23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
25 1508932638 1
சரும பராமரிப்பு

நீங்கள் உருளைக்கிழங்க இப்படி பயன்படுத்தி பாத்திருக்கீங்களா?அப்ப இத படிங்க!

ஒவ்வொருவரும் தங்களை அழகாக காட்டிக் கொள்ளவேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதற்காக சிலர் எடுத்துக் கொள்கிற மெனக்கெடல்களை எல்லாம் பார்த்தால் நமக்கே வியப்பாக இருக்கும். 00:00 00:00 நம்முடைய சருமத்தை எளிதாக பராமரிக்க குறிப்பாக வேறு எந்த உபாதைகளும் ஏற்படாமல் தவிர்க்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தை எப்படி பராமரிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்க. அதிகம் செலவழிக்கத் தேவையில்லாத இந்தப் பொருளினால் உங்கள் சருமத்தில் எக்கச்சக்க பலன்கள் கிடைக்கப்போகிறது. உருளைக்கிழங்கு எல்லாருக்கும் பிடிக்கும். அதனை சாப்பிட மட்டுமல்ல உங்களுடைய அழகை பராமரிக்கவும் அதனை பயன்படுத்தலாம்.

உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கு உலகம் முழுக்க சுலபமாகக் கிடைக்கும் உணவுகளில் ஒன்று, மண்ணில் விளையும் கிழங்கு வகைகளில் உருளைக்கிழக்கு ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. உருளைக்கிழங்கில் கலோரிகள்,பொட்டாசியம், விட்டமின் சி, தாது உப்புகள், மாவுச்சத்துகள், நார்ச்சத்துக்கள் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

கருவளையம் : கண்களைச் கருவளையம் ஏற்ப்பட்டிருந்தால் உருளைக்கிழங்கு உங்களுக்கு மிகச்சிறந்த நிவாரணத்தைக் கொடுக்கும். அதோடு கண்களுக்கு கீழே வீங்கியிருப்பது போன்றவையும் உருளைக்கிழங்கினால் சரி செய்யப்படும். உருளைக்கிழங்கினை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சாறினை கண்களைச் சுற்றி தேய்த்து காய்ந்ததும் கழுவி விடலாம். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்யலாம்.

எண்ணெய் சருமம் : உருளைக்கிழங்கு சாறும் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் அரை டீஸ்பூன் அளவு கலந்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்துப்பகுதிகளில் தடவி பத்து நிமிடங்கள் காத்திருந்து தண்ணீரில் கழுவி விடலாம். இப்படிச் செய்வதால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் பொலிவு பெறும். அதோடு முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையையும் நீக்கிடும். எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்களுக்கு இது சிறந்து வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

வரண்ட சருமம் : உருளைக்கிழங்கு எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல வரண்ட சருமம் உள்ளவர்களுக்கும் பயன்படுகிறது. உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் பால் பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் பாதாம் ஆயிலை சேர்த்து பேஸ்ட்டாக முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். சுமார் இருபது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இதனை வாரத்தில் ஒரு முறை செய்யலாம். இப்படிச் செய்வதால் உங்கள் சரும சாஃப்ட்டாக மாறிடும்

க்ளன்சர் : உருளைக்கிழங்கினைக் கொண்டு ஹோம் மேட் க்ளன்சர் எளிதாக தயாரிக்கலாம். முக்கால் கப் வெள்ளரிப் பேஸ்ட்டுடன் அரை கப் உருளைக்கிழங்கு பேஸ்ட் கலந்து முகத்தில் பூசி வர அது முகத்தில் உள்ள அழுக்குகளை எல்லாம் நீக்கிடும். அத்துடன் சருமத்தில் ரத்த ஓட்டத்தையும் அதிகரிப்பதால் அவை முகத்திற்கு பளபளப்பை கொடுக்கும்.

நிற மாற்றம் : நீண்ட நேரம் வெயிலில் பணியாற்றுபவர்களுக்கு முகத்தில் திட்டு திட்டாக நிறமாற்றங்கள் இருக்கும். அதனை உருளைக்கிழங்கு உதவியுடன் சரி செய்திட முடியும். தயிருடன் உருளைகிழங்கு பேஸ்ட் கலந்து பேஸ் மாஸ்க்காக போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அது நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.

சுருக்கங்கள் : முகத்தில் தோன்றிடும் சுருக்கங்களைப் போக்க உருளைக்கிழங்கை நறுக்கி பீரசில் வைத்து குளிரச் செய்திடுங்கள். பின்னர் அந்த குளிர்ந்த உருளைக்கிழங்கினை எடுத்து சருமத்தில் வைத்திருக்க வேண்டும். தினமும் கூட இதனைச் செய்யலாம்.

நரைமுடி : உருளைக்கிழங்கினை பயன்படுத்தினால் நரைமுடி வராமல் தவிர்க்கலாம். உருளைக்கிழங்கினை பாதியாக நறுக்கி நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அது ஆறியதும். தோல் நீக்கி நன்றா குழைய பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். தேவையென்றால் அதில் தயிர் அல்லது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இந்த கலவையை அப்படியே ஹேர் பேக்காக போட்டு 40 நிமிடங்கள் வரை ஊறியதும் தலைக்குளிக்கலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்வதால் நரை முடி வராமல் தவிர்க்க முடியும்.

சன் டேன் : விட்டமின்ஸ் மற்றும் தாதுக்கள் நிறைந்த உருளைக்கிழங்கினை பயன்படுத்தி சன் டேனை போக்க முடியும். கேரட் மற்றும் உருளைக்கிழங்கினை வேக வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இரண்டு கலவையையும் ஒன்றாக சேர்த்து, முகம்,கழுத்து மற்றும் கைகள் என வெயில் படும் இடங்களில் தடவி அரை மணி நேரம் வரை காத்திருந்து கழுவலாம். தொடர்ந்து இப்படிச் செய்து வர உங்கள் சருமத்தில் இருக்கும் சன் டேன் நீங்கிடும்.

தழும்புகள் : பருக்கள், கரும்புள்ளிகல் தோன்றி மறைந்தாலும் அவற்றால் ஏற்படும் தழும்புகள் மறைவதில்லை. தழும்புகளை போக்க உருளைக்கிழங்கு மிகச்சிறந்த நிவாரணமாக இருக்கிறது. உருளைக்கிழங்கு பேஸ்ட்டுடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி வர முகத்தில் இருக்கும் தழும்புகள் எல்லாம் மறைந்திடும்.

பொடுகு : உருளைக்கிழங்கினை முதலில் வேக வைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனை தலையில் தடவி, குறிப்பாக முடியின் வேர்கால்களுக்கு படுமாறு தலைமுழுவதும் தடவி ஹேர் கேப் அணிந்து கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் நன்றாக ஊறிய பின்னர் தலைக்குளித்து விடலாம். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். இப்படிச் செய்வதினால் பொடுகுத் தொல்லை குறையும். அதே சமயம் தலையில் அரிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

முடி உதிர்தல் : முடிக்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்கிடும் உருளைக்கிழங்குடன் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து தலையில் ஹேர் மாஸ்க்காக போடலாம். அதிக வறட்சியினால் முடி வலுவிழந்து உடைவது, அதிகமாக முடி உதிர்வது போன்றவை இதனால் தவிர்க்கப்படும்.

நீளமான கூந்தலுக்கு : முடியை உதிராமல் தவிர்ப்பது மட்டுமல்ல புதிய முடிகளை உருவாக்கவும் செய்ய வேண்டும் அப்போது உங்களுக்கு அடர்த்தியான கூந்தல் கிடைக்கும். இதற்கு அரை கப் உருளைக்கிழங்கு சாறுடன் அரைகப் வெங்காய்ச் சாறு கலந்து தலை முழுவதும் தடவி ஒரு மணி நேரம் ஊற வேண்டும். இப்படிச் செய்வதானல் முடியின் வேர்கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

அரிப்பு : தலையில் அடிக்கடி அரிப்பு ஏற்ப்பட்டுக் கொண்டேயிருந்தால் அதனை தவிர்க்க உருளைக்கிழங்கினை பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கில் இருக்கும் அமிலம் தலையில் ஏற்ப்பட்டிருக்கும் பாக்டீரியாவை அழிக்க வல்லது. உருளைக்கிழங்கினை அறைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சாறினை தலையில் தடவி பத்து நிமிடம் ஊறிய பின்னர் கழுவி விடலாம். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்ய வேண்டும்.25 1508932638 1

Related posts

அழகு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரும் பாட்டி வைத்தியங்கள்!!!

nathan

எண்ணெய் சருமத்தினருக்கான சிறந்த நேச்சுரல் டோனர்கள்

nathan

சோர்வை போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்

nathan

அனைத்து சரும பிரச்சனைகளையும் போக்கும் வாசனை குளியல் பொடி

nathan

கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையத்தை போக்கும் எலுமிச்சை

nathan

பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க…..

sangika

உடலில் ஏற்படும் காயங்கள், பெண்களின் கர்ப்பக்காலத்தில் வயிற்றின் விரிவு மற்றும் உடல் பருமன் அதிகரித்தல் போன்ற காரணங்களால் ஏற்பட்ட  தழும்புகளை மறையச்செய்யலாம்.

nathan

கரும்புள்ளிகளுக்கு ‘குட்பை’!

nathan

கழுத்தின் பின்புறம், முழங்கால், கணுக்கால் கருமை போகணுமா?

nathan