வளர்ந்தால் அது நமது நம்பிக்கையை குறைப்பதாக இருக்கும்

பெண்களுக்கு முகத்தில் உதட்டிற்கு மேல் வளரும் முடி ஆண்களின் மீசையை போல் இருப்பதால் பெண்களுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. சிலருக்கு வெளியில் அந்த அளவுக்கு தெரியாதது போல் மெலிதாக தோன்றும் இந்த முடிகள் சிலருக்கு அதிகமாக இருக்கும். தலையில் முடி வளர்வது போல் உதட்டின் மேல் வளர்வதும் சாதாரணமானதுதான். இப்படி அதிகமாக இருக்கும் மீசை போன்ற முடிகள் தோன்றுவதற்கு ஹார்மோன் சமசீரின்மை போன்ற காரணங்கள் உண்டு

பல காஸ்டலியான பொருட்களை பயன்படுத்தி அந்த முடிகளை போக்க நினைத்து வெறுத்து போனவரா நீங்கள். இவற்றை சரி செய்ய பல எளிய வழிமுறைகள் உண்டு. இதனை பயன்படுத்தி உதட்டின் மேல் உள்ள முடிகளை முற்றிலும் போக்கலாம். முயற்சித்து பாருங்கள்.

மஞ்சள் மற்றும் பால்:
தேவையான பொருட்கள்:
1 ஸ்பூன் மஞ்சள்
1 ஸ்பூன் பால் அல்லது தண்ணீர்

செய்முறை:
மஞ்சளை தண்ணீர் அல்லது பால் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உதட்டின் மேல் தடவவும்.
அரை மணி நேரம் அப்படியே விடவும்.
காய்ந்த பிறகு தண்ணீரால் கழுவவும்.
ஒரு வாரத்தில் பல முறை இதனை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
பால் பொருட்களில் ஒவ்வாமை இருப்பவர்கள் இதில் பாலை சேர்க்க வேண்டாம்.

முட்டை:
தேவையான பொருட்கள்:
1 முட்டை (வெள்ளை கரு மட்டும்)
1 ஸ்பூன் கார்ன் மாவு
1 ஸ்பூன் சர்க்கரை

செய்முறை:
முட்டையின் வெள்ளை கருவை, கார்ன் மாவு மற்றும் சர்க்கரையுடன் சேர்க்கவும் .
பேஸ்ட் பதம் வரும் வரை நன்றாக கலக்கவும்.
உதட்டின் மேல் பகுதியில் இதனை தடவவும்.
30 நிமிடம் கழித்து காய்ந்ததும் அந்த கலவையை உரித்து எடுக்கவும்.
ஒரு வாரத்தில் 2 முறை இதனை செய்யலாம் . ஒரு மாதத்திற்குள் நல்ல பலன் கிடைக்கும்.

பொட்டுக்கடலை மாவு:
தேவையான பொருட்கள்:
1 ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு
1 சிட்டிகை மஞ்சள் தூள்

தண்ணீர்

செய்முறை:

பொட்டுக்கடலை மாவுடன் நீர் சேர்த்து அதில் 1 சிட்டிகை மஞ்சள் சேர்க்கவும்.
உதட்டின் மேல் இந்த கலவையை தடவவும்.
நன்றாக காய விடவும்.
காய்ந்தவுடன் முடிகள் இருக்கும் பகுதியில் மேல் நோக்கி ஸ்க்ரப் செய்து அந்த கலவையை நீக்கவும்.
பின்பு நீரால் முகத்தை கழுவவும்.
வாரத்திற்கு 2 முறை இதனை செய்யலாம்.

சர்க்கரை:
தேவையான பொருட்கள்:
2 ஸ்பூன் சர்க்கரை
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
ஒரு சிறு மெல்லிய துணி

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு லேசாக சூடாக்கவும்.
பின்பு அதில் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
ஓரளவுக்கு திடமாக ஆகும்வரை கிளறவும்.
பின்பு அந்த கலவையை குளிர செய்து, உதட்டின் மேல் பகுதியில் தடவவும்.
ஓவர் மெல்லிய துணியை அந்த கலவையின் மேல் போட்டு சூழல் வடிவில் தேய்க்கவும்.
அந்த துணியை, முடி வளர்ச்சி இருக்கும் திசையில் வேகமாக பிடித்து இழுக்கவும்.
இதனால் முடி வளர்ச்சி தடுக்கப்படும்

கடலை மாவு:
தேவையான பொருட்கள்:
1 ஸ்பூன் கடலை மாவு
1 ஸ்பூன் யோகர்ட்
1 சிட்டிகை மஞ்சள் தூள்

செய்முறை:
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, யோகர்ட் மற்றும் மஞ்சள் தூளை சேர்க்கவும்.
இந்த பேஸ்டை கொண்டு உதட்டின் மேற்புறம் மென்மையாக மசாஜ் செய்யவும்.
15-20 நிமிடம் கழித்து மென்மையாக காய்ந்த கலவையை தேய்த்து எடுக்கவும்.
தண்ணீரால் முகத்தை கழுவவும்.
வாரத்திற்கு 2 முறை இதனை செய்யலாம். உதட்டின் மேல் உள்ள முடிகள் உதிரும் வரை இதனை செய்யலாம்.

கோதுமை மாவு:
தேவையான பொருட்கள்:
1 ஸ்பூன் கோதுமை மாவு
1 ஸ்பூன் பால்
1 சிட்டிகை மஞ்சள் தூள்

செய்முறை:
மேலே கூறிய எல்லா பொருட்களையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.
இதனை உதட்டின் மேல் தடவவும்.
நன்றாக காய விடவும்.
காய்ந்தவுடன் அதனை உரித்து எடுக்கவும்.
தண்ணீரால் முகத்தை கழுவவும்.
3 நாட்களுக்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

எலுமிச்சை :
1 எலுமிச்சை
1 ஸ்பூன் சர்க்கரை

செய்முறை:
ஒரு எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி கொள்ளவும்.
அதன் சதை பகுதியில் சிறிது சர்க்கரையை தூவி உதட்டின் மேல் புறத்தில் அந்த எலுமிச்சையை தேய்க்கவும்.
தொடர்ந்து 10 நிமிடங்கள் செய்யவும்.
பின்பு நீரால் முகத்தை கழுவவும்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதனை செய்யவும்.
மேலே கூறிய முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் உதட்டின் மேல் முடிகள் உதிர்ந்து உங்கள் அழகு மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். முயற்சித்து பாருங்கள்.26 1509020625 facialhair

Related posts

கொரோனா ஊரடங்கால் பியூட்டி பார்லர் இல்லை என்ற கவலையா? வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம் வாங்க

nathan

விஸ்கி ஃபேஸ் பேக்குகள்

nathan

முகம் பளிச்சுன்னு ஜொலிக்கணுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா கருவளையங்களை போக்க மேக்கப் மட்டும் போதாது..! இதை முயன்று பாருங்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரே நாளில் உங்க முகம் பளபளன்னு மாறனுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே லிப் ஸ்க்ரப் தயாரிக்கலாம்!

nathan

உங்க நெற்றி நீளமா இருக்கா?அப்போ ‘லைட்’டா குறைக்கலாமா??

nathan

எந்த முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

ஹோம் ஃபேஷியல் (சமையலறையில் இருக்கு ஃபேஷியல் அயிட்டம்)

nathan