31.5 C
Chennai
Saturday, Jul 12, 2025
06 3 henna olive fenugreek
தலைமுடி சிகிச்சை

உங்க இளநரையை போக்கும் ஹென்னா ஆயில் !

உடம்பில் அதிக அளவில் பித்தம் கூடினால் தலை நரைக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். இன்றைக்கு மாறிவரும் சூழ்நிலையால் 15 வயது முதலே தலை நரைக்கத் தொடங்கிவிடுகிறது. சமச்சீரற்ற உணவுமுறை, எண்ணெய் வைக்காமல் தலை சீவுவது, ரசாயனப்பொருட்கள் அடங்கிய ஷாம்பு, சோப்பு உபயோகிப்பது போன்றவைகளினாலும் தலைமுடி வெள்ளையாகிறது. இளநரையை போக்க நம் வீட்டிலேயே மருந்திருக்கு என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனையை படியுங்களேன்.

இன்றைக்கு 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களும்தான். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தும் அன்றாடம் தலைக்கு எண்ணெய் வைப்பதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு யாரும் இதனை பின்பற்றுவதில்லை

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். அதை சுத்தமான தேனுடன் சேர்த்து ஊறவைத்து தினசரி காலையில் அதை சாப்பிட்டு வர பித்தம் தணியும் இளநரை தானாகவே மாறும். தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்யவும். இதனால் இளநரை தானாகவே மாறும். கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும். பசு மோர் இளநரையை போக்கும் அருமருந்து. வாரம் இருமுறை மோர் தலைக்கு தேய்த்து குளிக்கலாம் உஷ்ணம் நீங்கும்.

தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் கறிவேப்பிலை போட்டு வேகவைக்கவும். இந்த எண்ணெயை தினசரி தலைக்கு தேய்த்து வரை கூந்தல் இயற்கை நிறத்திற்கு மாறும். முடி உதிர்வது கட்டுப்படும். உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது பித்தத்தை குறைக்கும். அதேபோல் முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

2 ஸ்பூன் ஹென்னா பவுடர், 1 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் வெந்தையப் பொடி, 3 ஸ்பூன் காபி, 2 ஸ்பூன் துளசி இலை சாறு, 3 ஸ்பூன் புதினா இலைச் சாறு கலந்து பேஸ்ட் போல கலக்கவும். அதை தலையில் அப்ளை செய்து மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் மைல்டு ஷாம்பு போட்டு அலசவும். இதனால் இளநரை படிப்படியாக நிறம் மாறும். தலையும் குளிர்ச்சியடையும்.

ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு கப் ப்ளாக் டீ கலந்து தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யவும். ஒரு மணிநேரம் ஊறவைத்து பின்னர் தலைக்கு குளிக்கவும். இதனால் இளநரை மாறி தலைமுடி படிப்படியாக கருமையாகும்.

இளநரையை போக்குவதில் வெங்காயம் சிறந்த மருந்தாகும். இது உதிர்ந்த இடங்களில் கூந்தலை நன்கு வளரச்செய்யும். ஒரு கிராம் கருப்பு மிளகு அரைக் கப் தயிர், சிறிதளவு லெமன் சாறு கலந்து தலைக்கு அப்ளை செய்யவும். இது இளநரையை மறையச்செய்யும்.

நெல்லிக்காய் பேஸ்ட், நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு பூசி வர இளநரை மறைவதோடு கூந்தல் திக்காக வளரும். மருதாணி இலையை நன்கு காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு பூசிவர கூந்தல் கருமையாகும்.

எலுமிச்சையானது கூந்தலை இயற்கை நிறத்திற்கு மாற்றும் சக்தி படைத்தது. எனவே எலுமிச்சை சாற்றை கூந்தலில் ஊறவைத்து பின்னர் நன்கு அலசினால் கூந்தல் படிப்படியாக கருமையாகும். நெல்லிக்காய் சாறு, பாதம் எண்ணெய், எலுமிச்சை சாறு மூன்றையும் நன்றாக கலந்து தலைக்கு பூசி ஊறவைத்து குளிக்க கூந்தல் கருமையாவதோடு பளபளப்பாகவும், அழகாகவும் மாறும்.
06 3 henna olive fenugreek

Related posts

இந்த மருதாணி தலையில் தடவி வந்தால் கூந்தலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்……..

nathan

தலைமுடி நன்கு வளர இதுவரை நீங்கள் முயற்சித்திராத சில வழிகள்!

nathan

கருமை நிறம் கொண்ட அடர்த்தியான அழகான முடியை பெற கற்பூரத்தை எப்படி பயன் படுத்த வேண்டும் தெரியுமா?

nathan

உங்கள் கூந்தலைக் காப்பாற்றும் சமையல் சோடா ஷாம்பூவை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

nathan

பிசுபிசுப்பான கூந்தலா? வீட்டிலேயே ட்ரை ஷாம்பு தயாரிக்கலாம்!

nathan

முடி உதிர்தல் பிரச்சனையா? முன் நெற்றியில் சொட்டையா? இத ட்ரை பண்ணுங்க!

nathan

இளநரையை போக்கும் மூலிகை தைலம்!!

nathan

இந்த சமையலறை பொருட்களை உங்க முகத்தில் தெரியாமகூட பயன்படுத்தாதீங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்…இவற்றை பேக் போட்டால் பொடுகுத் தொல்லை நீங்கி கூந்தல் நன்றாக வளரும்.

nathan