25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 vetiver 300
முகப்பரு

உங்களுக்கு தெரியுமா முகப்பருவை போக்கும் வெட்டிவேர் சிகிச்சை

ரோஜா பூப்போன்ற அழகான முகத்தில் பனித்துளியைப் போல பரு தோன்றுவது அழகை அதிகரித்துக் காட்டும். அதுவே கண்ணம், நெற்றி என முகத்தின் பல இடங்களிலும் பருக்கள் தோன்றினால் அதுவே அவஸ்தையாய் மாறிவிடும். முகப்பருவை போக்கும் கிரீம்கள் என சந்தையில் ரசாயனங்கள் அடங்கிய பல கிரீம்கள் வந்துள்ளன. அவற்றை விட இயற்கையில் கிடைக்கும் வாசனை நிறைந்த வெட்டி வேர் முகப்பரு போக்கும் மருந்தாக செயல்படுகிறது. வேட்டி வேரின் சிகிச்சையை தெரிந்து கொள்ளுங்களேன்.

வெட்டிவேரினை சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் முதல்நாள் இரவே கொதிக்கும் நீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் நன்றாக மைய அரைத்து அந்த விழுதினை பருக்கள் மீது மறைப்பதுபோல பூசவும். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது.

பருக்கள் வந்து காய்ந்தாலும் ஒரு சிலருக்கு தழும்புகள் மட்டும் போகாது. இதனாலேயே முகம் கரடு முரடாக மாறிவிடும். அந்த தழும்புகள் மறைய ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

கோடை காலமோ, குளிர்காலமோ ஒரு சிலருக்கு எப்போது பார்த்தாலும் வியர்த்து, எண்ணெய் வழியும். இதனால் பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு வாசனையான பேக் போடலாம். வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை.. இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.

வெட்டிவேர் முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.

தலைக்கும் முகத்திற்கும் என்ன போட்டு குளித்தாலும் சிறிது நேரத்தில் முகம் டல்லாகிவிடும். இவர்கள் வாரம் இருமுறை தலைக் குளிக்க வெட்டிவேர் பவுடரை உபயோகிக்கலாம். உடனடியாக வித்தியாசம் தெரியும்.

வெட்டிவேர் – 100 கிராம், வெந்தயம் – 100 கிராம் சேர்த்து இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள். கூந்தல் வாசனையாக இருக்கும். தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தலின் நறுமணத்திற்கு எல்லோருமே மயங்குவார்கள்.

சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும். சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். பச்சைப்பயறு – 100 கிராம் சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் – 50 கிராம் சேர்த்து நன்றாக அரைத்து பவுடாக்கவும். இதனை குளிக்கும் போது உடலுக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் இந்த பவுடரை உபயோகித்து குளித்து வர சிறு கட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.22 vetiver 300

 

 

Related posts

beauty tips .. முகப்பரு தழும்புகள் நீக்கும் முறைகள்

nathan

முகப் பரு – கரும் புள்ளி -தழும்புகள் நீங்க

nathan

சாமந்தி பூ ஃபேஸ் பேக்

nathan

மருக்கள் மறைய முகம் பொழிவு பெற சூப்பர் டிப்ஸ்

nathan

முகப்பருவை கட்டுப்படுத்தும் வேம்பு

nathan

அழகை கெடுக்கும் முகப்பரு வராமல் தடுக்க‍, வந்த முகப்பருவை முற்றிலுமாக நீக்க . . . எளிய அழகு குறிப்பு

nathan

இந்த முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு….

sangika

பரு ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிகம் வருகிறது? இதையெல்லாம் நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

nathan

பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை

nathan