28.3 C
Chennai
Tuesday, Jul 15, 2025
24 1508849595 5
சரும பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா அழகுக்காக இப்படியெல்லாமா செய்வார்கள்?

18 ஆம் நூற்றாண்டு : இன்றைக்கு அளவுக்கு அவ்வளவாக யாரும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காத காலம். அப்போதே தன் சரும நிறத்தை வெள்ளையாக மாற்ற வேண்டி பல பிரயத்தனங்களை செய்திருக்கிறார்கள். சருமத்தில் நிறமாற்றம் ஏற்ப்பட்டிருந்தால் அவை தங்களுக்கு இழுக்கு என்றே கருதினர். வெள்ளைச் சருமம் வேண்டும் என்பதற்காக ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன் வைன் கலந்து முகத்தில் பூசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் மேலை நாட்டுப் பெண்கள்.

வெள்ளை திரவம் : 1700களில் பெண்கள் தங்கள் சரும நிறத்தை மேம்படுத்துவதற்காக Ceruse என்ற பொருளை பயன்படுத்தினர். இன்றைக்கு நாம் சர்வசாதரணமாக பயன்படுத்திடும் முக கிரீம் போலத்தான், ஆனால் அவை சிருஷ் என்பது கார்பனேட் மற்றும் ஹைட்ராக்ஸைட் கலந்த கெமிக்கல் இது வெள்ளையாக இருக்கும். இதனைப் பயன்படுத்தினால் சருமத்திற்கு ஆபத்து என்று அப்போதே பலரும் எச்சரித்திருக்கிறார்கள். அந்த எச்சரிக்கையையும் மீறி பெண்கள் பலர் அதனை தங்கள் முகத்திற்கு பயன்படுத்தினார்களாம்.

ப்யூட்டி பேட்ச்ஸ் : இன்றைக்கு முகத்தில் எங்கேனும் மச்சம் தோன்றினால் அதனை போக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்போம் . ஆனால் மச்சத்தைக் கூட தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் முந்தைய காலத்து மக்கள். மச்சத்தையே அழகாக காட்டும் வகையில் விதவிதமான வடிவங்கள் ஸ்டிக்கர்களை முகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதயம்,நட்சத்திரம் வடிவம் தான் அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

வெள்ளை முடி : இன்றைக்கு ஒரு வெள்ளை முடிவந்துவிட்டாலே பதறுகிறோம். வயதாகிவிட்டது என்று வருத்தப்படுகிறோம். ஆனால் அன்றைக்கு வெள்ளை முடி தான் அழகாம். அதுவும் வெள்ளை முடி விக் விரும்பி அணிவது பழக்கமாக இருந்திருக்கிறது. வெள்ளை விக் வாங்க வசதியில்லாதவர்கள் தங்கள் முடிகளில் வெள்ளைப்பவுடரை தெளித்துக் கொள்வார்களாம்.

முத்துப் பவுடர் : அழகுக்காக அந்த காலத்து பெண்கள் முத்துப் பவுடரை பயன்படுத்தியிருக்கிறார்கள். இவை மிகவும் விலையுயர்ந்ததாகும். அதோடு முகத்தில் இருக்கும் தழும்புகளை மறைக்கவும் அரிசி மாவும், ஜிங்க் ஆக்ஸைடு போன்றவற்றை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஐ ட்ராப்ஸ் : கண்களை அழகாக காமிக்க, கண்மை, ஐ ஷேடோ, ஐ லைனர்,மஸ்கரா போன்றவற்றைத் தானே இப்போது பயன்படுத்துகிறோம். ஆனால் முந்தைய காலத்துப் பெண்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? ஐ ட்ராப்ஸ் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் அந்த ட்ராப்ஸ் எலுமிச்சைச் சாறின் மூலக்கூறுகளால் செய்யப்பட்டது. இந்த ட்ராப்ஸ் பயன்படுத்தினால் கண்கள் அழகாக தெரியும் என்று நம்பியிருக்கிறார்கள்.

இமைகள் : இன்றைக்கு எல்லாரும் புருவ முடிகளைத் தானே ட்ரிம் செய்கிறோம். ஆனால் பண்டைய காலத்து பெண்கள் தங்களின் இமைகளில் இருக்கும் முடிகளை ட்ரிம் செய்திருக்கிறார்கள். அதில் சிலர் விளக்கெண்ணையையும் தடவி பளப்பளப்பாக காட்டிக் கொள்வாரக்ளாம்.

நரம்புகள் : நம்மை விட அந்த காலத்துப் பெண்கள் தங்களின் அழகு குறித்து அதிக அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதற்கு இந்த ஒரு சம்பவமே போதும். தங்கள் நரம்புகளில் நீல நிற அல்லது வயலெட் நிற பென்சிலால் வரைந்து கொள்வார்கள். இதனால் நரம்புகள் மட்டும் தனித்து தெரியுமாம்.

முதலைக் கழிவு : ஆரம்ப காலங்களில் எண்ணற்ற விலங்குகளின் பொருட்கள் அழகுக்காக பயன்படுத்தப்பட்டது, குறிப்பாக சருமத்திற்கு . கிரேக்க மற்றும் ரோமானியர்கள் மத்தியில் தங்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த முதலையின் கழிவை பயன்படுத்தியிருக்கிறார்கள். முதலையின் கழிவில் குளிப்பதற்க்கென்றே ப்ரத்யோக பாத் டப்பும் இருந்திருக்கிறது.

டிம்பிள் : சிரிக்கும் போது கண்ணத்தில் குழி விழுந்தால் அழகு தான். அதற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று நாமே பரிதாப்பப்படும் அளவுக்கு தங்களின் அழகை மெருகேற்ற சிரமப்பட்டிருக்கிறார்கள். ப்ளாஸ்டிக் சர்ஜரி அதிலும் குறிப்பாக இந்த டிம்பிள் போன்றவை எல்லாம் இந்த யுகத்தினர் கண்டுபிடித்தது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறு, அந்த காலத்திலேயே பெண்கள் தங்களது டிம்பிளுக்காக என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? இசபெல்லா கில்பர்ட் என்பவர் டிம்பிள் மெஷின் என்று ஒன்றை கண்டுபிடித்தார். அதனை நாம் முகத்தில் அணிந்து கொள்ள வேண்டும். சரியாக எங்கே நமக்கு குழி விழ வேண்டும் என்கிறோம் அங்கே இரண்டு கண்ணங்களிலும் ஒரு பொருளை வைத்து அழுத்தப்படும். குறைந்தது ஒரு நாள் முழுக்க இப்படி இருக்க வேண்டுமாம். இது ரத்த ஓட்டத்தை பாதிக்கும், பயங்கரமான வலியெடுக்கும் என்று அப்போதே பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

டயட் : அழகுக்கென்று பெண்கள் தங்கள் சருமத்தை மட்டுமல்ல உடலையும் ஒரு வழி செய்திருக்கிறார்கள். இன்றைக்கு இருந்தது போலவே ஸ்லிம்மாக இருப்பது தான் அழகு என்று அப்போது நம்பியிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் எடுத்துக் கொண்டது என்ன தெரியுமா? டயட்.. அடடே நாமும் டயட் தானே இருக்கிறோம் என்று பெருமைப்பட வேண்டும் அவர்கள் மேற்கொண்டது மண்புழு டயட். மண்புழு முட்டையினை மாத்திரைகளாக உட்கொண்டிருக்கிறார்கள். அவை வயிற்றில் நிறைவைத் தருமாம். அதனால் அதிகப்படியான கலோரி உணவினை நம்மால் சாப்பிட முடியாதாம். இது வயிற்றுக்குள் வளரவும் செய்யும் பின்னர் உடலிருந்து நீக்க அவர்கள் என்ன பாடு பட்டிருப்பார்களோ!!!

கால்கள் : சீனாவில் இந்தப் பழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது. சீனாவில் வசிக்கும் டங் இன மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் பரவலாகியது. அங்கே 4 வயதுடைய பெண் குழந்தையின் கால்களை குறிப்பாக கால் விரல்களை நெருக்கி டைட்டாக துணியால் கட்டுகிறார்கள். பின்னர் மிகச் சிறிய ஷூவை அணிவித்து. கால்களை இதற்கு மேல் வளர விடக்கூடாது என்கிறார்கள். பின்னர் இந்த நடைமுறை வீட்டின் மூத்த மகளுக்கு மட்டும் என்றானது.

பற்கள் : இப்போதைக்கு வெள்ளை நிறமுடைய பளபளக்கும் பற்கள் தான் அழகு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் முந்தைய காலத்துப்பெண்களுக்கு பற்கள் கருப்பாக இருக்க வேண்டுமாம். இப்போது திருமணமான பெண்கள் என்பதை காலில் மெட்டி, நெற்றியில் குங்குமம் ஆகியவற்றை அடையாளங்களாக வைத்திருப்போம். அன்றைக்கு அவர்களின் பற்களைப் பார்த்து தான் கண்டுபிடிப்பார்களாம். ஜப்பானில் இருக்கும் பெண்களுக்கு மத்தியில் இந்த நடைமுறை இருந்திருக்கிறது. முதலில் மாதுளம் பழத்தை பயன்படுத்தி பற்களில் இருக்கும் எனாமலை மறைக்கிறார்கள். பின்னர் ஜப்பானில் அதிகம் வளரும் சுமாக் மரக்கூழை குழைத்து பற்களில் பூசிக்கொள்கிறார்கள்.

சிறுநீர் : முகத்தைப் பார்த்து பேசும் போது கண்கள், பற்களைத் தான் கவனிப்போம். பற்களுக்காக அதன் நிறத்திற்காக இப்போது என்னவெல்லாம் மருந்துகளை எடுக்கிறோம். ஆனால் பண்டைய காலத்து ரோமானிய மக்கள் ப்ரோச்சுகீசிய மக்களின் சிறுநீரை தங்கள் பற்களை. பல ஜார்களில் சிறுநீர்கள் கப்பலில் அனுப்பப்பட்டது. அதில் இருக்கும் அமோனியா பற்களில் படரும் பாக்டீரியாவை அழிக்கும் என்று நம்பியிருக்கிறார்கள்.

24 1508849595 5

 

Related posts

ஸ்ட்ராபெர்ரி ‘ஸ்கின்’ணே….

nathan

சருமத்தை மென்மையாக்கும் காய்கறிகள்

nathan

சூப்பர் டிப்ஸ்.. சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் சிட்ரஸ் பழங்கள்!

nathan

இறந்த செல்களை நீக்கும் ஸ்க்ரப்பிங்

nathan

கை, கால், முகத்தில் இருக்கும் முடியை நீக்குவதற்கு!…

sangika

karuvalayam poga tips in tamil -கருவளையத்தை (Dark Circles) குறைக்க

nathan

சருமத்தை சுத்தமாக்கும் எலுமிச்சை பேஸ் பேக்

nathan

கடுகை பயன்படுத்தி முகத்தை அழகாக்கலாம்

nathan

எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…

nathan