25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
27 1509096261 6
முகப் பராமரிப்பு

கண் சுருக்கங்களைப் போக்கி வசீகரமாக்கும் அற்புத எண்ணெய்கள்!!

வயது முதிர்வை வெளிப்படுத்தும் அறிகுறிகள் முதலில் தோன்றுவது கண்களில் தான். கண்ணில் சுருக்கம், மடிப்பு போன்றவை ஏற்படுவது வயது முதிர்வின் அறிகுறிகள். இவை சருமத்தை முதிர்ச்சியாக காட்டுவது மட்டும் அல்ல, கண்களையும் சோர்வாக காண்பிக்கும். விலை உயர்ந்த ஒப்பனை பொருட்களால் இந்த சுருக்கங்களை சரி செய்ய முடியாது. மறைக்க மட்டுமே முடியும். ஆனால் இவை மறைக்கப்பட ண்டிய விஷயம் அல்ல முற்றிலும் தடுக்க பட வேண்டிய விஷயம்.

இவற்றை போக்குவதற்கு சில எண்ணெய்கள் பெரிதும் உதவுகின்றன . ஆகவே கண்களுக்கான கிரீம்களில் இந்த எண்ணெய்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய எண்ணெய்கள் கண் சுருக்கம் மற்றும் மடிப்புகளை போக்க எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை பற்றியது தான் இந்த தொகுப்பு.

இந்த எண்ணெய்களில் வயது முதிர்வை தடுக்கும் சக்தி மிக்க ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இவை கண்களை சுற்றியுள்ள சுருக்கங்களை போக்கி உங்களை இளமையாக வைக்க உதவுகிறது. சருமத்திற்கான எந்த ஒரு அழகு குறிப்புகளையும் முதலில் ஒரு சிறு பகுதியில் பரிசோதித்து விட்டு பின்பு முகத்திற்கு பயன்படுத்துவது நல்லது.

குங்கிலியம் எண்ணெய்:
இந்த குங்கிலியம் எண்ணெய்யுடன் 4-5 துளி தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும். இந்த கலவையை கண்களில் சுருக்கம் உள்ள இடத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து ஈர துணியால் அந்த எண்ணெய்யை துடைத்து எடுக்கவும். வாரம் ஒரு முறை இந்த முறையை முயற்சிக்கவும்.

சந்தன எண்ணெய்: 2 துளி சந்தன எண்ணெய்யுடன் ½ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை கலக்கவும். உங்கள் விரல்களால் கண்களை சுற்றி உள்ள பகுதிகளில் இந்த எண்ணெய்யை தடவவும். 10 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவவும். வாரம் ஒரு முறை இதனை பயன்படுத்தி நல்ல மாற்றத்தை உணரலாம்.

வெள்ளைப்போளம் (Myrrh) எண்ணெய்: 2 துளிகள் வெள்ளைப்போளம் எண்ணெய்யுடன் ½ ஸ்பூன் தேனை சேர்க்கவும். இந்த கலவையை சுருக்கங்கள் உள்ள இடத்தில் தடவவும். 5 நிமிடம் கழித்து அந்த பகுதி காய்ந்தவுடன் தண்ணீரால் கழுவவும். வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி சுருக்கங்கள் மறைய காணலாம்.

கிளாரி சேஜ்(Clary Sage ) எண்ணெய்: 3-4 துளி ஆளி விதை எண்ணெய்யுடன் 2 துளிகள் க்ளாரி சேஜ் எண்ணெய்யை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். 5 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தவும். விரைவில் உங்கள் கண் சுருக்கங்கள் மறையும்.

டீ ட்ரீ எண்ணெய்: கண்ணுக்கு தடவும் க்ரீம் ½ ஸ்பூனுடன் 2 துளி டீ ட்ரீ எண்ணெய்யை சேர்க்கவும். இந்த கலவையை கண்களில் கோடுகள் அல்லது சுருக்கங்கள் இருக்கும் இடத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கண்களை சுத்தம் செய்யவும். 2 வாரங்களுக்கு ஒரு முறை இதனை செய்யவும்.

ரோஸ்மேரி எண்ணெய்: 2 துளிகள் ரோஸ்மேரி எண்ணெய்யுடன் 5 துளிகள் பாதாம் எண்ணெய்யை சேர்த்து, கண்களை சுற்றியுள்ள பகுதியில் தடவவும். 10 நிமிடம் கழித்து தண்ணீரால் கண்களை கழுவவும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை இந்த முறையை பின்பற்றி கண்களை சுற்றி ஏற்பட்டுள்ள சுருக்கத்தை போக்கலாம்.

லாவெண்டர் எண்ணெய்: 3 துளிகள் லாவெண்டர் எண்ணெய்யுடன், ½ ஸ்பூன் யோகர்ட் மற்றும் 3 துளிகள் தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும். இவற்றை ஒன்றாக கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். 10 நிமிடம் நன்றாக காய விடவும். பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும். சிறந்த தீர்வுகளை பெற வாரத்திற்கு ஒரு முறை இதனை பின்பற்றவும்.

அவகேடோ எண்ணெய்: ½ ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 2-3 துளிகள் அவகேடோ எண்ணெய்யை சேர்த்து கலந்து சுருக்கம் உள்ள இடத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து வெந்நீரில் நனைக்கப்பட்ட ஒரு துணியால் அந்த கலவையை அகற்றவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்யவும்.

நரந்தம் எண்ணெய்: நரந்தம் எண்ணெய் 3 துளிகளுடன் 2 ஸ்பூன் அவகேடோ பழ விழுதை சேர்க்கவும். இந்த பேஸ்டை கண்களை சுற்றியுள்ள பகுதியில் தடவவும். 10 நிமிடம் கழித்து ஈர துணியால் துடைக்கவும். வாரத்திற்கு 2 முறை இதனை செய்து வரலாம். விரைவில் சுருக்கங்கள் மறையும்.

ஜெரனியம் எண்ணெய்: சருமத்திற்கு போடும் மாய்ஸ்சரைசேருடன் 2 துளி ஜெரனியம் எண்ணெய்யை சேர்த்து கலக்கவும். அந்த கலவையை கண்களை சுற்றியுள்ள பகுதியில் தடவவும். 15 நிமிடம் கழித்து ஈர துணியால் அந்த கலவையை அகற்றவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்து வரலாம். மேலே கூறிய வகைகள் அனைத்தும் இயற்கையான வழிமுறைகள். இவற்றை பயன்படுத்தி அழகான இளமையான பளிச்சென்ற கண்களை பெற்று வயது முதிர்வை தடுக்கலாம்.27 1509096261 6

Related posts

சூப்பர் டிப்ஸ்! சரும வறட்சியை போக்கும் ஆவாரம் பூ

nathan

பேஷியல் என்பது என்ன?

nathan

முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்ற உதவும் 6 பொருட்கள்!

nathan

வறண்ட மற்றும் எண்ணெய் பசை மிக்க முகங்களுக்கு

nathan

முக அழகுக்கு ஆதாரம்-ஆவாரம்..

nathan

முகம் அழகு பெற ஹோம் பேஷியல்கள்

nathan

பேரழகியா மாறணுமா?…அப்ப இத மட்டும் வீட்லயே முயன்று பாருங்கள்…

nathan

கோடைகால சருமத்தை பாதுகாக்க ஆண்கள் இந்த டிப்ஸை பின்பற்றினால் போதும்…!

nathan

Super பேஷியல் டிப்ஸ்…..!

nathan