26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
25 wrinkle reducers 300
முகப் பராமரிப்பு

உங்க முகச்சுருக்கத்தை உடனடியாகப் போக்க வேண்டுமா இதோ சில டிப்ஸ்…?

முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக பெண்களுக்கே சீக்கிரமாக வந்துவிடுகிறது. பொதுவாக சுருக்கங்கள் வருவதற்கு காரணம், முகத்தில் வலுவாக பிணைக்கப்பட்டிருக்கும் திசுக்கள் தளர்ந்து சுருக்கத்தை ஏற்படுத்துகிறது. அவை பெரும்பாலும் வயது அதிகமாகிவிட்டால் வரும். இது இயற்கையான செயல். ஆனால் சில சமயம் சிறுவயதிலேயே சுருக்கங்கள் வந்துவிடுகிறது. அதற்கு சுற்றுச்சூழல் மாசடைந்து இருப்பது மற்றும் சூரியக் கதிர்கள் சருமத்தில் படுவதே காரணமாகும்.

இவற்றை போக்குவதற்கு செயற்கையான முறையில் தயாரித்திருக்கும் சுருக்கங்களை போக்கும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்தி இருப்போம். இருப்பினும் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் போகாமல் இருக்கும். இத்தகைய சுருக்கங்களை போக்க சில இயற்கையான பொருட்கள் இருக்கின்றன.

நீராவி இது முகத்தில் இருக்கும் சுருக்கத்தை போக்க உதவும் மிகச் சிறந்த முறையாகும். முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விடவும். பின் அதனை முன் முகத்தை வைத்து 15 நிமிடம் நீராவி பிடிக்கவும். இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கிவிடும். பின் ஆவி பிடித்த பிறகு ஒரு சுத்தமான துணியால் முகத்தை துடைத்து விடவும். இதனால் முகமானது சற்று இறுக்கம் அடையும். மேலும் ஆவி பிடித்து துடைத்த பிறகு, முகத்திற்கு ஃபேசியல் கிரீமை போட்டு சற்று நேரம் மசாஜ் செய்யவும். இதனால் முகமானது பொலிவுடன் இருக்கும். இதனை வாரத்திற்கு இரு முறை, படுக்கும் முன் செய்ய வேண்டும்.

பருப்புவகை பருப்புகளை வைத்து ஃபேஸ் பேக் செய்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும். 5-6 டேபிள் ஸ்பூன் எல்லா பருப்புகளும் கலந்த பருப்புகளை எடுத்துக் கொண்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது பாலை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் முகத்தில் உள்ள சருமம் இறுக்கமடைவதுடன், மென்மையும் அடைகிறது. ஆகவே இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவதோடு, முகத்திற்கு நிறத்தையும் கொடுக்கிறது.

கடலை மாவு ஃபேஸ் மாஸ்க் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், ஒரு ஸ்பூன் தேனை விட்டு கலந்து, முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கும் சருமம் இறுக்கம் அடைந்து, சுருக்கத்தை போக்குகிறது. இந்த ஃபேஸ் மாஸ்க் எண்ணெய் சருமம் உள்ளவருக்கே சிறந்தது. வறண்ட சருமம் உள்ளவர்கள், இந்த ஃபேஸ் மாஸ்க் செய்தவுடன், ஃபேசியல் கிரீமை போட்டு சற்று நேரம் மசாஜ் செய்யவும்.

களிமண் ஃபேஸ் பேக் களிமண் ஃபேஸ் பேக் ஒரு அற்புதமான சுருக்கத்தை நீக்கும் பொருள். சிறிது களிமண்ணை எடுத்துக் கொண்டு அதில் சிறிது ரோஸ் வாட்டரை விட்டு, முகத்தில் தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவவும்.

சோளமாவு ஃபேஸ் பேக் 2-3 டேபிள் ஸ்பூன் சோளமாவை எடுத்துக் கொண்டு, அதில் தேன் மற்றும் பாலை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், முதலில் இருந்த முகத்திற்கும், இந்த ஃபேஸ் பேக் போட்ட பின் இருக்கும் முகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு காணலாம்.

ஆகவே இத்தகைய ஃபேஸ் பேக்கையெல்லாம் செய்து பாருங்கள், முகமானது சுருக்கம் இல்லாமல் இளமையோடு காணப்படும்.
25 wrinkle reducers 300

Related posts

சோப்பை பயன்படுத்தாமல் முகத்தை எப்படி சுத்தம் செய்யலாம்

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் மாம்பழ ஃபேஸ் பேக்

nathan

பெண்கள் முகத்தில் முடி வளர இந்த 5 விஷயம் தான் காரணம்..!!

nathan

ஹெர்பல் ஃபேஷியல் facial tips in tamil

nathan

சருமத்தை பளபளப்பாக்கும் பீட்ருட் ஃபேஸ் பேக்

nathan

எளிமையான வழி…முகப்பருக்களை சரிசெய்ய…

nathan

இதோ எளிய நிவாரணம்! என்ன செஞ்சாலும் இந்த பரு போகாம தொல்லை பண்ணுதா?

nathan

20 நிமிடத்தில் கருமை நீங்கி முகம் ஜொலிக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க.

nathan

சருமம் மிருதுவாக வெங்காயத்தை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika